இந்திய பங்குச் சந்தை குறியீடுகளான சென்செக்ஸ் மற்றும் நிப்டி இரண்டும் ஆர்பிஐ-ன் நாணய கொள்கை அறிவிப்பிற்குப் பிறகு 0.35 சதவீதம் வரை உயர்வைச் சந்தித்தன.
வங்கிக் கடன் வட்டி விகிதங்களில் மாற்றமில்லை என்று ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. இதில் வங்கிகள் பெறும் குறுகிய காலக் கடன்வட்டி (ரெப்போ) 6.25 சதவீதமாகவே நீடிக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிஎஸ்ஈ
இன்றைய வர்த்தக நேர முடிவில் மும்பை பங்குச் சந்தை குறியீடான சென்செக்ஸ் 0.26 சதவீதம் அதாவது 80.72 புள்ளிகள் உயர்ந்து 31,271.28 புள்ளிகளாக இருந்தது.
என்எஸ்ஈ
தேசிய பங்கு சந்தைக் குறியீடான நிப்டி 0.28 சதவீதம் அதாவது 26.75 சதவீதம் அதிகரித்து 9,663.90 புள்ளிகளாக வர்த்தகம் செய்யப்பட்டது. மேலும் இன்று அதிகப் பட்சமாக 9,700 புள்ளிகள் வரை உச்சத்தைத் தொட்டுப் பார்த்தது.
லாபம் அளித்த நிறுவனங்கள்
ஐஐஎபெல் ஹோல்டின்ஸ் நிறுவனம் இன்று 10.20 சதவீதமும், காட்லியா ஹெல்த்கேர் 9.55 சதவீதமும், எடவிஸ் ஃபினான்ஷியல் சர்வீசஸ் 6.26 சதவீதமும், ஸ்ரீராம் சிட்டி யூனியன் ஃபினான்ஸ் நிறுவனம் 5.19 சதவீதமும், இந்தியா புல்ஸ் ரியல் எஸ்டேட் நிறுவனம் பங்குகள் 4.11 சதவீதம் வரை உயர்வை அளித்துள்ளன.
நட்டம் அடைந்த நிறுவனப் பங்குகள்
ஹெக்சாவேர் நிறுவனப் பங்குகள் 5.22 சதவீதமும், அதானி டிரான்ஸ்மிஷன் லிமிடட் நிறுவனப் பங்குகள் 5.00 சதவீதமும், வீடியோகான் இண்டஸ்டரிஸ் நிறுவனப் பங்குகள் 4.96 சதவீதமும், ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனப் பங்குகள் 3.73 சதவீதமும், யுனைடெட் ஸ்பிரிட்ஸ் நிறுவனப் பங்குகள் 3.21 சதவீதமும் சரிவை சந்தித்துள்ளன.
More From GoodReturns

இந்தியர்களே தங்கம் விலையை பத்தின கவலையே இனி வேண்டாம்!! ரெடியானது நாட்டின் பெரிய தங்க சுரங்கம்!!

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

தங்கம், வெள்ளி விலை அடுத்த 1 வருடத்தில் எங்கிருக்கும்? இப்போது முதலீடு செய்வது லாபமா? நஷ்டமா?

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!



Click it and Unblock the Notifications