2010ம் ஆண்டில் தொடங்கப்பட்ட சாந்தி ஸ்பின்டெக்ஸ் லிமிடெட், டெனிம் ஜவுளி பொருட்கள் உற்பத்தி மற்றும் வர்த்தகம் செய்யும் தொழிலில் ஈடுபட்டுள்ளது. இந்நிறுவனம் சமீபகாலமாக ஜவுளித் துறையில் தனது செயல்பாடுகளை விரிவுப்படுத்துவதை நோக்கமாக கொண்டு செயல்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக தற்போது, டீஸ்டா ஸ்பின்டெக்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தை கையகப்படுத்த உள்ளது.
டீஸ்டா ஸ்பின்டெக்ஸ்
கடந்த 9ம் தேதியன்று, சாந்தி ஸ்பின்டெக்ஸ் லிமிடெட் நிறுவனத்தின் இயக்குனர்கள் குழு, டீஸ்டா ஸ்பின்டெக்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் 100 சதவீத பங்குகளை கையகப்படுத்த ஒப்புதல் அளித்துள்ளது. இந்த கையகப்படுத்துதல் சில நிபந்தனைகளுக்கு உட்பட்டு வரும் 15ம் தேதிக்குள் (வியாழக்கிழமை) நிறைவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த கையகப்படுத்துதல் நிறைவடைந்தவுடன், டீஸ்டா ஸ்பின்டெக்ஸ் நிறுவனம் சாந்தி ஸ்பின்டெக்ஸ் நிறுவனத்துக்கு சொந்தமான துணைநிறுவனமாக மாறும். இது டெனிம் ஜவுளித் துறையில் தனது இருப்பை வலுப்படுத்துவதற்கான சாந்தி ஸ்பின்டெக்ஸ் நிறுவனத்தின் தொடர்ச்சியான முயற்சிகளை வெளிப்படுத்துகிறது. இருப்பினும் இது இந்நிறுவன பங்கின் விலையில் நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தவில்லை.
பங்கு விலை
கடந்த வெள்ளிக்கிழமையன்று மும்பை பங்குச் சந்தையில் சாந்தி ஸ்பின்டெக்ஸ் நிறுவன பங்கின் விலை முந்தைய வர்த்தக தினத்தை காட்டிலும் 14.65 சதவீதம் குறைந்து ரூ.56.33ஆக சரிந்தது. இந்நிறுவனத்தின் விரிவாக்க நடவடிக்கைகள் தொடர்பான செய்திகள் வெளியானபோதிலும், கடந்த ஓராண்டில் இந்நிறுவன பங்கின் விலை கடும் சரிவை சந்தித்த்துள்ளது. கடந்த ஓராண்டில் இந்நிறுவன பங்கின் விலை 19.65 சதவீதம் வழ்ச்சி கண்டுள்ளது.
2025 ஜனவரி 8ம் தேதியன்று மும்பை பங்குச் சந்தையில் வர்த்தகத்தின் இடையே சாந்தி ஸ்பின்டெக்ஸ் நிறுவன பங்கின் புதிய 52 வார உச்ச விலையான ரூ.86.99ஐ எட்டியது. ஆனால் அதன் பிறகு இப்பங்கின் விலை தொடர்ந்து சரிவை சந்தித்து வருகிறது. கடந்த மார்ச் 3ம் தேதியன்று மும்பை பங்குச் சந்தையில் வர்த்தகத்தின் இடையே இந்நிறுவன பங்கின் விலை புதிய 52 வார குறைந்தபட்சமான ரூ.50.51க்கு சென்றது.
லாபம்
பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்களில், தொடர்ந்து லாபம் ஈட்டி வரும் நிறுவனங்களில் ஒன்று சாந்தி ஸ்பின்டெக்ஸ் நிறுவனம். 2023-24ம் நிதியாண்டில் இந்நிறுவனம் வருவாயாக ரூ.505.83 கோடியும், நிகர லாபமாக ரூ.13.02 கோடியும் ஈட்டியுள்ளது. 2024 செப்டம்பர் காலாண்டில் இந்நிறுவனம் வருவாயாக ரூ.355.04 கோடியும், நிகர லாபமாக ரூ.6.47 கோடியும் ஈட்டியுள்ளது.
சாந்தி ஸ்பின்டெக்ஸ் நிறுவனத்தின் பொதுப் பங்குதாரர்களில் ஜிதேந்திர குமார் ஜெயின் 1.39 சதவீதமும், பிந்து கார்க் 1.26 சதவீதமும் பங்கு மூலதனத்தை கொண்டுள்ளனர்.
லாபத்தை கொட்டி கொடுத்த ஸ்மால்கேப் பங்குகள்.. இந்த 4 பங்குகள் உங்ககிட்ட இருக்கா..?
Disclaimer: This article is strictly for informational purposes only. It is not a solicitation to buy, sell in precious metal products, commodities, securities or other financial instruments. Greynium Information Technologies Pvt Ltd, its subsidiaries, associates and the author of this article do not accept culpability for losses and/or damages arising based on information in this article.
More From GoodReturns

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

உச்சக்கட்டத்தில் ஈரான் போர்: கமேனியை தொடர்ந்து தலைவராக தேர்வான அவரது மகன் மீதும் சரமாரி தாக்குதல்!!



Click it and Unblock the Notifications