பங்குச் சந்தையில் தற்போது எலக்ட்ரிக் வாகன துறையை சேர்ந்த பங்குகளுக்கு நல்ல கிராக்கி உள்ளது. எதிர்காலத்தில் சாலைகளில் எலக்ட்ரிக் வாகனங்கள் தான் வளம் வரும் என்ற எதிர்பார்ப்பு காரணமாக எலக்ட்ரிக் வாகன மற்றும் அது சார்ந்த துறையை சேர்ந்த நிறுவன பங்குகளின் விலை ஏற்றம் கண்டு வருகிறது.
இந்த சூழ்நிலையில், மல்டிபேக்கர் EV பென்னி பங்கு ஒன்று அண்மையில் தொடர்ந்து அப்பர் சர்க்கியூட் அடித்துள்ளது. அந்த பங்கு சர்வோடெக் பவர் சிஸ்டம்ஸ் லிமிடெட். 1998ல் தொடங்கப்பட்ட இந்நிறுவனம் எல்இடி லைட்டிங் தீர்வுகள், யுபிஎஸ் சிஸ்டம்கள், இன்வெர்ட்டர்கள் மற்றும் பேட்டரிகளை உற்பத்தி செய்கிறது.

சர்வோடெக் பவர் சிஸ்டம்ஸ் லிமிடெட் நிறுவனத்தின் நிதி நிலை முடிவுகள் சிறப்பாக உள்ளது. நடப்பு 2023-24ம் நிதியாண்டின் 2வது காலாண்டு (2023 செப்டம்பர் காலாண்டு) மற்றும் அரையாண்டில் (2023 ஏப்ரல்-செப்டம்பர்) இந்நிறுவனத்தின் செயல்பாட்டு வாயிலான வருவாய் முறையே ரூ.85.93 கோடி மற்றும் ரூ.165.5 கோடியாக உள்ளது.
இது சென்ற நிதியாண்டின் இதே காலத்தை காட்டிலும் முறையே 114 மற்றும் 133 சதவீதம் அதிகமாகும். இந்த நிதியாண்டின் முதல் அரையாண்டில் இந்நிறுவனத்தின் நிகர லாபம் 538 சதவீதம் உயர்ந்து ரூ.7.23 கோடியாக அதிகரித்துள்ளது. கடந்த செப்டம்பர் காலாண்டில் இந்நிறுவனத்தின் நிகர லாபம் 301 சதவீதம் அதிகரித்து ரூ.3.12 கோடியாக உயர்ந்துள்ளது.
இந்நிறுவனம் அண்மையில் பிபிசிஎல் நிறுவனத்தின் தேசியநெட்வொர்க்கில் 2,649 ஏசி இவி சார்ஜர்ஸ் அமைப்பதற்கான வர்த்தக ஒப்பந்தத்தை பெற்றது. இது இந்நிறுவனத்துக்கு பெரிய வர்த்தக வாய்ப்பாக கருதப்படுகிறது.
அண்மையில், இந்நிறுவனத்தின் புரோமோட்டர் ராமன் பாட்டியா மற்றும் சில வெளிநாட்டு முதலீட்டாளர்கள் மற்றும் மகேஷ் வாஸ், நிகில் பத்ரா உள்ளிட்ட புரோமோட்டர் அல்லாதவர்கள் ஒரு முன்னுரிமை வெளியீட்டின் மூலம் மொத்தம் 89 லட்சம் பங்குகளை வாங்கியுள்ளனர்.
இதில் ராமன் பாட்டியா மட்டும் 5 லட்சம் பங்குகளை வாங்கி இருந்தார். நிறுவனத்தின் புரோமோட்டர் மற்றும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் முன்னுரிமை அடிப்படையில் பங்குகளை வாங்கிய தகவல் வெளியானதையடுத்து அந்நிறுவன பங்கின் விலை தொடர்ந்து அப்பர்சர்க்கியூட் அடித்தது.
தற்போது இப்பங்கின் விலை அதன் 52 வார உயர்வான ரூ.100ஐ காட்டிலும் சுமார் 19 சதவீதம் குறைவாக உள்ளது. தேசிய பங்குச் சந்தையில் இன்று வர்த்தகத்தின் இடையே சர்வோடெக் பவர் சிஸ்டம்ஸ் லிமிடெட் நிறுவன பங்கின் விலை ரூ.81.10ஆக இருந்தது. கடந்த ஓராண்டில் இப்பங்கு முதலீட்டாளர்களுக்கு 459 சதவீதம் ஆதாயம் அளித்துள்ளது.
கடந்த 3 ஆண்டுகளில் இப்பங்கின் விலை 4,128 சதவீதம் உயர்ந்துள்ளது. 3 ஆண்டுகளுக்கு முன்பு ரூ.2.08 என்ற அளவில் இருந்த இப்பங்கு தற்போது ரூ.80க்கு மேல் உள்ளது. இவி பங்குகளில் முதலீடு செய்ய விரும்பும் முதலீட்டாளர்கள் இந்நிறுவன பங்குகளை கவனத்தில் கொள்ளலாம் என்று நிபுணர்கள் பரிந்துரை செய்துள்ளனர்.
Disclaimer: This article is strictly for informational purposes only. It is not a solicitation to buy, sell in precious metal products, commodities, securities or other financial instruments. Greynium Information Technologies Pvt Ltd, its subsidiaries, associates and the author of this article do not accept culpability for losses and/or damages arising based on information in this article.
More From GoodReturns

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

தங்கம், வெள்ளி விலை அடுத்த 1 வருடத்தில் எங்கிருக்கும்? இப்போது முதலீடு செய்வது லாபமா? நஷ்டமா?

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!



Click it and Unblock the Notifications