பட்டையை கிளப்பும் பங்கு சந்தை.. உச்சத்தில் சென்செக்ஸ், நிஃப்டி!

நலிந்து வரும் பொருளாதாரத்தை மேம்படுத்தும் வகையில், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வெளியிட்டுள்ள அறிக்கையினால், பொருளாதாரம் மேம்படும், குறிப்பாக சிறு சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் மேம்படும் என்ற நம்பிக்கையால் இந்திய பங்கு சந்தைகள் பட்டையை கிளப்பி கொண்டு வர்த்தகமாகிக் கொண்டு வருகின்றன. இந்த நிலையில் சென்செக்ஸ் முன்னதாக 1900 புள்ளிகளுக்கும் மேல் வர்த்தகமான சென்செக்ஸ் தற்போது சற்று குறைந்தும் வர்த்தகமாகி வருகிறது.

இந்த நிலையில் தற்போது மும்பை பங்கு சந்தையின் சென்செக்ஸ் 1755 புள்ளிகள் ஏற்றம் கண்டு 37,855 ஆக ஏற்றம் கண்டுள்ளது. இதே தேசிய பங்கு சந்தை நிஃப்டி 516 புள்ளிகள் ஏற்றம் கண்டு 11,223 ஆக அதிகரித்துள்ளது.

பட்டையை கிளப்பும் பங்கு சந்தை.. உச்சத்தில் சென்செக்ஸ், நிஃப்டி!

இதே டாலருக்கு எதிரான ரூபாயின் மதிப்பு 70.99 ஆக அதிகரித்தும் வர்த்தகமாகி வருகிறது.

இந்த நிலையில் இன்று ஒரு நாளில் கண்ட லாபமானது 10 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு கண்ட, மிகப்பெரிய ஆதாயம் என்றும் கூறப்படுகிறது.

அக்டோபர் மாதத்திற்கு மேல் தொடங்கப்படும் புதிய உற்பத்தி நிறுவனங்களுக்கு வரி 15 சதவிகிதம் என்றும், இதே முன்னர் இருக்கும் நிறுவனங்களுக்கு வரி 22 சதவிகிதமாக குறைக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது. எனினும் இந்த நடவடிக்கையால் அரசுக்கு 1.45 டிரில்லியன் ரூபாய் இழப்பு ஏற்படும் என்றாலும், உற்பத்தி துறையில் வளர்ச்சி மேம்படும் என்றும் கூறியுள்ளார்.

இந்த நிலையில் நிஃப்டி மற்றும் சென்செக்ஸ் குறியீட்டில் உள்ள அனைத்து இன்டெக்ஸ்களும் பச்சை நிறத்திலேயே உள்ளன. குறிப்பாக நிஃப்டி ஆட்டோ மற்றும் நிஃப்டி பேங்கிங் துறையும், பி.எஸ்.இயில் நுகர்வோர் பொருட்கள் குறித்த குறியீடும், பி.எஸ்.இ மெட்டல்ஸ் நல்ல ஏற்றத்துடனும் காணப்படுகின்றன.

இந்த நிலையில் ஆட்டோமொபைல் துறையை சார்ந்த பங்குகள் நல்ல ஏற்றத்துடன் காணப்படுகின்றன. குறிப்பாக ஈச்சர் மோட்டார்ஸ், அல்ட்ராடெக் சிமெண்ட், மாருதி சுசூகி, ஹெச்.டி.எஃப்.சி பேங்க், லார்சன் உள்ளிட்ட பங்குகள் என்.எஸ்.இ குறியீட்டில் டாப் கெய்னராகவும், இதே பி.எஸ்.இ குறியீட்டில் மாருதி சுசூகி, ஹெச்.டி.எஃப்.சி பேங்க், லார்சன், எம் & எம், எஸ்.பி.ஐ உள்ளிட்ட பங்கு கள் நல்ல ஏற்றத்துடன் டாப் கெயினராகவும் காணப்படுகின்றன.

தொடர்ந்து இந்த அறிக்கைக்கு வெளியீட்டுக்கு பின்னர் சந்தையானது தொடர்ந்து ஏற்றம் கண்டு வருகிறது. இந்த நிலையில் இந்திய பங்கு சந்தையில் உள்நாட்டு வர்த்தகத்தில் ஈடுபடும் முதலீட்டாளர்களின் சொத்து மதிப்பு 6.12 டிரில்லியன் ரூபாய் அதிகரித்துள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+