மும்பை பங்குச்சந்தை 5 நாட்களாகத் தொடர்ந்து உயர்வைச் சந்தித்து வந்த நிலையில் இன்றைய வர்த்தகத்தில் சில்லறை முதலீட்டாளர்கள் அதிகளவிலான பங்குகளை லாப நோக்கத்திற்காக விற்பனை செய்தனர்.
நாளை ஜனவரி மாதத்திற்கான ஆர்டர்கள் முடியும் நிலையில் முதலீட்டாளர்கள் இன்று பங்குச்சந்தையில் குறைவான அளவிலேயே முதலீடு செய்துள்ளனர்.

இந்நிலையில் இன்றைய வர்த்தக முடிவில் மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் குறியீடு வெறும் 16 புள்ளிகள் மட்டுமே உயர்ந்து 36,161.64 புள்ளிகளை அடைந்துள்ளது.
மேலும் நிஃப்டி குறியீடு புதன்கிழமை வர்த்தக முடிவில் 2.30 புள்ளிகள் சரிந்து 11,086.00 புள்ளிகளை எட்டி இன்றைய வர்த்தகம் முடிவிற்கு வந்தது.
இன்றைய வர்த்தகத்தில் மும்பை பங்குச்சந்தையில் டாப் 30 நிறுவனங்கள் பட்டியலில் எஸ்பிஐ, அதானி போர்ட்ஸ், டிசிஎஸ், டாக்டர் ரெட்டி, சன் பார்மா ஆகியவை அதிகளவிலான உயர்வைச் சந்தித்தது. பார்தி ஏர்டெல் நிறுவனம் இன்றைய வர்த்தகத்தில் அதிகப்படியாக 6.93 சதவீதம் வரையில் சரிந்தது.


Click it and Unblock the Notifications