தங்கத்தை மிஞ்சிய வெள்ளி!! வரலாறு காணாத விலை உயர்வு!! இதுக்கு இல்லையா சார் ஒரு END!!

இந்தியாவில் தங்கம் தான் விலை உயர்ந்து சாமானிய மக்களுக்கு கலக்கத்தை ஏற்படுத்துகிறது என்றால் அதற்கு போட்டியாக வெள்ளியும் விலை உயர்வு கண்டு வருகிறது. நடப்பு ஆண்டில் தங்கத்தை விட வெள்ளியின் மதிப்பு அதிகரித்திருப்பது தெரிய வந்துள்ளது.

செவ்வாய்க்கிழமை Multi Commodity Exchange (MCX) வர்த்தகத்தில் வெள்ளி விலை உயர்ந்தது. சர்வதேச சந்தை நிலவரம் மற்றும் வலுவான தேவை காரணமாக, வெள்ளி அதன் உச்சபட்ச அளவை எட்டியுள்ளது. MCX-இல் ஒரு கிலோ வெள்ளி ரூ.1,26,200-க்கு மேல் 0.5% உயர்ந்து வர்த்தகமானது. முன்னதாக, இது ரூ.1,26,730 என்ற புதிய சாதனையை எட்டியிருந்தது.

தங்கத்தை மிஞ்சிய வெள்ளி!! வரலாறு காணாத விலை உயர்வு!! இதுக்கு இல்லையா சார் ஒரு END!!

2025-ஆம் ஆண்டு தொடக்கம் முதல் இதுவரை வெள்ளி விலை எம்சிஎக்ஸ் வர்த்தகத்தில் 45% மேல் உயர்வு கண்டுள்ளது. இது MCX தங்கத்தின் 42% உயர்வையும், சென்செக்ஸின் 3.6% உயர்வையும் மிஞ்சியுள்ளது. சர்வதேச சந்தையில் ஒரு அவுன்ஸ் வெள்ளி விலை சுமார் $41.2 என்ற அளவில் வர்த்தகமானது. இது 2011-க்குப் பிறகு மிக உயர்ந்த அளவாகும்.

அமெரிக்க ஃபெடரல் ரிசர்வ் வட்டி விகிதக் குறைப்பு குறித்த எதிர்பார்ப்புகள், விலைமதிப்பற்ற உலோகங்களுக்கான முதலீட்டாளர்களின் ஆர்வத்தை அதிகரித்துள்ளன. இது தான் தங்கம் மற்றும் வெள்ளி விலை உயர்வுக்கு முக்கிய காரணமாக இருக்கிறது. அமெரிக்க மத்திய வங்கி 25 அடிப்படைப் புள்ளிகள் வரை வட்டி குறைப்பு மேற்கொள்ளலாம் என வர்த்தகர்கள் கருதுகின்றனர். இது வெள்ளி விலை உயர்வுக்கு வித்திட்டுள்ளது.

அமெரிக்க டாலர் குறியீடு 97.323 ஆகக் குறைந்துள்ளது. இது ஜூலை 24-க்குப் பிறகு மிக பலவீனமான அளவாகும். எனவே வெள்ளி தங்கம் போன்றவற்றை நோக்கி பலரும் படையெடுக்கின்றனர். இதுவே இவற்றின் விலை உச்சத்தை எட்ட காரணம்.

உலகளாவிய வெள்ளித் தேவையில் பாதிக்கும் மேல் தற்போது தொழில்துறை பயன்பாடுகளில் இருந்து வருகிறது. குறிப்பாக சோலார் பேனல்கள், மின்சார வாகனங்கள் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் துறையில் இது அதிகரித்து வருகிறது. 2025-இல் ஐந்தாவது ஆண்டாக தேவையை விட சப்ளை குறைவாக உள்ளது, இதனால் சந்தையில் பற்றாக்குறை நிலவுகிறது.

