மும்பை பங்குச்சந்தையின் சென்சென்ஸ் குறியீடு 4 நாட்கள் தொடர்ந்து வளர்ச்சிப் பாதையில் இருந்து வந்த நிலையில் இன்று முற்றுப்புள்ளி வைத்துள்ளது. இன்றைய வர்த்தகம் துவங்கும் போத 400 புள்ளிகள் சரிவுடன் வர்த்தகத்தைத் துவங்கி முதலீட்டாளர்களுக்கு அதிர்ச்சியை அளித்தது.
இன்றைய சரிவுக்கு மிக முக்கியமான காரணமாக அமைந்திருப்பது ஆசியச் சந்தையில் ஏற்பட்டு உள்ள வீழ்ச்சியும், திங்கட்கிழமை வர்த்தகத்தில் அமெரிக்கச் சந்தையில் பதிவான சரிவும் தான்.
சென்செக்ஸ், நிஃப்டி குறியீடு
மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் குறியீடு நேற்றைய வர்த்தகம் நிறைவடையும் போது 49,502.41 புள்ளிகளை அடைந்த நிலையில், இன்று வர்த்தகம் துவங்கும் போது சுமார் 440 புள்ளிகள் சரிவுடன் 49,066.45 புள்ளிகளில் வர்த்தகம் துவங்கியது.
தொடர்ந்து தடுமாற்றங்கள் உடன் வர்த்தகமாகி வரும் சென்செக்ஸ் குறியீடு 48,988.18 புள்ளிகள் வரையில் சரிந்துள்ளது. இதேபோல் நிஃப்டி குறியீடு 180 புள்ளிகள் வரையில் சரிந்து 14,771.40 புள்ளிகள் வரையில் வீழ்ச்சி அடைந்துள்ளது.
ஆசிய சந்தை வீழ்ச்சி
இன்று காலை வர்த்தகம் துவங்கும் போதே ஆசிய சந்தை சரிவுடன் துவங்கியதன் எதிரொலி இந்தியச் சந்தையைப் பாதித்துள்ளது. தைவான் 3.36 சதவீதம், ஜப்பான் 3 சதவீதம், ஆஸ்திரேலியா 1.25 சதவீதம், ஹாங்காங் மற்றும் சீனா 0.27 சதவீதம் என ஆசிய சந்தை கடுமையான பாதிப்பை எதிர்கொண்டு உள்ளது.
Array
இதேபோல் திங்கட்கிழமை வர்த்தகத்தில் வட மற்றும் தென் அமெரிக்கச் சந்தையில் பெருமளவிலான பாதிப்புகள் உருவாகியுள்ளது என்றால் மிகையில்லை. குறிப்பாக அமெரிக்காவின் டாவ் ஜோன்ஸ் 0.71 சதவீதமும், எஸ் அண்ட் பி 500 குறியீடு 0.06 சதவீதமும் சரிந்த காரணத்தால் தான் ஆசிய சந்தை வீழ்ச்சி அடைந்துள்ளது.
அமெரிக்கப் பங்குச்சந்தைகள்
அமெரிக்காவின் பெடரல் ரிசர்வ் தனது வட்டி விகிதத்தை அடுத்த சில காலாண்டுகளுக்கு உயர்த்தாது எனக் கூறிய காரணத்தால் டாவ் ஜோன்ஸ் புதிய உச்சத்தை அடைந்தது. ஆனால் இதேவேளையில் S&P500 குறியீட்டில் முதலீட்டாளர்கள் டெக் பங்குகளை அதிகளவில் விற்பனை செய்து விட்டு எனர்ஜி மற்றும் மெட்டிரியல் பங்குகளில் முதலீடு செய்யத் துவங்கியுள்ளனர்.
கச்சா எண்ணெய் பைப்லைன் நிறுவனம்
முதலீட்டாளர்கள் எனர்ஜி மற்றும் மெட்டிரியல் பங்குகளில் அதிகம் முதலீடு செய்யக் காரணம், அமெரிக்காவின் முன்னணி கச்சா எண்ணெய் பைப்லைன் நிறுவனம் சைபர் அட்டாக்-கிற்குப் பின் மீண்டும் தனது பணிகளைத் துவங்க உள்ளதாக அறிவித்த காரணத்தால் WTI கச்சா எண்ணெய் விலையும் உயர துவங்கியது.
அமெரிக்கா மற்றும் ஆசிய சந்தை
அமெரிக்கா மற்றும் ஆசிய சந்தையில் ஏற்பட்டு உள்ள வீழ்ச்சி இந்திய சந்தைகளை மிகப்பெரிய அளவில் பாதித்துள்ளது என்றால் மிகையில்லை. இதன் வாயிலாகவே இன்று 430 புள்ளிகள் சரிவில் துவங்கி 380 புள்ளிகள் சரிவில் தடுமாறிக் கொண்டு வருகிறது சென்செக்ஸ்.
டாப் 30 நிறுவனங்கள்
மேலும் சென்செக்ஸ் குறியீட்டின் டாப் 30 நிறுவனங்கள் பட்டியலில் ஹெச்டிஎப்சி, கோட்டார் வங்கி ஆகிய இரு நிறுவனங்களும் 2.2 சதவீதத்திற்கும் அதிகமான சரிவை பதிவு செய்துள்ளது. இதைத் தொடர்ந்து டெக் மஹிந்திரா, பஜாஜ் பைனான்ஸ், மாருதி, டைட்டன், டிசிஎஸ், ஐசிஐசிஐ வங்கி, எல் அண்ட் டி ஆகியவை 1 சதவீதத்திற்கும் அதிகமான சரிவைப் பதிவு செய்துள்ளது.
More From GoodReturns

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

தங்கம் 'பெரிய மாற்றம்' வரபோகுது, ஆனந்த் ஸ்ரீனிவாசன் சொன்ன அந்த ஒரு விஷயம்! அதிர்ச்சியில் மிடில்கிளாஸ் மக்கள்!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்!! கணக்கு போட்டுட்டாங்க அக்கவுண்ட்டை தேடி வரும் பணம்!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

தமிழ்நாட்டில் மதுபானம் விற்கப்போகும் அனிருத்.. பெங்களூர்-க்கு அடுத்து சென்னை தான்..!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

ஈரான்-ஐ பிடிக்க பணத்தை மலை மலையாய் குவிக்கும் டிரம்ப்.. 24 மணிநேரத்தில் எவ்வளவு செலவானது தெரியுமா..?

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!



Click it and Unblock the Notifications