நாட்டின் முன்னணி மென்பொருள் நிறுவனமான டாடா கண்சல்டன்சி சர்வீசஸ் பொதுச் சந்தை வர்த்தகத்தில் இருக்கும் பங்குகளை வாங்க முடிவு செய்துள்ளதாக இன்று அறிவிப்பு வெளியானது.
நாட்டின் முன்னணி மென்பொருள் நிறுவனமான டாடா கண்சல்டன்சி சர்வீசஸ் பொதுச் சந்தை வர்த்தகத்தில் இருக்கும் பங்குகளை வாங்க முடிவு செய்துள்ளதாக இன்று அறிவிப்பு வெளியானது. இந்த அறிவிப்பை அடுத்து டிசிஎஸ் நிறுவனப் பங்குகள் காலை வர்த்தகத்தில் 2.5 சதவீதம் வரை உயர்ந்து 5 மாத உயர்வை அடைந்தது.
இதனைத் தொடர்ந்து இன்போசிஸ், டெக் மஹிந்திரா ஆகிய நிறுவனங்களின் பங்குகள் 1.5 சதவீதத்திற்கும் அதிகமாக உயர்ந்து, இன்றைய ஒட்டுமொத்த வர்த்தக உயர்விற்கு ஐடி நிறுவனப் பங்குகள் முக்கியக் காரணமாக விளங்கியது.

மேலும் ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா உடன் அதன் 5 கிளை வங்கிகளையும் இதனுடன் இணைத்து ஒன்றை வங்கி அமைப்பாகச் செயல்பட நாடாளுமன்றத்தில் இறுதி ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இதனால் எஸ்பிஐ வங்கி மற்றும் பிற முக்கிய வங்கிகளின் பங்கு மதிப்பு இன்று உயர்ந்து காணப்படுகிறது.
வியாழக்கிழமை வர்த்தக முடிவில் மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் குறியீடு 145.71 புள்ளிகள் உயர்ந்து 28,301.27 புள்ளிகளை அடைந்தது, அதேபோல் சென்செக்ஸ் குறியீடு 53.30 புள்ளிகள் உயர்ந்து 8,778.00 புள்ளிகள் எட்டி இன்றைய வர்த்தகம் முடிவிற்கு வந்தது.


Click it and Unblock the Notifications