டிரம்ப் இறக்குமதி செய்யப்படும் ஸ்டீல் மற்றும் அலூமினியம் மீது விதித்துள்ள டாரிப்பால் பங்கு சந்தை சரிவு!
இந்திய பங்கு சந்தை வெள்ளிக்கிழமை காலை மிக மோசமான துவக்கத்துடன் ஆரம்பித்துள்ளது. காலை 9:41 மணி நிலவரத்தின் படி மும்பை பங்கு சந்தைக் குறியீடான சென்செக்ஸ் 401.95 புள்ளிகள் என 1.25 சதவீதம் சரிந்து 32,589 புள்ளிகளாக வர்த்தகம் செய்யப்பட்டு வருகிறது. அதே நேரம் தேசிய பங்குச் சந்தையான நிப்டி 139.35 புள்ளிகள் என 1.35 சதவீதம் சரிந்து 9,975.40 புள்ளிகளாக வர்த்தகம் செய்யப்பட்டு வருகிறது.
டிரம்ப்
அமரிக்க அதிபர் டிரம்ப் வர்த்தக போரின் ஒரு கட்டமாக வியாழக்கிழமை சீன பொருட்கள் 60 பில்லியன் டாலருக்கு அதிகமாக இருக்கிறது என்றும் அதன் மீது புதிய கட்டணத்தினை விதிக்கப் புரிந்துணர்வு ஒப்பந்தம் போட கையெழுத்திட்டுள்ளார்.
மெட்டல் நிறுவன பங்குகள் சரிவு
இந்திய சந்தையில் மிட்கேப் மற்றும் ஸ்மால் கேப் பங்குகள் மிகப் பெரிய அளவில் சரிந்துள்ளது. அதிலும் டாடா ஸ்டீல், வேதாந்தா மற்றும் இஙல்கோ போன்ற ஸ்டீல் நிறுவனப் பங்குகள் 3 சதவீதத்திற்கும் அதிகமாகச் சரிவை சந்தித்துள்ளன.
முதலீடுகள்
பங்கு சந்தை மோசமான நிலையில் உள்ளதால் வல்லுநர்கள் தற்போதைக்கு முதலீடுகளை தவிர்க்குமாறும் எச்சரித்துள்ளனர்.
யூனியன் வங்கி மோசடி
யூனியன் பேங்க் ஆஃப் இந்தியா வங்கி உள்பட 8 வங்கிகளில் கடன் வாங்கி ரூ.1,394 கோடி முறைகேடு செய்ததாக ஹைதராபாத்தை சேர்ந்த தனியார் கட்டுமான நிறுவனம் மீது சிபிஐ வழக்கு பதிவு செய்துள்ளது. இதனால் வங்கி நிறுவன பங்குகளும் சரிவை சந்தித்துள்ளன.
மாநிலங்களவை
மாநிலங்களவையில் இன்று எம்.பி பதவிகளுக்கான தேர்தல் நடைபெற உள்ளதாலும் இந்தியா மீதும் அமெரிக்கா வர்த்தக போரினை தொடுத்து வருவதாலும் இந்திய பங்கு சந்தை குறியீடுகளில் மிகப் பெரிய தாக்கத்தினை ஏற்படுத்தியுள்ளது.
டிரேடிங் கூட்டணி
இந்தியா அமெரிக்காவின் 9-ம் மிகப் பெரிய டிரேடிங் கூட்டணி நாடாக உள்ளது. இதன் மூலம் அமெரிக்காவில் அதிகம் ஏற்றுமதி செய்வது மட்டும் இல்லாமல் அங்கு இருந்து இறக்குமதியும் செய்யும். சென்ற ஆண்டு அமெரிக்காவிற்கு இந்தியாவில் இருந்து கிட்டத்தட்ட 49 பில்லியன் டாலர் மதிப்பிலான பொருட்கள் ஏற்றுமதி செய்ததாகவும் அதே நேரம் அங்கு இருந்து 26 பில்லியன் டாலர் பொருட்களை இறக்குமதி செய்ததாகவும் அமெரிக்க டிரேட் ஸ்டாஸ்டிக்ஸ் தரவுகள் கூறுகின்றன.
மோடி
சென்ற மாதம் டிரம்ப் மோடியை "அழகான" மற்றும் "அற்புதமான" மனிதர் என்றார். ஆனால் இந்தியா உடனான வர்த்தக உறவால் எங்களுக்கு எந்தப் பயனும் இல்லை என்றும் டிரம்ப் குறிப்பிட்டார்.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!



Click it and Unblock the Notifications