பொதுவாக நம் நாட்டில் மார்ச் முதல் மே வரையிலான காலத்தில் வெப்பநிலை அதிகமாக இருக்கும். சூரியனின் அனல் கக்கும் வெப்பத்தால் கோடைக்காலம் தொடங்கி விட்டாலே ஏசி உள்ளிட்ட குளிர்விக்கும் பொருட்களுக்கான தேவை அதிகரிக்கும். ஏசி தயாரிப்பு நிறுவனங்கள் தங்களது விற்பனைக்கு இந்த கோடைக்காலத்தையே மலை போல் நம்பி இருக்கின்றன. இந்த சூழ்நிலையில், இந்திய வானிலை மையத்தின் ஒரு அறிக்கை ஏசி தயாரிப்பு நிறுவனங்களுக்கு விற்பனை குறித்து பெரிய நம்பிக்கையை கொடுத்துள்ளது.
பொதுவாக பிப்ரவரி மாதத்தில் பெரிய அளவில் வெப்பத்தின் தாக்கம் இருக்காது. ஆனால் கடந்த பிப்ரவரியில் வழக்கத்துக்கு மாறாக வெப்பம் அதிகமாக இருந்தது. இந்த சூழ்நிலையில், கோடைக்காலத்தில் வழக்கத்தை விட அதிக வெப்பநிலை இருக்கும் என்று இந்திய வானிலை மையம் கணித்துள்ளது. இது தொடர்பாக, 2025 பிப்ரவரி 28ம் தேதியன்று இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கையில், மார்ச் முதல் மே வரையிலான மாதங்களில் இந்தியாவின் வடமேற்கு மற்றும் தீபகற்பத்தின் சில பகுதிகளை தவிர்த்து, பெரும்பாலான பகுதிகளில் இயல்பை விட அதிக வெப்பநிலை இருக்கும் என்று தெரிவித்துள்ளது.

குறிப்பாக, மத்திய மற்றும் வடக்கு பகுதிகளில் வெப்பஅலை நாட்கள் எண்ணிக்கையில் அதிகரிப்பு ஏற்படும் என்று வானிலை மையம் எச்சரித்துள்ளது. இந்திய வானிலை மையத்தின் கணிப்பை தொடர்ந்து, கோடைக்கால தேவை அதிகரிக்கும் என்ற எதிர்ப்பார்ப்புகளின் காரணமாக, நேற்று மும்பை பங்குச் சந்தையில் ஏசி நிறுவன பங்குகளின் விலை 9 சதவீதம் வரை உயர்ந்தது. பங்குச் சந்தையில் நேற்று வர்த்தகத்தின் இடையே ப்ளூ ஸ்டார் லிமிடெட் பங்கு விலை 9 சதவீதம் வரை உயர்ந்து ரூ.2,216.70ஐ எட்டியது.
மற்றொரு ஏசி தயாரிப்பு நிறுவனமான வோல்டாஸ் பங்கு விலை 3.33 சதவீதம் உயர்ந்து ரூ.1,410.95வரை சென்றது. ஜான்சன் கண்ட்ரோல்ஸ்-ஹிட்டாச்சி ஏர் கண்டிஷனிங் இந்தியா லிமிடெட் பங்கு விலை 2 சதவீதம் உயர்ந்து அன்றைய அதிகபட்சமான ரூ.1,680ஐ தொட்டது. வலுவான கோடைக் காலம் ஏர் கண்டிஷனிங் துறையில் உள்ள நிறுவனங்களுக்கு அதிக வருவாய் அளிக்கக்கூடும் என்பதால், முதலீட்டாளர்கள் வெப்பநிலை போக்குகள் மற்றும் நுகர்வோர் செலவு முறைகளை உன்னிப்பாக கவனித்து வருகின்றனர்.
Story Written :Subramanian
Disclaimer: This article is strictly for informational purposes only. It is not a solicitation to buy, sell in precious metal products, commodities, securities or other financial instruments. Greynium Information Technologies Pvt Ltd, its subsidiaries, associates and the author of this article do not accept culpability for losses and/or damages arising based on information in this article.
More From GoodReturns

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

தங்கம் விலை ரூ.2 லட்சத்தை நெருங்குமா?பீட்டர் ஷிஃப் கொடுத்த மெகா வார்னிங்! ஏப்ரலில் எகிற போகுது?

FASTag விதிகளில் மாற்றம்: புதிதாக கொண்டு வரப்பட்ட 72 மணி நேர விதி..!! வாகன ஓட்டிகளே உஷார்..!!

பெட்ரோல் விலை லிட்டர் ரூ.119, டீசல் விலை லிட்டர் ரூ.192: உண்மையை போட்டுடைத்த அரசு..!!

தங்கம் தந்த டபுள் சர்ப்பிரைஸ்: ஈரான் போரால் நடக்கும் ஒரே நன்மை..!! இனி ஒவ்வொரு நாளும் முக்கியம்..!!

குறைந்த உதயநிதி ஸ்டாலின் சொத்து மதிப்பு! பல மடங்கு எகிறிய கிருத்திகாவின் சொத்து - பின்னணி என்ன?

TCS நிறுவனத்திற்கு பெரிய கும்பிடு போட்டு வெளியேறும் ஊழியர்கள்!! என்ன நடக்குது?

அட்சய திருதியைக்கு தங்கம் வாங்குற பிளான் இருக்கா? இப்படி செஞ்சா குறைஞ்ச விலைக்கு தங்கம் கிடைக்கும்

90ஸ் கிட்ஸ்களின் Gmail பிரச்சினைக்கு தீர்வு தந்த சுந்தர் பிச்சை: பழைய ஐடி-க்கு குட்பை..!!

கேஸ் இணைப்பே வேண்டாம் என முடிவெடுக்கும் மக்கள்: LPG பிரச்சினைக்கு மத்தியில் ஏற்பட்டுள்ள மேஜர் மாற்றம்



Click it and Unblock the Notifications