எஸ்ஜேவிஎன் நிறுவனம் பெரிய அளவிலான சோலார் மின்சார திட்டத்தை கைப்பற்றியதாக அறிவித்ததைத் தொடர்ந்து, வெள்ளிக்கிழமை வர்த்தகத்தில் இருந்து இந்நிறுவனப் பங்குகள் 13.3% அதிகரித்து 160 ரூபாயை எட்டி முதலீட்டாளர்களுக்கு பெரும் லாபத்தைக் கொடுத்தது. இதற்கு ஏற்றார் போல் சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி குறியீடும் அதிகப்படியான வளர்ச்சியைப் பதிவு செய்து முதலீட்டாளர்களுக்கு ஓரே நாளில் 7 லட்சம் கோடி ரூபாய் அளவிலான லாபத்தைக் கொடுத்தது.
வியாழக்கிழமை, மிசோரம் அரசின் தார்சோ லுய் பம்ப்டு ஸ்டோரேஜ் திட்டத்திற்கான விருப்பக் கடிதத்தை எஸ்ஜேவிஎன் (SJVN) பெற்றதாகத் தெரிவித்தது. முதல் முறையாக SJVN நிறுவனம் மிசோரம் மாநிலத்தில் தனது முதல் திட்டத்தைப் பெற்றுள்ளதால் இது இந்நிறுவனத்திற்கு மிகவும் ஸ்பெஷல்.

Satluj Jal Vidyut Nigam என்பதன் சுருக்கம் தான் இந்த SJVN, இது மத்திய அரசும், ஹிமாச்சலப்பிரதேச அரசும் இணைந்து உருவாக்கிய ஒரு நிறுவனமாகும். இங்கு 2,400 MW திறன் கொண்ட நீர்மின் நிலையம் உள்ளது.
2024 ஜூன் 30 நிலவரப்படி, மத்திய அரசு 59.92% பங்குகளையும், ஹிமாச்சல் பிரதேச அரசு 26.85% பங்குகளையும், மீதமுள்ள 13.23% பங்குகளை பொது பங்குதாரர்கள் வைத்திருந்தனர்.
எஸ்ஜேவிஎன் பங்கு, கணிசமான ஆர்டர்களை பெற்றது மூலம் மும்பை பங்குச்சந்தையில் தொடர்ந்து உயர்ந்து வருகிறது. 2023 மார்ச்சில் SJVN நிறுவனத்தின் ஒரு பங்கு 30.40 ரூபாயாக இருந்த நிலையில், தற்போது 155 ரூபாயை எட்டியுள்ளது, இது 410% வளர்ச்சியாகும்.
SJVN கைப்பற்றிய சோலார் மின் திட்டத்தின் மொத்த செலவு 13,947.50 கோடி ரூபாய் என மதிப்பிடப்பட்டு உள்ளது. இந்த திட்டம் எட்டு 300 மெகாவாட் யூனிட்களைக் கொண்ட ஒரு ஓன்-ஸ்ட்ரீம் குலோஸ்டு-லூப் பம்ப்டு ஸ்டோரேஜ் வசதியாக இருக்கும். இது ஆண்டுக்கு 4,993.20 மில்லியன் யூனிட் மின்சாரத்தை உற்பத்தி செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நீர் மின்நிலையத்தின் மேல்நிலை நீர்த்தேக்கத்திற்குத் தண்ணீர் பம்ப் செய்ய ஆண்டுக்கு 6,331.66 மில்லியன் யூனிட் மின்சாரம் தேவைப்படும். இந்த திட்டம் 72 மாதங்களில் நிறைவு செய்யப்படும் என்று நிறுவனத்தின் பங்குச்சந்தை கோப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜூன் மாதம், எஸ்ஜேவிஎன், அதன் துணை நிறுவனமான எஸ்ஜேவிஎன் கிரீன் எனர்ஜி லிமிடெட் (SGEL) மூலம், ஏஎம் கிரீன் அம்மோனியா (இந்தியா) பிரைவேட் லிமிடெட் உடன் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications