இத்தாலி நாட்டின் நிலவிய அரசியல் பிரச்சனைகள் சீரடைந்து வரும் நிலையில், மும்பை பங்குச்சந்தையில் இன்று அன்னிய முதலீட்டின் அளவு சற்று அதிகமாக இருந்தது. இதுமட்டும் அல்லாமல் இன்று மே மாத ஆர்டர்கள் முடியும் நிலையில் வர்த்தக முடிவில் சென்செக்ஸ் அதிகளவிலான உயர்வை அடைந்தது.
இன்று உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு முதலீட்டாளர்களின் முதலீடு அதிகமாக இருந்த காரணத்தால் காலை வர்த்தகத் துவக்கத்தில் சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி குறியீடு உயர்வுடன் துவங்கியது.

வர்த்தக முடிவில் மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் குறியீடு 416.27 புள்ளிகள் உயர்ந்து 35,322.38 புள்ளிகளை அடைந்தது, அதேபோல் நிஃப்டி குறியீடு 121.80 புள்ளிகள் உயர்வில் 10,736.15 புள்ளிகளை எட்டி இன்றைய வர்த்தகம் முடிவடைந்தது.
மும்பை பங்குச்சந்தையின் டாப் 30 நிறுவனங்களில் இன்று அதானி போர்ட்ஸ், எச்டிஎப்சி வங்கி ஆகியவை 4 சதவீதத்திற்கும் அதிகமான வளர்ச்சியை அடைந்திருந்தது, இதேபோல் இண்டஸ்இந்த் வங்கி, மஹிந்திரா ஆகியவை 3 சதவீதத்திற்கும் அதிகமாகவும், ஹிந்துஸ்தான் யூனிலீவர், கோட்டாக் வங்கி ஆகியவை 2 சதவீதத்திற்கும் அதிகமாகவும் உயர்ந்தது.
மேலும் டிசிஎஸ், மாருதி, டாக்டர் ரெட்டி, ஹீரோமோட்டோ கார்ப், டாடா மோட்டார்ஸ், சன் பார்மா ஆகியவை சரிவை சந்தித்தது.
More From GoodReturns

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

சம்பள கமிஷனுக்கு முன்பாகவே அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு: அதுவும் ஏப்ரல் மாதத்திலேயே வர போகுது!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

FASTag விதிகளில் மாற்றம்: புதிதாக கொண்டு வரப்பட்ட 72 மணி நேர விதி..!! வாகன ஓட்டிகளே உஷார்..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

தங்கம் தந்த டபுள் சர்ப்பிரைஸ்: ஈரான் போரால் நடக்கும் ஒரே நன்மை..!! இனி ஒவ்வொரு நாளும் முக்கியம்..!!

குறைந்த உதயநிதி ஸ்டாலின் சொத்து மதிப்பு! பல மடங்கு எகிறிய கிருத்திகாவின் சொத்து - பின்னணி என்ன?

அட்சய திருதியைக்கு தங்கம் வாங்குற பிளான் இருக்கா? இப்படி செஞ்சா குறைஞ்ச விலைக்கு தங்கம் கிடைக்கும்

90ஸ் கிட்ஸ்களின் Gmail பிரச்சினைக்கு தீர்வு தந்த சுந்தர் பிச்சை: பழைய ஐடி-க்கு குட்பை..!!

தங்கம் விலை ரூ.2 லட்சத்தை நெருங்குமா?பீட்டர் ஷிஃப் கொடுத்த மெகா வார்னிங்! ஏப்ரலில் எகிற போகுது?



Click it and Unblock the Notifications