மும்பை பங்குச்சந்தை வார விடுமுறையைத் தொடர்ந்து ஹோலி பண்டிகை காரணமாகத் திங்கட்கிழமை விடுமுறை அளிக்கப்பட்டதைத் தொடர்ந்து 3 நாட்களுக்குப் பின் இன்று வர்த்தகம் துவங்கியுள்ளது.
சர்வதேச சந்தையில் ஏற்பட்டு உள்ள சாதகமான சூழ்நிலையில், டாலர் மதிப்பில் ஏற்பட்டு உள்ள உயர்வு , 3 நாள் விடுமுறை, கச்சா எண்ணெய் சந்தையில் ஏற்பட்டு உள்ள சரிவு ஆகியவற்றின் காரணமாக இன்று மும்பை பங்குச்சந்தை அதிகளவிலான முதலீட்டைப் பெற்றது.
இதன் எதிரொலியாக இன்று வர்த்தக முடிவில் மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் குறியீடு சுமார் 1250 புள்ளிகள் வரையில் உயர்ந்து பங்குச்சந்தை முதலீட்டாளர்களை ஆனந்தத்தில் ஆழ்த்தியுள்ளது.
மும்பை பங்குச்சந்தை
மும்பை பங்குச்சந்தை கடந்த சில நாட்களாக மந்தமான வர்த்தகத்தைப் பதிவு செய்து வரும் வேளையில் 50000 புள்ளிகளைத் தாண்டி கூட முடியாமல் தடுமாறி வந்தது. இன்றைய வர்த்தகத்தில் ஏற்பட்டு உள்ள அதிரடி வளர்ச்சி மூலம் செவ்வாய்க்கிழமை வர்த்தக முடிவில் சென்செக்ஸ் குறியீடு 50,000 புள்ளிகளைத் தாண்டி வர்த்தகம் நிறைவடைந்துள்ளது.
சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி குறியீடு
இந்நிலையில் இன்றைய வர்த்தக முடிவில் மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் குறியீடு 1,128.08 புள்ளிகள் உயர்ந்து 50,139.58 புள்ளிகளைத் தொட்டு நிறைவடைந்தது. இதேபோல் நிஃப்டி குறியீடு வர்த்தக முடிவில் 337.80 புள்ளிகள் அடைந்து 14,845.10 புள்ளிகளை அடைந்து வர்த்தகம் நிறைவடைந்துள்ளது.
ஐடி நிறுவனங்கள் அதிரடி
இன்றைய வர்த்தகத்தில் ஐடி நிறுவனப் பங்குகள் அதிகப்படியான முதலீட்டைப் பெற்றுள்ளது. ஏப்ரல் மாதம் துவக்கத்திலேயே நாட்டின் முன்னணி ஐடி நிறுவனங்கள் தங்களது மார்ச் காலாண்டு மற்றும் வருடாந்திர அறிக்கையில் தாக்கல் செய்ய உள்ளதால் முதலீட்டாளர்கள் மத்தியில் ஐடி நிறுவனங்கள் அதிகளவில் ஈர்த்துள்ளது.
இன்போசிஸ், ஹெச்சிஎல், டிசிஎஸ் அதிரடி உயர்வு
சென்செக்ஸ் குறியீட்டின் டாப் 30 நிறுவனங்கள் பட்டியலில் இன்போசிஸ் 3.69 சதவீதமும், டிசிஎஸ் 2.99 சதவீதமும், ஹெச்சிஎல் 3.91 சதவீதமும், டெக் மஹிந்திரா 2.50 சதவீதம் என அதிகப்படியான வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது.
அமெரிக்கப் பத்திர சந்தை
மேலும் அமெரிக்கப் பத்திர முதலீடு சந்தையில் கிடைக்கும் லாப அளவீடுகள் மந்தம் அடைந்துள்ள காரணத்தாலும், டாலர் மதிப்பு அதிகரித்துள்ளதாலும் இன்று அதிகப்படியான அன்னிய முதலீடுகள் இந்தியச் சந்தையில் குவிந்துள்ளது. முக்கியமாக வங்கித்துறையில் குவிந்துள்ள காரணத்தால் இத்துறை பங்குகள் அதிகளவிலான வளர்ச்சியை அடைந்துள்ளது.
3.5 லட்சம் கோடி ரூபாய்
இன்றைய அதிரடி வளர்ச்சி மூலம் இந்திய சந்தையில் முதலீடு செய்துள்ள முதலீட்டாளர்களின் முதலீட்டு மதிப்பு சுமார் 3.5 லட்சம் கோடி ரூபாய் அதிகரித்துள்ளது. இந்தச் சாதகமான வர்த்தக வாய்ப்பு அடுத்த சில நாட்களுக்குத் தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
More From GoodReturns

இன்று பங்குச் சந்தைக்கு விடுமுறை! புனித வெள்ளி NSE, BSE ,MCX இயங்குமா? முழு விபரம்!

TCS நிறுவனத்திற்கு பெரிய கும்பிடு போட்டு வெளியேறும் ஊழியர்கள்!! என்ன நடக்குது?

கேஸ் இணைப்பே வேண்டாம் என முடிவெடுக்கும் மக்கள்: LPG பிரச்சினைக்கு மத்தியில் ஏற்பட்டுள்ள மேஜர் மாற்றம்

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?

சம்பள கமிஷனுக்கு முன்பாகவே அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு: அதுவும் ஏப்ரல் மாதத்திலேயே வர போகுது!!

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

தங்கம் விலை ரூ.2 லட்சத்தை நெருங்குமா?பீட்டர் ஷிஃப் கொடுத்த மெகா வார்னிங்! ஏப்ரலில் எகிற போகுது?

FASTag விதிகளில் மாற்றம்: புதிதாக கொண்டு வரப்பட்ட 72 மணி நேர விதி..!! வாகன ஓட்டிகளே உஷார்..!!

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!

வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு: ரெப்போ வட்டியில் மாற்றமா?



Click it and Unblock the Notifications