லாபத்தை கொட்டி கொடுத்த ஸ்மால்கேப் பங்குகள்.. இந்த 4 பங்குகள் உங்ககிட்ட இருக்கா..?

டிரம்பின் பரஸ்பர வரி விதிப்பு, ரூபாய் மதிப்பு வீழ்ச்சி, புவிசார் அரசியல் பதற்றம் போன்ற காரணங்களால் இந்த ஆண்டின் தொடக்கம் முதலே இந்திய பங்குச் சந்தைகளில் வர்த்தகம் தடுமாற்றம் கண்டு வருகிறது.பங்குச் சந்தைகளின் வீழ்ச்சிக்கு மத்தியிலும் ஆர்ஆர்பி செமிகண்டக்டர் உள்ளிட்ட சில ஸ்மால்கேப் பங்குகள் இந்த ஆண்டில் இதுவரை 435 சதவீதம் வரை லாபத்தை கொடுத்துள்ளன. அந்த பங்குகள் குறித்து சிறு பார்வை இதோ:

ஆர்ஆர்பி செமிகண்டக்டர் லிமிடெட்
1980ல் ஆரம்பிக்கப்பட்ட ஆர்ஆர்பி செமிகண்டக்டர் லிமிடெட், மின்னணு மற்றும் செமிகண்டக்டர் உற்பத்தியில் ஈடுபட்டு வருகிறது. இந்நிறுவனம் OSAT, ASIC வடிவமைப்பு மற்றும் பல்வேறு பயன்பாடுகளுக்கான எலக்ட்ரானிக் பாகங்களை வர்த்தகம் நிபுணத்துவம் பெற்றது. 2025ம் ஆண்டில் இதுவரை இந்நிறுவன பங்கின் விலை 435 சதவீதம் அதிகரித்துள்ளது.

லாபத்தை கொட்டி கொடுத்த ஸ்மால்கேப் பங்குகள்.. இந்த 4 பங்குகள் உங்ககிட்ட இருக்கா..?

கடந்த ஓராண்டில் இந்நிறுவன பங்கு முதலீட்டாளர்களுக்கு 4,610 சதவீதம் மல்டிபேக்கர் வருமானத்தை கொடுத்துள்ளது. கடந்த 5 ஆண்டுகளில் இந்நிறுவன பங்கு முதலீட்டாளர்களுக்கு 6,517 சதவீதம் லாபத்தை கொடுத்துள்ளது. மும்பை பங்குச் சந்தையில் கடந்த வெள்ளிக்கிழமையன்று வர்த்தகத்தின் முடிவில் ஆர்ஆர்பி செமிகண்டக்டர் லிமிடெட் நிறுவன பங்கின் விலை முந்தைய வர்த்தக தினத்தை காட்டிலும் 2 சதவீதம் உயர்ந்து ரூ.992.60ஆக இருந்தது.

எலைட்கான் இன்டர்நேஷனல் லிமிடெட்
1987ல் தொடங்கப்பட்ட எலைட்கான் இன்டர்நேஷனல் லிமிடெட், உள்நாட்டு மற்றும் சர்வதேச சந்தைகளில் சிகரெட் மற்றும் ஷீஷா போன்ற புகையிலை தயாரிப்புகளை தயாரித்து விற்பனை செய்து வருகிறது. இந்த ஆண்டில் இதுவரையிலான காலத்தில் இந்நிறுவன பங்கு 246 சதவீதம் வருமானத்தை கொடுத்துள்ளது. கடந்த ஓராண்டில் இந்நிறுவன பங்கின் விலை 3.157 சதவீதம் உயர்ந்துள்ளது.
கடந்த வெள்ளிக்கிழமையன்று மும்பை பங்குச் சந்தையில் வர்த்தகத்தின் முடிவில் எலைட்கான் இன்டர்நேஷனல் லிமிடெட் நிறுவன பங்கின் விலை முந்தைய வர்த்தக தினத்தை காட்டிலும் 4.13 சதவீதம் ஏற்றம் கண்டு ரூ.358.95ஆக இருந்தது.

