இந்திய சந்தையில் பட்ஜெட் அறிக்கையில் தாக்கல் செய்யப்படுவதற்கு முன்பில் இருந்து உயர்வான நிலையிலேயே இருந்த பங்குச்சந்தைகள், தாக்கல் செய்யப்பட்ட அடுத்த 2 நாட்களில் இயல்பான வர்த்தகத்திற்குக் குறைந்தது.
மும்பை: இந்திய சந்தையில் பட்ஜெட் அறிக்கையில் தாக்கல் செய்யப்படுவதற்கு முன்பில் இருந்து உயர்வான நிலையிலேயே இருந்த பங்குச்சந்தைகள், தாக்கல் செய்யப்பட்ட அடுத்த 2 நாட்களில் இயல்பான வர்த்தகத்திற்குக் குறைந்தது.
சந்தையில் பட்ஜெட் தாக்கம் முடிந்த பின் ரிசர்வ் வங்கியின் நாணய கொள்கையில் மாற்றங்கள் இல்லாத காரணத்தால் வர்த்தகச் சந்தை மிகப்பெரிய ஏமாற்றம் அடைந்தனர்.

இந்நிலையில் இன்று மாலை வெளியாகும் டிசம்பர் மாதத்திற்கான தொழிற்துறை உற்பத்தி தகவல்கள் எதிர்நோக்கிய முதலீட்டாளர்கள் மிகவும் குறைவான அளவிலேயே முதலீடு செய்தனர். இந்நிலையில் இன்றைய வர்த்தகத்தில் சென்செக்ஸ் வெறும் 60 புள்ளிகள் வரை மட்டுமே உயர்ந்தது.
வெள்ளிக்கிழமை வர்த்தக முடிவில் மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் குறியீடு வெறும் 4.55 புள்ளிகள் உயர்ந்து 28,334.25 புள்ளிகள் அடைந்தது, நிஃப்டி குறியீடு 15.15 புள்ளிகள் உயர்ந்து 8,793.55 புள்ளிகளை அடைந்து இந்த வாரத்தின் வர்த்தகம் முடிவடைந்துள்ளது.


Click it and Unblock the Notifications