டெல்லி: மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் 2025-26ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்வதை முன்னிட்டு இந்திய பங்குச் சந்தைகள் ஏற்றத்துடனே வர்த்தகத்தை தொடங்கின. நிதி அமைச்சராக நிர்மலா சீதாராமன் 8ஆவது முறையாக மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார்.
இந்த பட்ஜெட்டில் பல்வேறு வரி சலுகைகளை அவர் அறிவிக்க கூடும் என்று எதிர்பார்ப்பு நிலவுகிறது. குறிப்பாக வருமான வரி உச்சவரம்பில் மாற்றங்களை அவர் அறிவிப்பார் என தகவல்கள் வெளிவந்துள்ளன. அதே போல உள்கட்டமைப்பு, வேலைவாய்ப்புகளை ஊக்குவிப்பது தொடர்பான அறிவிப்புகளை வெளியிடுவார் என சொல்லப்படுகிறது.

மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவதை ஒட்டி சனிக்கிழமையான இன்று இந்திய பங்குச் சந்தைகள் செயல்படும் என அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் மும்பை பங்கு சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் பங்குச்சந்தை தொடங்கியவுடன் 136 புள்ளிகள் உயர்ந்து ஏற்றத்துடன் வர்த்தகமானது. அதேபோல தேசிய பங்கு சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 20 புள்ளிகள் உயர்ந்து வர்த்தகமானது. குறிப்பாக காலை 9:30 மணி அளவில் நிஃப்டி 23, 586 புள்ளிகள் என்ற உச்சத்தை தொட்டு வர்த்தகமானது. அதேபோல மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் காலை 9:30 மணி அளவில் 77 , 780 புள்ளிகள் என்று அளவில் வர்த்தகமானது.
தொடர்ந்து பங்குச் சந்தைகள் ஏற்ற இறக்கத்துடன் காணப்படுகின்றன. பட்ஜெட் அறிவிப்புகள் வெளியாக வெளியாக நாம் பங்குச்சந்தையில் மாற்றங்களை காண முடியும். குறிப்பாக பங்கு சந்தையில் எனர்ஜி மற்றும் ரியல் எஸ்டேட் துறை சார்ந்த நிறுவனங்களின் பங்குகள் ஏற்றத்துடன் இன்று வர்த்தகத்தை தொடங்கின. எனர்ஜி செக்டாருக்கு மத்திய அரசு அதிக நிதி ஒதுக்கீடு செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுவதால் இந்த துறை சார்ந்த நிறுவனங்களின் பங்குகள் ஏற்றுத்துடனே காணப்படுகின்றன.
அதேபோல எண்ணெய் மற்றும் எரிவாயு, நிதி மற்றும் நிப்டி பேங்க் குறியீடுகளும் ஏற்றத்தில் தான் இருக்கின்றன. குறிப்பாக புதுப்பிக்கத்தக்க எரிசக்தி துறையில் செயல்பட்டு வரக்கூடிய Inox Wind, Inox Wind Energy, KPI Green, Suzlon ஆகிய நிறுவனங்களின் பங்குகளும், பாதுகாப்பு துறையில் செயல்பட்டு வரக்கூடிய BEML , Hindustan Aeronautics நிறுவனங்களின் பங்குகளும் இன்று ஏற்றத்துடன் காணப்படுகின்றன.
கடந்த நான்கு மாத காலமாக இந்திய பங்குச் சந்தைகள் சரிவிலேயே இருக்கின்றன. மத்திய பட்ஜெட்டில் வெளியாகும் அறிவிப்புகளே பங்குச்சந்தையை மீண்டும் ஏற்றத்திற்கு கொண்டு செல்லும் என முதலீட்டாளர்கள் நம்பி இருக்கின்றனர்.
Story written by Devika
More From GoodReturns

இந்தியர்களே தங்கம் விலையை பத்தின கவலையே இனி வேண்டாம்!! ரெடியானது நாட்டின் பெரிய தங்க சுரங்கம்!!

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

தங்கம், வெள்ளி விலை அடுத்த 1 வருடத்தில் எங்கிருக்கும்? இப்போது முதலீடு செய்வது லாபமா? நஷ்டமா?

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!



Click it and Unblock the Notifications