மும்பை: இந்திய பங்குசந்தையில் ஸ்மால் கேப் மற்றும் மிட் கேப் நிறுவனங்கள் பெரிய திருத்தத்திற்கு உள்ளாகியுள்ளன. இதன் காரணமாக நேற்றைய தினம் ஸ்மால் கேப் பங்குகள் 5% வரை சரிவைக் கண்டன முதலீட்டாளர்கள் பல லட்சங்களை இழக்க நேரிட்டது.
இந்த சூழலில் இன்றைய தினம் ஸ்மால் கேப் பங்குகள் 3% வரை மீண்டு வந்துள்ளன. எனவே ஸ்மால் கேப் பங்குகளின் போக்கு எப்படி இருக்கும் என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

சந்தை மூலதனம் 5000 கோடி வரை இருக்கும் நிறுவனங்களின் பங்குகள் ஸ்மால் கேப் பங்குகள் என அழைக்கப்படுகின்றன. இந்திய பங்குச்சந்தையில் ஸ்மால் கேப் நிறுவனங்கள் அண்மை காலமாக நல்ல வளர்ச்சியை பெற்றன. ஐபிஓ வெளியீட்டில் கூட ஸ்மால் கேப் நிறுவன பங்குகள் லாபத்தை ஈட்டின.
ஆனால், மதிப்பீடுகளை தாண்டி ஸ்மால் கேப் பங்குகள் செல்வது குறித்து செபி தலைவர் எச்சரிக்கை விடுத்தார். ஸ்மால் கேப் பங்குகளின் அதிகப்படியான வளர்ச்சி என்பது ஆபத்தானது, இதனை சரி செய்ய ஒழுங்குமுறைகளை மாற்ற இருப்பதாகவும் செபி தலைவர் கூறி இருந்தார்.
ஸ்மால் கேப் பங்குகள் தொடர்பான எச்சரிக்கையை அடுத்து மியூச்சுவல் பண்டு நிறுவனங்கள், தங்களின் முதலீட்டு போக்கை மாற்றின. இதனால் ஏற்பட்ட அச்சத்தில் பெரும்பாலானவர்கள் ஸ்மால் கேப் பங்குகளை விற்பனை செய்தனர். இந்த அழுத்தம் காரணமாக நேற்று (மார்ச்14) பங்குச்சந்தையில் கடும் வீழ்ச்சி காணப்பட்டது.
ஸ்மால் கேப் பங்குகளின் குறியீடு கடந்த 2 வாரத்தில் மட்டும் சுமார் 80 பில்லியன் டாலருக்கு சந்தை மதிப்பை இழந்தது, இதற்கு முக்கியமான காரணம் செபி தலைவரின் எச்சரிக்கை மட்டுமே. பெரும் முதலீட்டாளர்கள் முதல் நிறுவன முதலீட்டாளர்கள் வரையில் ஆபத்து உள்ள ஸ்மால் கேப் பங்குகளில் இருந்து முதலீட்டை வெளியேற்றினர்.
இதன் விளைவு எம்எஸ்சிஐ இந்தியா குறியீடு ஆசியாவை விட பின் தங்கியது, பல ஆண்டுகளாக படிப்படியாக ஏற்றம் கண்ட இந்தியாவின் எம்எஸ்சிஐ குறியீடு ஒரே நாளில் சரிவை கண்டது. இது இந்திய பங்குச்சந்தையின் செயல்திறனை குறைத்துவிட்டதாக நிபுணர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
இந்திய சந்தை மீது நம்பிக்கை குறைந்து வருவதால் முதலீட்டாளர்கள் அதிக மதிப்புள்ள பெரிய பங்குகளில் இருந்தும் பணத்தை எடுக்க தொடங்கியுள்ளனர். எனவே இந்திய பங்குச்சந்தை ஏற்ற இறக்கத்துடனே காணப்படும் என கணிக்கப்பட்டுள்ளது.
ஸ்மால் கேப் பங்குகளுக்கு எதிரான ஒழுங்குமுறை நடவடிக்கைகள் இந்தியாவில் மதிப்பீட்டு நடைமுறைக்கு சாட்சி என ப்ளூம்பெர்க் இன்டலிஜென்ஸ் நிறுவன ஆலோசகர் நிதின் சந்துகா கூறியுள்ளார். கடந்த ஆண்டில் ஸ்மால் கேப் பங்குகளில் கிடைத்த வளர்ச்சியை அடுத்து வெளிநாட்டு நிறுவனங்கள் கூட ஸ்மால் கேப் பங்குகளை முதலீட்டு வாய்ப்பாக மாற்றின.
ஆனால் தற்போது ஏற்பட்டிருக்கும் திருத்தம் காரணமாக அவர்கள் பங்குகளை விற்பதற்கான வாய்ப்புள்ளதால் ஸ்மால் கேப் பங்குகள் சரியும் வாய்ப்புள்ளதாக நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். ஆனால் முதலீட்டாளர்கள் இதனை பயன்படுத்தி நீண்ட கால முதலீடுகளை மேற்கொள்ளலாம் என்றும் யோசனை கூறுகின்றனர்.
இது போன்ற திருத்தங்கள் இந்திய பங்குச்சந்தையின் தரத்தை உயர்த்தும் என்றும் கூறுகின்றனர். சர்வதேச பங்குச்சந்தை தரகு நிறுவனமான ஜெஃபிரீஸ் இது ஆரோக்கியமானது என கருத்து தெரிவித்துள்ளது. இதனை பெரிய சரிவாக எடுத்துக் கொள்ள கூடாது என்றும் கருத்து கூறியுள்ளது.
Story written by: Devika
More From GoodReturns

பங்குச்சந்தை சரிவில் இந்த தப்பு மட்டும் பண்ணாதீங்க - முதலீட்டாளர்களுக்கு விஜய் கேடியா கூறும் டிப்ஸ்

இந்திய பங்குச்சந்தைக்கு பெரிய கும்பிடு போடும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள்..!! மீண்டும் வருவார்களா?

ஆசை காட்டி மோசம் செய்யும் தங்கம்..!! ஆறுதல் தந்த வெள்ளி..!! இப்போ வாங்கலாமா? வெயிட் பண்ணலாமா?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

கதறி கதறி அழும் வெள்ளி முதலீட்டாளர்கள்.. போட்ட காசு மொத்தமும் போச்சு..!! அடுத்தது என்ன..?

கண்ணாமூச்சி ஆடும் தங்கம்.. ரிவர்ஸ் எடுக்கும் வெள்ளி..! இந்த 2 பேர் எடுக்கிற முடிவுல தான் எல்லாமே இருக்கு!

பங்குச்சந்தைய விடுங்க பிட்காயின் முதலீட்டாளர்கள் நிலைமை இன்னும் மோசம்..! ஈரான் போர் யாரையும் விட்டு வைக்கல..!

தங்கம் விலை: 24 மணி நேரத்தில் 4 முறை மாறிய விலை!! ஈரான் போரால் நடக்கும் அக்கப்போர்!!

வீட்டிலிருந்தே பிசினஸ்.. கைநிறைய சம்பாத்தியம்!மாதம் லட்சங்களில் வருமானம் ஈட்டக்கூடிய சூப்பர் ஐடியா!

தங்கம் விலை இன்று கோயம்புத்தூரில் அதிரடி ஏற்றம்..! நகைப்பிரியர்களுக்கு ஷாக்..!

செல்வமகள் சேமிப்பு திட்டத்தில் வட்டி உயர்த்தப்படுகிறதா? மக்களவையில் முக்கிய தகவலை வெளியிட்ட அரசு…!!



Click it and Unblock the Notifications