மும்பை: இந்திய பங்குச்சந்தையில் சில நிறுவனங்கள் முதலீட்டாளர்களுக்கு எதிர்பாராத வகையிலான லாபத்தை அள்ளித் தந்துவிடும். அந்த வகையில் கடந்த நான்கு ஆண்டுகளில் பல்லாயிரம் மடங்கு லாபத்தை பெற்று தந்த ஒரு நிறுவனத்தின் பங்குகள் குறித்து இந்த கட்டுரையில் விரிவாக பார்க்கலாம்.
எஸ்ஜி ஃபின்சர்வ் (SG Finserve): இந்த நிறுவனம் கடந்த நான்கு ஆண்டுகளில் முதலீட்டாளர்களுக்கு 15,185% லாபத்தை பெற்று தந்துள்ளது. அதாவது 2020ஆம் ஆண்டு மார்ச் மாதம் இந்த நிறுவனத்தின் ஒரு பங்கின் மதிப்பு ரூ.2.8 ஆக இருந்து,தற்போது ரூ.428 என வளர்ச்சி அடைந்துள்ளது.

உதாரணத்திற்கு ஒரு முதலீட்டாளர் 2020 ஆம் ஆண்டு மார்ச் மாதம் இந்த நிறுவனத்தில் ரூ.1 லட்சம் முதலீடு செய்திருந்தால் அந்த முதலீட்டின் தற்போதைய மதிப்பானது ரூ.1.52 கோடி என உயர்வு கண்டிருக்கும்.
ஆன்லைன் டிரேடிங், சொத்து மேலாண்மை இன்வெஸ்ட்மென்ட் பேங்கிங் மற்றும் காப்பீடு சேவைகள் உள்ளிட்ட பல்வேறு சேவைகளை வழங்கி வரக்கூடிய ஒரு நிறுவனம்தான் எஸ்ஜி ஃபின்சர்வ் லிமிடெட்.இதற்கு முன்பதாக இந்த நிறுவனம் மூங்கீபா செக்யூரிட்டி லிமிடெட் என அறியப்பட்டது. இந்த நிறுவனம் காசியாபாத்தில் 1994 ஆம் ஆண்டு நிறுவப்பட்டது.
கடந்த நான்கு ஆண்டுகளில் முதலீட்டாளர்களுக்கு மிகப்பெரிய அளவில் லாபத்தை அள்ளித் தந்துள்ளது. ஆனால் கடந்த ஓராண்டு காலமாக இந்த நிறுவனத்தின் பங்கானது திருத்தப்பட்டு, கிட்டத்தட்ட 14 % குறைந்துள்ளது. கடந்த இரண்டு மாதங்களாக சரிவில் இருந்து வந்த நிறுவனத்தின் பங்கு மதிப்பானது கடந்த சில நாட்களாக அதிகரித்து வருகிறது.
குறிப்பாக ஏப்ரல் 1ஆம் தேதி பங்குச்சந்தையில் இந்த நிறுவனத்தின் பங்கு 5% அதிகரித்தது. மார்ச் மாதம் 9 %, பிப்ரவரி மாதம் 10% என குறைந்திருந்த நிலையில் தற்போது மீண்டும் ஏற்றத்திற்கு வருகிறது. தற்போது நிறுவனத்தின் பங்கு ரூ.428 என வர்த்தகமாகிறது.
இந்த நிறுவன பங்கின் 54 வார கால உச்சம் என்பது ரூ.748, கடந்த 2023 ஆம் ஆண்டு மே 26 ஆம் தேதி இந்த நிறுவனத்தின் பங்கு இத்தகைய உச்சத்தை எட்டியது. பின்னர் அது திருத்தத்திற்கு உள்ளாகி, சரிவை கண்டது.
கடந்த மார்ச் 6ஆம் தேதி தனது 52 வார கால சரிவை கண்டது தற்போது அதிலிருந்து மீண்டு வந்திருக்கிறது. இந்த நிறுவனத்தின் சந்தை மூலதனம் ரூ.2,369 கோடி ஆகும். இந்த நிறுவனத்தின் புக் வேல்யூ 138.15 ஆகவும் ஃபேஸ் வேல்யூ 10 ஆகவும் இருக்கிறது.
நிறுவனத்தின் நிகர வருவாய் 2022 ஆம் ஆண்டு வெறும் 2 கோடியாக இருந்த நிலையில் 2023 ஆம் ஆண்டில் 42 கோடியாக அதிகரித்திருக்கிறது. நிறுவனத்தின் லாபமும் 2023 ஆம் ஆண்டில் 18 கோடியாக உயர்ந்துள்ளது நிறுவனத்தின் நிகர மதிப்பும் 2022 ஆம் ஆண்டு ஒப்பிடுகையில் 2023இல் 573 கோடி என உச்சத்தை அடைந்துள்ளது.
நிறுவனத்தின் பங்குகளில் 51.96% சில்லறை முதலீட்டாளர்கள் வசமும், 47.80 சதவீதம் ப்ரொமோட்டர் வசமும் உள்ளது .ஐசிஐசிஐ டைரக்ட் நிறுவனத்தின் ஆய்வு அடிப்படையில் நிறுவனத்தின் இயர்னிங் பெர் ஷேர்(earnings per share) என்பது வலுவானதாக இருக்கிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் இதன் ஆர்ஓஇ (roe) என்பது கடந்த இரண்டு ஆண்டுகளாக குறைந்து வருகிறது என்ற ஒரு எச்சரிக்கையும் விடுக்கப்படுகிறது.
Story written by: I.jayachandran
More From GoodReturns

தங்கம் விலையில் திடீர் மாற்றம்.. மத்திய கிழக்கு போர் பதற்றம் செய்யும் அட்டகாசம்..!!

வெள்ளி விலை: கிணற்றில் போட்ட கல் போல நிற்கிறது..!! முதலீட்டாளர்கள் என்ன செய்யலாம்..?

ரத்தகளறியான இந்திய பங்குச்சந்தை.. ரூ.12 லட்சம் கோடி இழப்பு.. கதறி அழும் முதலீட்டாளர்கள்..!

இதுக்கு பேர் தான் Old is Gold-ஆ.. காலம் மாறினாலும், ஃபார்மூலா மாறாது..!!

கழுதை மேச்சா ரூ.50 லட்சம்!! அதுவும் அரசாங்கமே தருது!! வேற என்ன வேணும்? ஆரம்பிக்கலாமா?

4 நாட்களில் ரூ.21,000 கோடி மாயம்!! இந்தியாவே வேண்டாம் என தெறித்து ஓடும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள்!!

மார்ச் 31-க்குள் இந்த வேலையை செய்யாட்டி அக்கவுண்ட் முடங்கும்! முதலீட்டாளர்களே கவனம்?

உங்கள் எதிர்காலம் உங்கள் கையில்! பெண்களுக்கான சிறந்த முதலீட்டு திட்டங்கள் இதோ!

ஏறிய வேகத்தில் இறங்கிய இந்திய பங்குச்சந்தை!! முதலீட்டாளர்கள் கதறல்!! இதுக்கு விடிவுகாலமே இல்லையா?:

10 ஆண்டுகளில் செல்வத்தை உயர்த்துவது எது? PPF-ன் நிலையான வட்டியா அல்லது SIP-ன் சந்தை லாபமா?

ரூ. 50,000 கையில் இருக்கா..? உங்கள் வாழ்க்கையை மாற்றப்போகும் முக்கிய முடிவு..!



Click it and Unblock the Notifications