மகாராஷ்டிரா தினத்தை முன்னிட்டு வரும் மே 1ம் தேதியன்று மும்பை மற்றும் தேசிய பங்குச் சந்தைகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதனால் வரும் வியாழக்கிழமையன்று (மே 1) பங்குச் சந்தைகள் செயல்படாது. ஆக, வரும் வாரம் மொத்தம் 4 தினங்கள் மட்டுமே பங்கு வர்த்தகம் நடைபெறும். இதனால் முதலீட்டாளர்கள் அதற்கேற்ப தங்களது வர்த்தக திட்டங்களை திட்டமிட்டு கொள்வது நல்லது.
2025ல் இந்திய பங்குச் சந்தைகளுக்கு மொத்தம் 14 தினங்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதுவரை மகாசிவராத்திரி (பிப்ரவரி 26), முதல் புனித வெள்ளி (ஏப்ரல் 18) வரை மொத்தம் 6 விடுமுறை தினங்கள் கழிந்து விட்டது. எஞ்சியுள்ள விடுமுறை தினங்கள் இதோ:

மே 1 மகாராஷ்டிரா தினம்
ஆகஸ்ட் 15 சுதந்திர தினம் (79வது சுதந்திர தினம்)
ஆகஸ்ட் 27 ஸ்ரீ கணேஷ் சதுர்த்தி
அக்டோபர் 2 மகாத்மா காந்தி ஜெயந்தி
அக்டோபர் 21 தீபாவளி
அக்டோபர் 22 தீபாவளி பாலிபிரததிபதா
நவம்பர் 5 பிரகாஷ் குர்புர்ப் ஸ்ரீ குருநானக் தேவ் ஜெயந்தி
டிசம்பர் 25 கிறிஸ்துமஸ்
பல மாதங்களாக கரடியின் பிடியில் இருந்த பங்குச் சந்தைகள் தற்போது படிப்படியாக அதிலிருந்து மீண்டு வர தொடங்கியுள்ளன. இந்த சூழ்நிலையில், இந்த வார தொடக்கத்தில் காஷ்மீரின் பஹல்காமில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் அப்பாவி மக்கள் 27 பேர் கொல்லப்பட்டனர். இதனையடுத்து, இந்தியா-பாகிஸ்தான் இடையே பதற்றம் அதிகரித்துள்ளது. இதன் காரணமாக நேற்று பங்குச் சந்தைகளில் வர்த்தகம் பெரும் சரிவை சந்தித்தது.
குறிப்பாக நேற்று மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 588.90 புள்ளிகள் குறைந்தது. தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண் நிஃப்டி 207.35 புள்ளிகள் சரிந்தது. தீவிரவாத தாக்குதலுக்கு இந்தியா நிச்சயம் பதிலடி கொடுக்கும் என்பதால், பாகிஸ்தான் தற்போது நெருக்கடியில் உள்ளது. இந்தியா-பாகிஸ்தான் இடையிலான பதற்றத்தின் தாக்கம் வரும் வார பங்கு வர்த்தகத்தில் எதிரொலிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த மார்ச் மாதத்துடன் நிறைவடைந்த 2024-25ம் நிதியாண்டு பங்குச் சந்தைகளுக்கு ஒரு பொன்னான ஆண்டாக அமைந்தது. 2024 செப்டம்பர் இறுதியில் பங்குச் சந்தைகள் புதிய உச்சத்தை தொட்டன. மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 85,978.25 புள்ளிகளை எட்டியது, தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண் நிஃப்டி 26,277.35 புள்ளிகளை தொட்டது. அதன் பிறகு பங்குச் சந்தைகள் சரிவை சந்தித்தபோதிலும், ஒட்டு மொத்த அளவில் 2024-25ம் நிதியாண்டில் சென்செக்ஸ் 5.1 சதவீதமும், நிஃப்டி 5.3 சதவீதமும் வளர்ச்சி கண்டன.
இந்த காரணம் புதுசா இருக்குனே.. ஒரே நாளில் 6 சதவீதத்துக்கு மேல் சரிந்த ஸ்விக்கி பங்கு விலை
Disclaimer: This article is strictly for informational purposes only. It is not a solicitation to buy, sell in precious metal products, commodities, securities or other financial instruments. Greynium Information Technologies Pvt Ltd, its subsidiaries, associates and the author of this article do not accept culpability for losses and/or damages arising based on information in this article.
More From GoodReturns

பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சி!! சென்செக்ஸ் 1000 புள்ளிகளுக்கு மேல் வீழ்ச்சி!!

சரிவிலேயே இருக்கும் இந்திய பங்குச்சந்தை இந்த வாரமாவது மீண்டு வருமா?

பங்குச்சந்தை சரிவில் இந்த தப்பு மட்டும் பண்ணாதீங்க - முதலீட்டாளர்களுக்கு விஜய் கேடியா கூறும் டிப்ஸ்

பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு கருப்பு வெள்ளி..!! ஒரே நாளில் ரூ.8 லட்சம் கோடி அவுட்..!!

தங்கம் விலை: திடீரென ரூட்டை மாற்றும் தங்கம்.. இப்போ தங்கம் வாங்குறது தான் புத்திசாலித்தனமா?

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?

தங்கம், வெள்ளி விலை: வாரத்தின் முதல் நாளிலேயே குட் நியூஸ்..!! தங்கம் வாங்க சிறந்த நாள்..!!

ஆசை காட்டி மோசம் செய்யும் தங்கம்..!! ஆறுதல் தந்த வெள்ளி..!! இப்போ வாங்கலாமா? வெயிட் பண்ணலாமா?

தங்கம் விலை: 2 நாட்களில் நடந்த திருப்பம்!! மார்ச் மாத மேஜிக் முடிவுக்கு வந்ததா?

இந்தியர்களே தங்கம் விலையை பத்தின கவலையே இனி வேண்டாம்!! ரெடியானது நாட்டின் பெரிய தங்க சுரங்கம்!!

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை



Click it and Unblock the Notifications