வியாழக்கிழமை நடந்து முடிந்த ரிசர்வ் வங்கியின் நடப்பு நிதியாண்டின் முதல் இரு மாத கொள்கையில் நாட்டின் பணவீக்கம் கட்டுப்பாட்டில் இருக்கும் காரணத்தாலும், உணவுப் பொருட்கள் மீதான பணவீக்கத்தைத் தொடர்ந்து குறைவாகவே வைத்திருக்கத் திட்டமிட்டுள்ள ரிசர்வ் வங்கி வட்டி விகித்தில் எவ்விதமான மாற்றமும் அறிவிக்கவில்லை.
இதனால் முதலீட்டாளர்கள் இன்று சீனா-அமெரிக்கப் பிரச்சனைகளைத் தாண்டி மும்பை பங்குச்சந்தையில் அதிகமான முதலீட்டைச் செய்துள்ளனர்.
மும்பை பங்குச்சந்தை
கடந்த சில நாட்களாகவே ரிசர்வ் வங்கியின் நாணய கொள்கையில் வட்டி விகிதம் இருக்காது எனக் கணிக்கப்பட்டு வந்த நிலையில், காலை முதலே அதிகளவிலான முதலீடு இந்திய சந்தையில் குவிந்தது.
ரிசர்வ் வங்கியின் இன்றை முடிவுகளும் கணிப்பை போலேவே சாதகமாக இருந்த காரணத்தால் சென்செக்ஸ் சுமார் 600 புள்ளிகள் வரையில் உயர்ந்தது.
ஐரோப்பிய சந்தை
ஐரோப்பிய சந்தை துவக்கத்திற்குச் சரியான நேரத்தில் ரிசர்வ் வங்கி முடிவுகள் வெளியிடப்பட்ட நிலையில் சென்செக்ஸ் தொடர்ந்து உயர முக்கிய உந்து சக்தியாக இருந்தது.
சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி
இன்றைய வர்த்தக முடிவில் மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் குறியீடு 577.73 புள்ளிகள் உயர்ந்து 33,596.80 புள்ளிகளை அடைந்தது, அதேபோல் நிஃப்டி குறியீடு 196.75 புள்ளிகள் உயர்ந்து 10,325.15 புள்ளிகளை அடைந்தது.
முக்கிய நிறுவனங்கள்
மும்பை பங்குச்சந்தையில் டாப் 30 முன்னணி நிறுவனங்கள் பட்டியலில் எஸ்பிஐ 4.66 சதவீதம் என்ற அதிகப்படியான வளர்ச்சியை அடைந்திருந்தது. டாடா ஸ்டீல், ஐசிஐசிஐ வங்கி, கோட்டாக் வங்கி, ஹீரோமோட்டோ கார்ப் ஆகிய நிறுவனங்கள் 3 சதவீதத்திற்கும் அதிகமான வளர்ச்சியை அடைந்துள்ளது.
More From GoodReturns

TCS நிறுவனத்திற்கு பெரிய கும்பிடு போட்டு வெளியேறும் ஊழியர்கள்!! என்ன நடக்குது?

கேஸ் இணைப்பே வேண்டாம் என முடிவெடுக்கும் மக்கள்: LPG பிரச்சினைக்கு மத்தியில் ஏற்பட்டுள்ள மேஜர் மாற்றம்

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?

வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு: ரெப்போ வட்டியில் மாற்றமா?

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

HDFC வங்கி பங்கை வச்சிருக்கீங்களா? கொஞ்சம் எச்சரிக்கையா இருங்க?

தங்கம் விலை உச்சத்தில் இருந்து 17% வீழ்ச்சி! அமெரிக்கா கொடுத்த ஷாக் - இப்போ நகை வாங்கலாமா?

உண்மையில் யார் ஜெயிச்சது? ஈரான் வியூகமா? அமெரிக்காவின் வெற்றியா? இந்தியாவுக்கு நிம்மதி எப்போது?

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!



Click it and Unblock the Notifications