பங்கு சந்தையில் முதலீடு செய்வதில் பலருக்கும் ஆர்வமிருக்கும். ஆனால் எந்த மாதிரியான பங்குகளை தேர்வு செய்வது என்பதில் குழப்பம் இருக்கலாம். ஆக அதுபோன்ற சமயங்களில் நிபுணர்களின் பரிந்துரை ஆராய்ந்து அதனை பின்பற்றலாம்.
எனினும் அதனை பற்றி முழுமையாக தெரியாமல் முதலீடு செய்வது மிக தவறான தொரு விஷயமாகும். ஆக நிபுணர்களே ஒரு பங்கினை வாங்க பரிநதுரை செய்தாலும், ஏன் இந்த பங்கினை வாங்க பரிந்துரை செய்கிறார்கள், என்ன காரணம் ? அது சரியான காரணமா? என்பதையும் பார்க்க வேண்டும்.
பங்கு பரிந்துரை
அந்த வகையில் தற்போது ஐசிஐசிஐ செக்யூரிட்டீஸ் நிறுவனம் சில பங்குகளை வாங்க பரிந்துரை செய்துள்ளது.
அதில் சுப்ரஜித் இன்ஜினியரிங்
பஜாஜ் பைனான்ஸ்
ஹீரோ மோட்டோகார்ப்
சுப்ரஜித் இன்ஜினியரிங் & பஜாஜ் பைனான்ஸ் இலக்கு
சுப்ரஜித் இன்ஜினியரிங் பங்கின் இலக்கு விலை - 388 ரூபாயாகும், இதனை 332 - 348 ரூபாய் என்ற லெவலில் வாங்க பரிந்துரை செய்துள்ளது. இதற்கு ஸ்டாப் லாஸ் ஆக 314 ரூபாயினையும் நிர்ணயம் செய்துள்ளது.
இதே பஜாஜ் பைனான்ஸ் நிறுவனத்தின் இலக்கு விலை - 6470 ரூபாயாகும், இதனை 5,850 - 5940 ரூபாய் என்ற லெவலில் வாங்க பரிந்துரை செய்துள்ளது. இதற்கு ஸ்டாப் லாஸ் ஆக 5490 ரூபாயினையும் நிர்ணயம் செய்துள்ளது.
ஹீரோ மோட்டோகார்ப்
இதே நாட்டின் முன்னணி இரு சக்கர வாகன விற்பனையாளரான ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின், இலக்கு விலை - 3350 ரூபாயாகும், இதனை 2825 - 2865 ரூபாய் என்ற லெவலில் வாங்க பரிந்துரை செய்துள்ளது. இதற்கு ஸ்டாப் லாஸ் ஆக 2568 ரூபாயினையும் நிர்ணயம் செய்துள்ளது.
இப்பங்குகளின் இலக்கு விலையானது மூன்று மாதத்தில் எட்டலாம் என பரிந்துரை செய்துள்ளது. இது ஜூலை 12 அன்று வெளியிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.
ஆட்டோமொபைல் துறை
ஆட்டோமொபைல் துறையினை பொறுத்தவரையில் வரவிருக்கும் மாதங்களில் நல்ல செயல்பாட்டினை காணலாம் என தரகு நிறுவனம் எதிர்பார்க்கிறது. இதற்கிடையில் தான் சுப்ரஜித் இன்ஜினியரிங் பங்கினை வாங்கலாம் என பரிந்துரை செய்துள்ளது.
பஜாஜ் பைனான்ஸ்
பஜாஜ் பைனான்ஸ் நிறுவனத்தினை பொறுத்தவரையில் தற்போதைய லெவலில் இருந்து மீண்டும் ஏற்றம் காணலாம். இதன் அடிப்படை மிக வலுவாக காணப்படும் நிலையில், இப்பங்கின் விலையானது ஏற்றம் காணலாம்.
ஹீரோ மோட்டோ கார்ப் தேவை
ஹீரோ மோட்டோ கார்ப்பினை பொறுத்தவரையில் வாகனங்களுக்கான தேவையானது வலுவான மீட்சியினை காணலாம். இது இந்த நிறுவனத்தின் வளர்ச்சியினை ஊக்குவிக்கலாம். இப்பங்கினில் ஒபன் இன்ட்ரஸ்ட் விகிதம் அதிகரித்து வரும் நிலையில், இதுவும் இப்பங்கினை அதிகரிக்க தூண்டலாம்.
Disclaimer : Greynium Information Technologies, the author are not liable for any losses caused as a result of decisions based on the article. Tamil.Goodreturns.in advises users to check with experts before taking any investment decisions.
More From GoodReturns

வெறும் ரூ.200 போதும்! உங்கள் மகளின் எதிர்காலத்திற்கு ரூ.40 லட்சம் சேமிக்கலாம் - எப்படி தெரியுமா?

அந்த 20 நிமிடங்கள்: இந்திய பங்குச்சந்தையில் நடந்த மேஜிக்!! முதலீட்டாளர்கள் ஹேப்பி!!

EPF முதல் SSY வரை: உங்கள் பணத்திற்கு அதிக லாபம் தரும் சிறந்த முதலீடு எது?

ஒரே இடத்தில் முதலீடு செய்யாதீங்க! தற்போதைய சூழலில் ரூ.25,000-ஐ எப்படி, எங்கு செய்வது?

வெள்ளி விலை: கிணற்றில் போட்ட கல் போல நிற்கிறது..!! முதலீட்டாளர்கள் என்ன செய்யலாம்..?

கழுதை மேச்சா ரூ.50 லட்சம்!! அதுவும் அரசாங்கமே தருது!! வேற என்ன வேணும்? ஆரம்பிக்கலாமா?

பெண்களே உங்களோட மியூச்சுவல் ஃபண்டு முதலீடு எப்படி இருக்க வேண்டும்? நிபுணர்கள் வழங்கும் டிப்ஸ்

பெண்களே இந்த மகளிர் தினத்துல இருந்து இதையெல்லாம் செஞ்சீங்கனா உங்க எதிர்காலம் வளமா இருக்கும்!!

10 ஆண்டுகளில் செல்வத்தை உயர்த்துவது எது? PPF-ன் நிலையான வட்டியா அல்லது SIP-ன் சந்தை லாபமா?

தங்கம் விலையில் திடீர் மாற்றம்.. மத்திய கிழக்கு போர் பதற்றம் செய்யும் அட்டகாசம்..!!

பங்குச்சந்தை ஏற்றத்தாழ்வு: முதலீட்டாளர்களுக்கு ஆபத்தா,அதிர்ஷ்டமா? SIP-யோடு லம்ப்சம் செய்யலாமா?



Click it and Unblock the Notifications