ரத்தக்களறியான சென்செக்ஸ், நிஃப்டி.. கேப்பில் கெடா வெட்டிய மருத்துவமனை பங்குகள்..!!

இந்திய பங்குச் சந்தை இன்று கடும் வீழ்ச்சியை சந்தித்து, சென்செக்ஸ் 1,300 புள்ளிகள் வரை வீழ்ச்சியடைந்தது. இதற்கு முக்கிய காரணமாக இந்தியாவில் பரவி வரும் ஹியூமன் மெட்டாநியூமோவைரஸ் (HMPV) தொற்று பரவல் குறித்த முதலீட்டாளர்கள் மத்தியிலான அச்சம் தான்.

கர்நாடகாவில் இரண்டு குழந்தைகளுக்கு HMPV பாதிப்பு நிகழ்வுகள் கண்டறியப்பட்டதைத் தொடர்ந்து காலையில் வர்த்தகத்தில் மோசமான சரிவை சந்தித்த சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி, 2 குழந்தையில் ஒரு குழந்தை சிகிச்சை பெற்று வீடு திரும்பியதாக வெளியான தகவல் மூலம் சென்செக்ஸ் குறியீட்டின் சரிவின் அளவு 1100 புள்ளிகளில் இருந்து 750 புள்ளிகளாக சரிந்தது.

ரத்தக்களறியான சென்செக்ஸ், நிஃப்டி.. கேப்பில் கெடா வெட்டிய மருத்துவமனை பங்குகள்..!!

ஆனால் அடுத்த சில மணிநேரத்திலேயே குஜராத்தில் முதல் தொற்று பாதிப்பு ஏற்பட்டு உள்ளதாக தகவல் வெளியானதை தொடர்ந்து சென்செக்ஸ் 1300 புள்ளிகளுக்கும் அதிகமான சரிவை பதிவு செய்துள்ளது. இந்த மோசமான வர்த்தகத்திற்கு மத்தியில் இந்திய பங்குச்சந்தையில் இருக்கும் மருத்துவமனை குழுமத்தின் பங்குகள் தடாலடியாக உயர்ந்துள்ளது.

இன்றைய மோசமான பங்குச்சந்தை வர்த்தகத்திற்கு மத்தியில், ஹெல்த்கேர் துறை பங்குகள் முதலீட்டாளர்களின் முக்கியமான டார்கெட் ஆக மாறியுள்ளது. சென்செக்ஸ் நிஃப்டி 1.5 சதவீதத்திற்கும் அதிகமாக சரிந்து ரத்தக்களறியான வேளையில் மருத்துவமனை பங்குகள் மாஸ் காட்டியுள்ளது.

இன்றைய வர்த்தகத்தில் கர்நாடக மாநிலத்தில் இயக்கும் பிரபல மருத்துவமனை நிறுவனமான நாராயணா ஹ்ருதயாலயா பங்குகள் 3.4% வரை உயர்ந்துள்ளது. ரெயின்போ சில்ட்ரன்ஸ் மெடி கேரின் பங்குகளும் 4% வரை உயர்ந்துள்ளன. அப்போலோ மருத்துவமனை, அஸ்டர் டிஎம் ஹெல்த்கேர், கிருஷ்ணா இன்ஸ்டிடியூட் ஆப் மெடிக்கல் சயின்ஸ் (KIMS) போன்ற பிற மருத்துவ துறை பங்குகளும் 2% வரை உயர்ந்துள்ளன.

இந்தியாவில் கர்நாடகாவில் இரண்டு மற்றும் குஜராத்தில் ஒன்று என மூன்று HMPV பாதிப்பு நிகழ்வுகள் கண்டறியப்பட்டுள்ளன. இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐ.சி.எம்.ஆர்.) நடத்திய கண்காணிப்பின் மூலம் இது உறுதி செய்யப்பட்டு உள்ளது.

இந்திய சுகாதார அமைச்சகம், பொதுமக்கள் அச்சமடைய தேவையில்லை என்றும், கை கழுவுதல், இருமல், தும்மும் போது வாய் மற்றும் மூக்கை மூடுதல் போன்ற சுகாதார முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கடைபிடிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளது. HMPV தொற்று பரவல் குறித்த கண்காணிப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தவும், புதிய சுகாதார சவால்களை எதிர்கொள்ளவும் இந்திய அரசு தயாராக உள்ளது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+