பங்கு விலை ரொம்ப கம்மி.. டிவிடெண்டை அள்ளி அள்ளி கொடுக்கும் டபரியா டூல்ஸ்.. உங்களிடம் இருக்கா?

பங்குச் சந்தை முதலீட்டாளர்களில் சிலர் டிவிடெண்டு தரும் பங்குகளை தேடி பிடித்து முதலீடு செய்வர். ஏனென்றால் டிவிடெண்டு வாயிலாக தனியாக ஒரு வருமானம் கிடைக்கும் என்பதை இதற்கு காரணம். டிவிடெண்டு வருமானத்தை விரும்பும் முதலீட்டாளர்களுக்கு தகுந்த ஒரு பங்குதான் டபரியா டூல்ஸ் லிமிடெட். இந்நிறுவனம் தொடர்ந்து டிவிடெண்டு வழங்கி வருவதோடு, முதலீட்டாளர்களுக்கு மல்டிபேக்கர் லாபத்தையும் கொடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

புரோமோட்டர்கள்
டபரியா டூல்ஸ் லிமிடெட் நிறுவனம் இரும்பு மற்றும் ஸ்டீல் பொருட்கள் தயாரிப்பில் ஈடுபட்டு வருகிறது. இந்நிறுவனம் இந்தியாவில் 1969ல் கைக் கருவிகளை உற்பத்தி செய்ய தொடங்கியது. பின்பு படிப்படியாக ஏற்றம் கண்டு பெரிய நிறுவனமாக உருவெடுத்துள்ளது. மைக்ரோ கேப் நிறுவனமான டபரியா டூல்ஸ் லிமிடெட் நிறுவனத்தில் புரோமோட்டர்கள் வசம் 69.72 சதவீத பங்குகள் உள்ளன. எஞ்சிய 30.28 சதவீத பங்குகள் பொதுமக்களிடம் உள்ளது. பிஎஸ்இ தரவுகளின்படி, இந்நிறுவனத்தில் 1,304 பங்குதாரர்கள் மட்டுமே உள்ளனர். அவர்கள் வசம் மொத்தம் 1.51 கோடி பங்குகள் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

பங்கு விலை ரொம்ப கம்மி.. டிவிடெண்டை அள்ளி அள்ளி கொடுக்கும் டபரியா டூல்ஸ்.. உங்களிடம் இருக்கா?

டபரியா டூல்ஸ் லிமிடெட் நிறுவன பங்கின் விலை ரூ.20க்கும் குறைவாக உள்ளது. ஆனாலும் இந்நிறுவனம் பங்குதாரர்களுக்கு டிவிடெண்டை அள்ளி வழங்கி வருகிறது. 2024-25ம் நிதியாண்டில் இதுவரை இந்நிறுவனம் 250 சதவீதம் டிவிடெண்டு அறிவித்துள்ளது. அதாவது கடந்த நிதியாண்டுக்கு இதுவரை இந்நிறுவனம் தனது பங்குதாரர்களுக்கு ரூ.10 முகமதிப்பு கொண்ட ஒரு பங்குக்கு ரூ.25 டிவிடெண்டு அறிவித்துள்ளது.

போனஸ் பங்கு
டபரியா டூல்ஸ் லிமிடெட் நிறுவனம் தனது 2025 மார்ச் காலாண்டு நிதி நிலை முடிவுகளை அறிவிக்கும்போது, பங்குதாரர்களுக்கு டிவிடெண்டையும் அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. முந்தைய 2023-24ம் நிதியாண்டில் இந்நிறுவனம் தனது பங்குதாரர்களுக்கு பங்கு ஒன்றுக்கு ரூ.40 டிவிடெண்டு வழங்கியதுடன், 2023 ஜூலையில் 4:1 என்ற விகிதத்தில் போனஸ் பங்கையும் வழங்கியது குறிப்பிடத்தக்கது.

2022-23ம் நிதியாண்டில் டபரியா டூல்ஸ் லிமிடெட் நிறுவனம் தனது பங்குதாரர்களுக்கு பங்கு ஒன்றுக்கு ரூ.155 டிவிடெண்டு வழங்கியது. நடுத்தர கால அடிப்படையில் இந்நிறுவன பங்கு முதலீட்டாளர்களுக்கு மல்டிபேக்கர் லாபத்தை கொடுத்துள்ளது. கடந்த 2 ஆண்டுகளில் இந்நிறுவன பங்கு முதலீட்டாளர்களின் பணத்தை 800 சதவீதம் பெருக்கியுள்ளது. கடந்த ஓராண்டில் இந்நிறுவன பங்கின் விலை 345 சதவீதம் உயர்ந்துள்ளது. கடந்த 6 மாதங்களில் இப்பங்கின் விலை 127 சதவீதம் அதிகரித்துள்ளது.

பங்கு விலை
இந்த ஆண்டில் இதுவரையிலான காலத்தில் டபரியா டூல்ஸ் லிமிடெட் நிறுவன பங்கின் விலை 97 சதவீதம் உயர்ந்துள்ளது. கடந்த 3 மாதங்களில் இப்பங்கின் விலை 40 சதவீதம் அதிகரித்துள்ளது. மும்பை பங்குச் சந்தையில் கடந்த வெள்ளிக்கிழமையன்று பங்கு வர்த்தகம் நிறைவடைந்தபோது, இந்நிறுவன பங்கின் விலை முந்தைய வர்த்தக தினத்தை காட்டிலும் 4.97 சதவீதம் உயர்ந்து ரூ.19.01ல் நிறைவடைந்தது.

ஒரே நாளில் ரூ.900 கோடி லாபம் பார்த்த ரேகா ஜூன்ஜூன்வாலா... எப்படி தெரியுமா..?
Disclaimer: This article is strictly for informational purposes only. It is not a solicitation to buy, sell in precious metal products, commodities, securities or other financial instruments. Greynium Information Technologies Pvt Ltd, its subsidiaries, associates and the author of this article do not accept culpability for losses and/or damages arising based on information in this article.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+