கடந்த வாரம் இந்திய பங்குச் சந்தைகளில் வர்த்தகம் ஏற்றத்துடன் நிறைவடைந்தது. 3 தினங்கள் மட்டுமே வர்த்தகம் நடைபெற்ற கடந்த வாரத்தில் மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 1,509 புள்ளிகளும், தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண் நிப்ஃடி 414 புள்ளிகளும் உயர்ந்தது. இந்நிலையில் இந்த வாரம் பங்கு வர்த்தகத்தின் போக்கு எப்படி இருக்கும் என்பது குறித்து பங்குச் சந்தை நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
நிறுவனங்களின் நிதி நிலை முடிவுகள், அன்னிய முதலீட்டாளர்கள் நிலைப்பாடு, சர்வதேச நிலவரங்கள் போன்றவை இந்த வார பங்கு வர்த்தகத்தின் போக்கினை நிர்ணயம் செய்யும் முக்கிய காரணிகளாக இருக்கும் என்று நிபுணர்கள் கணித்துள்ளனர். பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்கள் தங்களது கடந்த மார்ச் காலண்டு நிதி நிலை முடிவுகளை வெளியிட்டு வருகின்றன. அந்த வகையில் இந்த வாரம், யெஸ் வங்கி, ஆக்சிஸ் வங்கி, இந்துஸ்தான் யூனிலீவர், மாருதி சுசுகி மற்றும் எச்சிஎல் டெக்னாலஜிஸ் உள்பட பல முன்னணி நிறுவனங்கள் தங்களது 2025 மார்ச் காலாண்டு நிதி நிலை முடிவுகளை வெளியிட உள்ளன.

நிறுவனங்களின் நிதி நிலை முடிவுகள் பங்குச் சந்தையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும். நீண்ட இடைவெளிக்கு பிறகு அன்னிய முதலீட்டாளர்கள் கடந்த வாரம் 100 கோடி டாலர் மதிப்பிலான இந்திய பங்குகளை வாங்கினர். இந்த மாதத்தின் முதல் பாதியில் அன்னிய முதலீட்டாளர்கள் தொடர்ந்து பங்குகளை விற்பனை செய்து வந்தது குறிப்பிடத்தக்கது. தற்போது அன்னிய முதலீட்டாளர்கள் இந்திய பங்குகளில் முதலீடு செய்வதற்கு இரண்டு காரணங்கள் உள்ளன.
முதலாவது அமெரிக்க டாலர் இன்டெக்ஸ் 100ஆக சரிந்தது, அடுத்தது டாலர் மதிப்பு மேலும் பலவீனம் அடையும் என்ற எதிர்பார்ப்பு காரணமாக அமெரிக்க சந்தையிலிருந்து முதலீட்டை எடுத்து மீண்டும் இந்தியா போன்ற வளரும் நாடுகளின் சந்தைகளில் முதலீடு செய்ய தொடங்கியுள்ளனர். இந்த வாரமும் அன்னிய முதலீட்டாளர்கள் தொடர்ந்து இந்திய பங்குகளில் முதலீடு செய்தால் அது சந்தையின் உயர்வுக்கு வழிவகுக்கும்.
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் பரஸ்பர வரியை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளபோதிலும், அமெரிக்கா-ஜப்பான் இடையிலான பரஸ்பர வரி தொடர்பான பேச்சுவார்த்தை உள்பட வரி தொடர்பான எந்தவொரு நிகழ்வும் பங்குச் சந்தைகளில் தாக்கத்தை ஏற்படுத்தும்.
இதுதவிர, உலக நாடுகளின் முக்கிய பொருளாதார புள்ளிவிவரங்கள், சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை, அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் வெளிமதிப்பு மற்றும் உள்நாட்டு நிலவரங்கள் உள்ளிட்டவையும் இந்த வார பங்கு வர்த்தகத்தின் போக்கினை முடிவு செய்யும் முக்கிய காரணிகளாக இருக்கும் என்று பங்குச் சந்தை நிபுணர்கள் முன்னறிவிப்பு செய்துள்ளனர்.
தொழில்நுட்ப ரீதியாக, இந்த வாரம் நிஃப்டி 24,250-24,600 என்ற அளவில் ஏற்ற இறக்கமாக இருக்கலாம், அதேசமயம் சந்தை சரிவை சந்தித்தால் 23,000-23,300 மண்டலம் ஒரு ஆதரவாக செயல்பட வாய்ப்புள்ளது என்று கணிக்கப்பட்டுள்ளது.
போதும் இதோடு நிப்பாட்டுங்க... அன்னிய முதலீட்டாளர்களுக்கு செக் வைச்ச சோமெட்டோ
Disclaimer: This article is strictly for informational purposes only. It is not a solicitation to buy, sell in precious metal products, commodities, securities or other financial instruments. Greynium Information Technologies Pvt Ltd, its subsidiaries, associates and the author of this article do not accept culpability for losses and/or damages arising based on information in this article.
More From GoodReturns

தங்கம் விலை: திடீரென ரூட்டை மாற்றும் தங்கம்.. இப்போ தங்கம் வாங்குறது தான் புத்திசாலித்தனமா?

திங்கட்கிழமை பங்குச்சந்தை ஒரு காட்டு காட்ட போகுது.. ஆனந்த் ஸ்ரீனிவாசன் வார்னிங்..!!

4 வார ஈரான் போர்.. தரைமட்டத்திற்கு வந்த டெக் பங்குகள்.. அமெரிக்க அலறல்..!

தங்கம், வெள்ளி விலை: வாரத்தின் முதல் நாளிலேயே குட் நியூஸ்..!! தங்கம் வாங்க சிறந்த நாள்..!!

ஆசை காட்டி மோசம் செய்யும் தங்கம்..!! ஆறுதல் தந்த வெள்ளி..!! இப்போ வாங்கலாமா? வெயிட் பண்ணலாமா?

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?

ஆரம்பமே அட்டகாசம்: நிதியாண்டின் முதல் நாளில் பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு சர்ப்பிரைஸ்!!

சரிவிலேயே இருக்கும் இந்திய பங்குச்சந்தை இந்த வாரமாவது மீண்டு வருமா?

பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சி!! சென்செக்ஸ் 1000 புள்ளிகளுக்கு மேல் வீழ்ச்சி!!

பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு கருப்பு வெள்ளி..!! ஒரே நாளில் ரூ.8 லட்சம் கோடி அவுட்..!!

இந்தியர்களே தங்கம் விலையை பத்தின கவலையே இனி வேண்டாம்!! ரெடியானது நாட்டின் பெரிய தங்க சுரங்கம்!!



Click it and Unblock the Notifications