பங்குச் சந்தையில் ஒருவர் நேரடியாக முதலீடு செய்வதை காட்டிலும் மியூச்சுவல் ஃபண்டு நிறுவனங்கள் வாயிலாக முதலீடு செய்வது சிறந்ததாக கருதப்படுகிறது. ஏனென்றால் மியூச்சுவல் ஃபண்டுகள் நல்ல ஆய்வு செய்து பங்குகளில் முதலீடு செய்கின்றன. இதனால் முதலீட்டாளர்களுக்கு ரிஸ்க் குறைவு. நீண்ட கால அடிப்படையில் மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்தால் நல்ல வருமானம் கிடைக்கும் என்பதால் பலரும் மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்வது அதிகரித்து வருகிறது. குறிப்பாக எஸ்ஐபி வழிமுறையில் பலரும் மியூச்சுவல் ஃபண்டு திட்டங்களில் முதலீடு செய்து வருகின்றனர்.
புதிய உச்சம்
கடந்த ஏப்ரல் மாதத்தில் மியூச்சுவல் ஃபண்டு திட்டங்களில் எஸ்ஐபி பங்களிப்பு இதுவரை இல்லாத அளவுக்கு புதிய உச்சத்தை தொட்டுள்ளது. இந்திய மியூச்சுவல் ஃபண்டுகள் சங்கம் (ஏஎம்எஃப்ஐ) வெளியிட்டுள்ள தரவுகளின்படி, 2025 ஏப்ரல் மாதத்தில் மியூச்சுவல் ஃபண்டு திட்டங்களில் எஸ்ஐபி பங்களிப்பு ரூ.26,632 கோடியை எட்டியது. இது ஒரு மாதத்தில் இதுவரை இல்லாத அதிகபட்சமாகும்.

இது தொடர்பாக 35 நார்த் வென்ச்சர்ஸின் நிறுவனர் மற்றும் மேலாண்மை இயக்குனர் மிலன் சர்மா கூறுகையில், 2025 ஏப்ரலில் 1.30 கோடிக்கும் அதிகமான செயல்படாத கணக்குகள் மூடப்பட்ட போதிலும், எஸ்ஐபிகள் மூலம் இதுவரை இல்லாத சாதனையாக ரூ.26,632 கோடி திரட்டப்பட்டுள்ளது. இது இந்திய முதலீட்டாளர்களிடையே வளர்ந்து வரும் நிதி ஒழுக்கம் மற்றும் முதிர்ச்சியின் சக்தி வாய்ந்த சமிக்ஞையாகும்.
எஸ்ஐபி கணக்குகள்
ஒரே மாதத்தில் 46 லட்சம் புதிய கணக்குகள் சேர்க்கப்பட்டதன் மூலம், செயலில் உள்ள எஸ்ஐபி கணக்குகளின் எண்ணிக்கை 8.38 கோடியாக உயர்ந்துள்ளது. இது தனிநபர் பங்கேற்பாளர்களின் செல்வத்தை உருவாக்குவதற்கான நீண்ட கால அர்ப்பணிப்பை பற்றி அதிகம் பேசுகிறது என்று தெரிவித்தார்.
கடந்த ஏப்ரல் மாதத்தில் செயல்படாத கணக்குகள் மற்றும் முதிர்ச்சி அடைந்த கணக்குகள் உள்பட மொத்தம் 1.36 கோடி எஸ்ஐபி கணக்குகள் நீக்கப்பட்டன. இருப்பினும், முந்தைய மார்ச் மாதத்தை காட்டிலும் கடந்த ஏப்ரலில் எஸ்ஐபி கணக்குகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. மார்ச் மாதத்தில் 8.11 கோடியாக இருந்த எஸ்ஐபி கணக்குகளின் எண்ணிக்கை ஏப்ரலில் 8.38 கோடியாக உயர்ந்துள்ளது. இது நீண்ட கால செல்வத்தை உருவாக்குவதில் முதலீட்டாளர்களின் தொடர்ச்சியான ஆர்வத்தை வெளிப்படுத்துகிறது.
சொத்து மதிப்பு
கடந்த மாதத்தில், மியூச்சுவல் ஃபண்டு நிறுவனங்களின் பங்கு சார்ந்த பரஸ்பர நிதி திட்டங்களில் முதலீடு குறைந்துள்ளது. இருப்பினும், மியூச்சுவல் ஃபண்டு துறை ஒட்டு மொத்த அளவில் வளர்ச்சி கண்டுள்ளது. கடந்த ஏப்ரல் மாத இறுதி நிலவரப்படி, மியூச்சுவல் ஃபண்டு நிறுவனங்கள் நிர்வகிக்கும் மொத்த சொத்து மதிப்பு ரூ.70 லட்சம் கோடி என்று புதிய சாதனை அளவை எட்டியுள்ளது. இது 2025 மார்ச் இறுதியில் ரூ.65.74 லட்சம் கோடியாக இருந்தது.
பக்காவா ஸ்கெட்ச் போட்ட சாந்தி ஸ்பின்டெக்ஸ்... நான்கே நாளில் மொத்தமாக கைமாறும் நிறுவனம்..
Disclaimer: This article is strictly for informational purposes only. It is not a solicitation to buy, sell in precious metal products, commodities, securities or other financial instruments. Greynium Information Technologies Pvt Ltd, its subsidiaries, associates and the author of this article do not accept culpability for losses and/or damages arising based on information in this article.
More From GoodReturns

10 ஆண்டுகளில் செல்வத்தை உயர்த்துவது எது? PPF-ன் நிலையான வட்டியா அல்லது SIP-ன் சந்தை லாபமா?

ஈரான் நாட்டின் ராஜதந்திரம்.. கண்ணை மூடிக்கொண்டு செலவு செய்கிறாரா டிரம்ப்..?

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!



Click it and Unblock the Notifications