2025-இன் முதல் பாதியில் வெள்ளி தொடர்புடைய ETF-கள் சுமார் 95 மில்லியன் அவுன்ஸ் நிகர உள்வரவுகளைப் பதிவு செய்தன. இது 2024-இன் முழு ஆண்டு மொத்த அளவை விஞ்சியுள்ளது. உலகளாவிய வெள்ளி ETF முதலீடுகள் தற்போது 1.13 பில்லியன் அவுன்ஸ் என்ற சாதனை அளவை எட்டியுள்ளன. இதன் மதிப்பு $40 பில்லியனுக்கும் அதிகமாகும் என்று Axis மியூச்சுவல் ஃபண்ட் தெரிவித்துள்ளது.

உலகளாவிய வெள்ளியில் 30% க்கும் குறைவானது முதன்மை வெள்ளிச் சுரங்கங்களில் இருந்து வெட்டி எடுக்கப்படுகிறது. மேலும் ஒட்டுமொத்த உற்பத்தியில் வரையறுக்கப்பட்ட வளர்ச்சியே உள்ளது. இதனால் சப்ளை தொடர்ந்து குறைவாகவே உள்ளது. ரிலையன்ஸ் செக்யூரிட்டீஸின் மூத்த ஆராய்ச்சி ஆய்வாளர் ஜிகர் திரிவேதி கூறுகையில், "ஃபெடரல் வட்டி குறைப்பு எதிர்பார்ப்புகள், புவிசார் அரசியல் பதட்டங்கள் மற்றும் பலவீனமான டாலர் ஆகியவை வெள்ளி விலை உயர்வுக்கு காரணம். அதே நேரத்தில், வலுவான தொழில்துறை தேவை மற்றும் குறைந்த சப்ளை ஆகியவை விலைகளை உயர்த்துகின்றன என்கிறார்.

திரிவேதி MCX வெள்ளி விலை குறுகிய காலத்தில் ஒரு கிலோவுக்கு ரூ. 1,30,000 – 1,33,000 வரை செல்லும் என்றும், ஆண்டு இறுதி இலக்கு ரூ.1,40,000 ஆக இருக்கும் என்றும் எதிர்பார்க்கிறார். இதற்கிடையில், Axis செக்யூரிட்டீஸ் 2025-இல் உலகளாவிய வெள்ளி விலைகள் ஒரு அவுன்ஸுக்கு $40–42 வரம்பில் இருக்கும் என்று கூறுகிறது. வெள்ளி விலையில் குறுகிய கால ஏற்ற இறக்கங்களை நிராகரிக்க முடியாது என்றாலும், ஆய்வாளர்கள் பொதுவாகவே வெள்ளி விலை இனி தொடர்ந்து உயரும் என்றே கூறுகின்றனர் தொழில்துறைக்கான தேவை அதிகரிப்பதும் சப்ளை குறைவாக இருப்பதுமே இதற்கு காரணமாக கூறுகின்றனர்.

Disclaimer: இந்த செய்தியில் இருக்கும் கருத்துகள் மற்றும் பரிந்துரைகள் தனிப்பட்ட ஆய்வாளர்கள் அல்லது நிறுவனங்களின் சொந்த கருத்துகளாகும், இவை Goodreturns.in அல்லது Greynium Information Technologies Private Limited (இவை இரண்டும் "நாங்கள்" என குறிப்பிடப்படுகிறது) ஆகியவற்றின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை. உள்ளடக்கத்தின் துல்லியம், முழுமை அல்லது நம்பகத்தன்மைக்கு நாங்கள் எந்தவொரு உத்தரவாதம் அளிக்கவோ, அங்கீகரிக்கவோ அல்லது பொறுப்பேற்கவோ மாட்டோம். மேலும், முதலீட்டு ஆலோசனை அல்லது பங்குகளை வாங்கவோ விற்கவோ எந்த வித தூண்டுதலையும், ஊக்கத்தையும் நாங்கள் வழங்கவில்லை. அனைத்து தகவல்களும் புரிதல் நோக்கங்களுக்காக மட்டுமே வழங்கப்படுகின்றன. எந்தவொரு முதலீட்டு முடிவுகளை எடுப்பதற்கு முன்பும், அங்கீகரிக்கப்பட்ட நிதி ஆலோசகர்களிடமிருந்து தனிப்பட்ட முறையில் சரிபார்க்கப்பட வேண்டும்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+