உள்நாட்டு முதலீட்டாளர்களால் 320 புள்ளிகள் வரையில் உயர்ந்த சென்செக்ஸ்..!
வெள்ளிக்கிழமை வர்த்தகத்தில் ஆசிய சந்தையின் வளர்ச்சி நிலையாக வளர்ச்சியில் இருந்த காரணத்தாலும், உள்நாட்டு முதலீட்டாளர்களின் தொடர் முதலீட்டுக் காரணமாக இன்று மும்பை பங்குச்சந்தை வளர்ச்சி பாதையில் இருந்தது.
இன்று காலை வர்த்தகம் துவங்கிய சில நிமிடங்களிலேயே சென்செக்ஸ் குறியீடு 33,000 புள்ளிகளை அடைந்தது. இந்நிலையில் தொடர் முதலீட்டு உயர்வாலும் சென்செக்ஸ் இன்று 320 புள்ளிகள் வரையில் உயர்ந்தது.

இன்றைய வர்த்தக முடிவில் மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் குறியீடு 301.09 புள்ளிகள் வரையில் உயர்ந்து 33,250.30 புள்ளிகளை அடைந்தது.
இதேபோல் நிஃப்டி குறியீடும் தொடர் உயர்வில் 98.95 புள்ளிகள் உயர்ந்து 10,265.65 புள்ளிகளை அடைந்து இன்றைய வர்த்தகம் முடிவடைந்தது.


Click it and Unblock the Notifications