கோலாப் பிளாட்ஃபார்ம்ஸ் லிமிடெட்
1989ல் தொடங்கப்பட்ட இந்திய ஐடி நிறுவனமான கோலாப் பிளாட்ஃபார்ம்ஸ், சாப்ட்வேர் கன்சல்டன்சி, தரவு மேலாண்மை உள்ளிட்ட சேவைகளை வழங்கி வருகிறது. 2025ம் ஆண்டில் இதுவரை இந்நிறுவன பங்கின் விலை 383 சதவீதம் உயர்ந்துள்ளது. கடந்த ஓராண்டில் இப்பங்கு 746 சதவீதம் வருமானம் கொடுத்துள்ளது. கடந்த 5 ஆண்டுகளில் இந்நிறுவன பங்கு முதலீட்டாளர்களுக்கு 6,750 சதவீதம் மல்டிபேக்கர் லாபத்தை கொடுத்துள்ளது.
கடந்த வெள்ளிக்கிழமையன்று மும்பை பங்குச் சந்தையில் வர்த்தகத்தின் முடிவில் கோலாப் பிளாட்ஃபார்ம்ஸ் லிமிடெட் நிறுவன பங்கின் விலை முந்தைய வர்த்தக தினத்தை காட்டிலும் 1.97 சதவீதம் குறைந்து ரூ.149.35ஆக இருந்தது.

என்ஏசிஎல் இண்டஸ்ட்ரீஸ்
ஹைதராபாத்தை தலைமையிடமாக கொண்டு செயல்படும் என்ஏசிஎல் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் வேளாண் ரசாயனங்கள் தயாரிப்பில் ஈடுபட்டு வருகிறது. 1986ல் தொடங்கப்பட்ட இந்நிறுவனம் பூச்சிக் கொல்லிகள், பூஞ்சைக் கொல்லிகள் மற்றும் கலைக் கொல்லிகள் உள்பட பயிர் பாதுகாப்பு பொருட்களை தயாரித்து சந்தைப்படுத்துகிறது. 2025ம் ஆண்டில் இதுவரை இந்நிறுவன பங்கின் விலை 140 சதவீதம் அதிகரித்துள்ளது.

ஒரே நாளில் ரூ.900 கோடி லாபம் பார்த்த ரேகா ஜூன்ஜூன்வாலா... எப்படி தெரியுமா..?
கடந்த ஓராண்டில் இந்நிறுவன பங்கு முதலீட்டாளர்களுக்கு 146 சதவீதம் மல்டிபேக்கர் வருமானத்தை கொடுத்துள்ளது. கடந்த 5 ஆண்டுகளில் இந்நிறுவன பங்கு முதலீட்டாளர்களுக்கு 575 சதவீதம் லாபத்தை கொடுத்துள்ளது. மும்பை பங்குச் சந்தையில் கடந்த வெள்ளிக்கிழமையன்று வர்த்தகத்தின் முடிவில் என்ஏசிஎல் இண்டஸ்ட்ரீஸ் நிறுவன பங்கின் விலை முந்தைய வர்த்தக தினத்தை காட்டிலும் 2.02 சதவீதம் குறைந்து ரூ.162.15ஆக இருந்தது.

பங்கு விலை ரொம்ப கம்மி.. டிவிடெண்டை அள்ளி அள்ளி கொடுக்கும் டபரியா டூல்ஸ்.. உங்களிடம் இருக்கா?
Disclaimer: This article is strictly for informational purposes only. It is not a solicitation to buy, sell in precious metal products, commodities, securities or other financial instruments. Greynium Information Technologies Pvt Ltd, its subsidiaries, associates and the author of this article do not accept culpability for losses and/or damages arising based on information in this article.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+