இந்தியாவில் ஜிஎஸ்டி அமலாக்கத்தின் மூலம் சேவைத்துறையில் கட்டணங்கள் மற்றும் விலை நிலைகள் உயர்ந்துள்ள காரணத்தால் நவம்பர் மாதத்தில் இத்துறை பெரிய அளவிலான சரிவை சந்தித்துள்ளது.
ஜிஎஸ்டி அமலாக்கத்தின் மூலம் குறைவான தேவை, வாடிக்கையாளர் வருகையின் எண்ணிக்கையில் சரிவு எனப் பல காரணங்களால் சேவைத்துறை பாதிக்கப்பட்டுள்ளது.
பிஎம்ஐ குறியீடு
நவம்பர் மாத்திற்கான நிக்கி பிஎம்ஐ குறியீடு கடந்த 3 மாதத்தில் முதல் முறையாக 48.5 புள்ளிகளாகக் குறைந்துள்ளது. அக்டோபர் மாதத்தில் இதன் அளவு 51.7 புள்ளிகளாக இருந்த நிலையில், கடந்த 3 மாதத்தில் முதல் முறையாக வளர்ச்சி பாதையில் இருந்து கீழ் இறங்கியுள்ளது.
50 புள்ளிகள்
நிக்கி பிஎம்ஐ குறியீடு 50 புள்ளிகளுக்கு அதிகமாக இருந்தால், சேவைத்துறை வளர்ச்சி பாதையில் இருப்பதாகப் பொருள், 50 புள்ளிகளுக்குக் குறைந்தால் வளர்ச்சியில் தொய்வு நிலையை அடைந்ததைக் குறிக்கும்.
ஜிஎஸ்டி
ஜூலை மாதத்தில் ஜிஎஸ்டி அமலாக்கம் செய்யப்பட்ட நிலையில் ஆகஸ்ட், செப்டம்பர், அக்டோபர் ஆகிய 3 மாதங்களும் 50 புள்ளிகளை மேல் காணப்பட்டது.
ஆனால் அக்டோபர் மாதத்தில் 51.7 புள்ளிகளில் இருந்து நவம்பர் மாதத்தில் 48.5 புள்ளிகளாகக் குறைந்துள்ளது.
உற்பத்தித் துறை
நவம்பர் மாதத்தில் சேவைத்துறை சரிந்து காணப்படும் நிலையில், உற்பத்தித் துறை கணிசமான உயர்வைச் சந்தித்துள்ளது.


Click it and Unblock the Notifications