பிரபலமான பங்குச் சந்தை முதலீட்டாளர்களில் ஒருவர் முகுல் அகர்வால். இவர் பல நிறுவனங்களில் முதலீடு செய்துள்ளார். முகுல் அகர்வால் முதலீடு செய்துள்ள பெரும்பாலான பங்குகள் முதலீட்டாளர்களுக்கு மல்டிபேக்கர் வருமானத்தை கொடுத்துள்ளன. அப்படி அவர் முதலீடு செய்த பங்குகளில் மல்டிபேக்கர் வருமானம் கொடுத்த பங்குதான் பிடிசி இண்டஸ்ட்ரீஸ். கடந்த 5 ஆண்டுகளில் இந்நிறுவன பங்கு முதலீட்டாளர்களுக்கு 8,446 சதவீதம் மல்டிபேக்கர் ஆதாயத்தை கொடுத்துள்ளது. இந்நிறுவனத்தில் முகுல் அகர்வால் 1.07 சதவீத பங்கு மூலதனத்தை கொண்டுள்ளார். அதாவது இவர் வசம் பிடிசி இண்டஸ்ட்ரீஸின் 1.60 லட்சம் பங்குகள் உள்ளன.
பிடிசி இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் உயர்தர பொறியியல் பாகங்களை உற்பத்தி செய்கிறது. இந்நிறுவனம் தனது தயாரிப்புகளில் 75 சதவீதத்துக்கும் அதிகமானவற்றை பல்வேறு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்கிறது. ரோல்ஸ் ராய்ஸ்,சீமென்ஸ், ஜிஇ, ஆல்ஸ்டாம், மெட்சோ மற்றும் எமர்சன் போன்ற புகழ்பெற்ற பன்னாட்டு நிறுவன வாடிக்கையாளர்களுக்கு தனது தயாரிப்புகளை ஏற்றுமதி செய்கிறது. 2014ம் ஆண்டில் ஃபோர்ப்ஸ் இந்தியாவால் இந்திய தொழில்களில் 16 மறைக்கப்பட்ட ரத்தினங்களில் ஒன்றாக பிடிசி இண்டஸ்ட்ரீஸ் அடையாளம் காணப்பட்டது.

நீண்ட கால அடிப்படையில் இந்நிறுவன பங்கு முதலீட்டாளர்களுக்கு மல்டிபேக்கர் ஆதாயத்தை கொடுத்துள்ளது. கடந்த 5 ஆண்டுகளில் இப்பங்கு முதலீட்டாளர்களுக்கு 8,446 சதவீதம் ஆதாயத்தை கொடுத்துள்ளது. 2020 மார்ச் 2ம் தேதியன்று ரூ.141ஆக இருந்த இப்பங்கின் விலை 2025 மார்ச் 7ம் தேதியன்று ரூ.12,250ஆக உயர்ந்துள்ளது. 5 ஆண்டுகளுக்கு முன்பு ஒருவர் இந்நிறுவன பங்கில் ரூ.10,000 முதலீடு செய்து இருந்தால் அது இன்று ரூ.8.6 லட்சமாக உயர்ந்திருக்கும். கடந்த 3 ஆண்டுகளில் இப்பங்கின் விலை 730 சதவீதம் உயர்ந்துள்ளது.
பிடிசி இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் தொடர்ந்து லாபம் ஈட்டி வருகிறது. 2023-24ம் நிதியாண்டில் பிடிசி இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் வருவாயாக ரூ.246.61 கோடி ஈட்டியுள்ளது. மேலும் அந்த நிதியாண்டில் இந்நிறுவனம் நிகர லாபமாக ரூ.23.83 கோடி ஈட்டியிருந்தது. 2024 செப்டம்பர் காலாண்டில் இந்நிறுவனம் வருவாயாக ரூ.69.21 கோடியும், நிகர லாபமாக ரூ.9.03 கோடியும் ஈட்டியிருந்தது. கடந்த டிசம்பர் காலாண்டில் இந்நிறுவனத்தின் வருவாய் ரூ.58.37 கோடியாகவும், நிகர லாபம் ரூ.8.13 கோடியாகவும் இருந்தது.
Story Written: Subramanian
More From GoodReturns

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

தங்கம் விலை ரூ.2 லட்சத்தை நெருங்குமா?பீட்டர் ஷிஃப் கொடுத்த மெகா வார்னிங்! ஏப்ரலில் எகிற போகுது?

FASTag விதிகளில் மாற்றம்: புதிதாக கொண்டு வரப்பட்ட 72 மணி நேர விதி..!! வாகன ஓட்டிகளே உஷார்..!!

பெட்ரோல் விலை லிட்டர் ரூ.119, டீசல் விலை லிட்டர் ரூ.192: உண்மையை போட்டுடைத்த அரசு..!!

தங்கம் தந்த டபுள் சர்ப்பிரைஸ்: ஈரான் போரால் நடக்கும் ஒரே நன்மை..!! இனி ஒவ்வொரு நாளும் முக்கியம்..!!

குறைந்த உதயநிதி ஸ்டாலின் சொத்து மதிப்பு! பல மடங்கு எகிறிய கிருத்திகாவின் சொத்து - பின்னணி என்ன?

TCS நிறுவனத்திற்கு பெரிய கும்பிடு போட்டு வெளியேறும் ஊழியர்கள்!! என்ன நடக்குது?

அட்சய திருதியைக்கு தங்கம் வாங்குற பிளான் இருக்கா? இப்படி செஞ்சா குறைஞ்ச விலைக்கு தங்கம் கிடைக்கும்

90ஸ் கிட்ஸ்களின் Gmail பிரச்சினைக்கு தீர்வு தந்த சுந்தர் பிச்சை: பழைய ஐடி-க்கு குட்பை..!!



Click it and Unblock the Notifications