சென்செக்ஸ் 1000 புள்ளிகள் சரிவு.. 3 நாளில் ரூ.18 லட்சம் கோடி இழப்பு..!!

இந்திய பங்குச் சந்தை தொடர்ந்து மூன்றாவது நாளாக கடுமையான சரிவை சந்தித்தது வருகிறது. புவிசார் அரசியல் மற்றும் பொருளாதார பதற்றங்கள் முதலீட்டாளர் நம்பிக்கையை பெரிதும் பாதித்து வரும் காரணத்தால் உள்நாட்டு முதலீட்டாளர்கள் முதல் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் வரையில் இந்திய பங்குச்சந்தையில் பங்குகளை விற்பனை செய்து வருகின்றனர்.

இதன் எதிரொலியாக மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் குறியீடு இன்று மதியம் 11.15 மணியளவில் 1,065 புள்ளிகளை சரிந்து 82,180-ஆக உள்ளது. இதுவே நிஃப்டி 50 குறியீடு 353 புள்ளிகளை இழந்து 25,232-ஆக குறைந்ததுள்ளது.

சென்செக்ஸ் 1000 புள்ளிகள் சரிவு.. 3 நாளில் ரூ.18 லட்சம் கோடி இழப்பு..!!

மேலும் கடந்த மூன்று நாட்களில் பதிவான தொடர் சரிவு மூலம் சென்செக்ஸ் 2,400 புள்ளிகளுக்கும் மேலும், நிப்டி 3% அளவும் சரிந்துள்ளது. இதன் மூலம் மும்பை பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்ட நிறுவனங்களின் மொத்த சந்தை மதிப்பு ரூ.468 லட்சம் கோடியிலிருந்து ரூ.450 லட்சம் கோடிக்கு கீழே சென்றது. இதனால் முதலீட்டாளர்கள் 3 நாளில் 18 லட்சம் கோடி ரூபாய் அளவிலான சந்தை மதிப்பை இழந்துள்ளனர்.

இன்றைய வர்த்தகத்தில் ஐடி பங்குகள் மிகப்பெரிய சரிவை சந்தித்தன. நிப்டி ஐடி குறியீடு 2.1% குறைந்தது. மிட்கேப் மற்றும் ஸ்மால்கேப் குறியீடுகள் 2% வீதம் சரிந்தன. விப்ரோ, LTIMindtree போன்ற பங்குகள் கடும் வீழ்ச்சியை சந்தித்தன.

உலகளாவிய வர்த்தக பதற்றம் முக்கிய காரணமாக உள்ளது. கிரீன்லாந்து நாட்டை கைப்பற்றும் முயற்சியில், டிரம்ப் 8 ஐரோப்பிய நாடுகளுக்கு பிப்ரவரி 1 முதல் 10% வரி விதிப்பதாக அறிவித்தார். ஜூன் முதல் 25% ஆக உயரும் என்றும் கூறியுள்ளார். கிரீன்லாந்து தொடர்பான இந்த அச்சுறுத்தல் ஐரோப்பிய நாடுகளை பதிலடி கொடுக்க தயார்படுத்தியுள்ளது. இது உலக பொருளாதார வளர்ச்சியை பாதிக்கும் என்ற அச்சம் முதலீட்டாளர்களை பாதித்தது.

இத்தகைய இக்கட்டான சூழ்நிலையில் இந்திய ரூபாய் மதிப்பும் வரலாற்று குறைந்த அளவை எட்டியது. ஒரு டாலருக்கு ரூ.91.34-ஆக ஆறாவது நாளாக சரிந்தது. இது வெளிநாட்டு முதலீட்டு நிறுவனங்கள் தொடர்ந்து பங்குகளை விற்க தூண்டி வருகிறது.

பங்குச்சந்தை, கிரிப்டோ, என எதுவும் கைகொடுக்காத நிலையில் முதலீட்டாளர்கள் பாதுகாப்பான சொத்துகளுக்கு திரும்பியுள்ளனர். இதன் எதிரொலியாக தங்கம் இந்திய சந்தையில் மட்டும் அல்லாமல் சர்வதேச சந்தையிலும் பெரிய அளவிலான உயர்வை பதிவு செய்துள்ளது.

சர்வதேச ஸ்பாட் சந்தையில் ஒரு டிராய் அவுன்ஸ் தங்கம் விலை 4878.30 டாலர் வரையில் உயர்ந்துள்ளது. ரீடைல் சந்தையில் 1 கிராம் தங்கம் விலை 15,546 ரூபாயாக உயர்ந்துள்ளது, வெள்ளி விலை அதன் சாதனை உச்ச அளவான 3,40,000 ரூபாய் அளவீட்டை தக்கவைத்துள்ளது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+