கையில ரூ.10 லட்சம் இருக்கா! 2026ல் எதில் முதலீடு செய்தால் லாபம் கொட்டும்? நிபுணரின் சூப்பர் பார்முலா

இன்றைய முதலீட்டு உலகில் சரியான முடிவு எடுப்பது என்பது அவ்வளவு எளிதான விஷயமல்ல. பங்குச் சந்தையில் அசுர வேகத்தில் ஏறி இறங்கி வரும் ஸ்மால்கேப் பங்குகள், ஸ்திரமான அஸ்திவாரத்துடன் வளர்ந்து வரும் மிட் கேப் பங்குகள் அல்லது பாதுகாப்பு புகலிடமாக இருந்து வரும் தங்கம், பளபளக்கும் வெள்ளி, கடன் பத்திரங்கள், இதில் எந்த முதலீடு சிறந்தது. எதில் அதிக லாபம் பார்க்கலாம்.

தற்போதைய நிலையில் எந்த பங்குகள் அதிக லாபம் தரும் மற்றும் விலை மதிப்பற்ற உலோகங்களைப் எவ்வளவு போர்ட்ஃபோலியோவில் சேர்க்கலாம் என்பது குறித்த விளக்கம், நிச்சயம் முதலீட்டாளர்களுக்கு ஒரு ஐடியாவை கொடுக்கலாம். இது ஊக வணிகத்தை தவிர்த்து, வருமானம் பார்க்க உதவிகரமாகவும் இருக்கலாம்.

கையில ரூ.10 லட்சம் இருக்கா! 2026ல் எதில் முதலீடு செய்தால் லாபம் கொட்டும்?நிபுணரின் சூப்பர் பார்முலா

ஸ்மால் & மிட் கேப் பங்குகள் மீண்டு வருமா?
நடப்பு ஆண்டில் பல ஸ்மால்கேப் பங்குகள் மற்றும் மிட்கேப் பங்குகள் 40 - 50% வீழ்ச்சியை சந்தித்துள்ளன. சந்தை மீண்டும் உச்சத்தை எட்டிய பின்னரும் கூட பல பங்குகள் இன்னும் பின்தங்கியே காணப்படுகின்றன. இப்பங்குகள் 2026ம் ஆண்டிலாவது மீண்டு வருமா என்ற கேள்விக்கு, மக்கள் குறுகிய காலத்தில் கிடைத்த நல்ல வருமானத்தை பார்த்து, நீண்ட காலத்திற்கும் அதிக எதிர்பார்ப்புகள் வைத்துள்ளனர். அவர்கள் கடந்த இரண்டு ஆண்டுகளில் 50% வளர்ந்தால், அடுத்த 10 அண்டுகளுக்கும் 50% வளரும் என நினைக்கிறார்கள். ஆனால் ஒரு கட்டத்தில் நிறுவன அளவுகளின் தாக்கம்(Size) வந்து விடுகிறது.

ஒரு ஸ்மால்கேப் நிறுவனத்தால் எப்போதும் காலவரையின்றி வேகமாக வளர முடியாது என்பதை உணர வேண்டியது மிக அவசியம். வளர்ச்சி மிதமாகவே இருக்கும். இந்த காரணமாக ஸ்மால்கேப் மற்றும் மிட்கேப் பங்குகள் சற்று சரிவில் இருக்க காரணமாக அமைந்துள்ளது. பல ஸ்மால்கேப் நிறுவனங்களுக்கு போதிய வரலாறு இல்லை. மக்கள் நம்பிக்கையின் அடிப்படையில் முதலீடு செய்கிறார்கள். அந்த நம்பிக்கை குறையும் போது முதலீடுகள் வெளியேறலாம். இதனால் பங்கு விலைகள் சரிகின்றன. ஆக நீங்கள் தெளிவான எதிர்காலம் உள்ள பங்குகளை தேர்வு செய்ய வேண்டும். அதுவே வளர்ச்சி அதிகரிக்க அதிகரிக்க பங்கு விலையும் அதிகரிக்கும். வெறுமனே ஊகத்தின் அடிப்படையிலும், நம்பிக்கையின் அடிப்படையிலும் முதலீடு செய்வதை தவிர்த்தால் இழப்பு குறையும்.

ஒரு பாதுகாப்பான முதலீட்டாளர் ரூ.10 லட்சம் ரூபாய் முதலீட்டை செய்ய விரும்பினால், தங்கம், ஈக்விட்டிகள், வெள்ளி, கடன் பத்திரங்களில் எவ்வாறு ஒதுக்கீடு செய்வது?
நிபுணரின் கருத்தின் படி, ஈக்விட்டி முதலீடுகள் நேர்மறையாக இருக்கலாம். இதில் மிட்கேப் பங்குகள் சிறந்து வருமானம் கொடுக்கலாம். அதைத் தொடர்ந்து லார்ஜ் கேப், அதைத் தொடர்ந்து ஸ்மால் கேப் என சிறப்பாக இருக்கலாம். தங்கம் மற்றும் வெள்ளி மீதான பார்வையும் நேர்மறையாகவே உள்ளது. ஆனால் வெள்ளியை விட தங்கத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கிறோம். இது மத்திய வங்கிகள் தொடர்ந்து கொள்முதல் செய்வதை பொறுத்தது. மத்திய வங்கிகள் எப்போது தங்கத்தை விற்பனை செய்ய ஆரம்பிக்கின்றனவோ, அப்போது முதலீட்டாளர்களும் வெளியேற வேண்டும்.

அதற்கு கோடக்கின் மல்டி அசெட் அலகேஷன் ஃபண்ட் சிறந்த உதாரணமாக இருக்கும். இதில் ஈக்விட்டியில் சுமார் 55% பங்குகள், 20% தங்கம் மற்றும் வெள்ளி போன்ற விலைமதிப்பற்ற உலோகங்கள், 30% நிலையான வருமானம் தரும் கடன் பத்திரங்களிலும் முதலீடு செய்யப்படுகிறது. ஆக ஒருவருடைய இலக்கு, முதலீட்டுத் திறன், ரிஸ்க் எடுக்கும் திறன், முதலீட்டு காலம் இவற்றை அடிப்படையாகக் கொண்டு சரியான ஆலோசனையுடன் முதலீட்டைத் திட்டமிடுவது நல்லது.

கையில ரூ.10 லட்சம் இருக்கா! 2026ல் எதில் முதலீடு செய்தால் லாபம் கொட்டும்?நிபுணரின் சூப்பர் பார்முலா

ஏன் மிட்கேப்கள் முதலிடத்தில் உள்ளது? அதைத் தொடர்ந்தே லார்ஜ்கேப். ஸ்மால்கேப் என பரிந்துரைக்கப்படுகிறது?
வருவாய் வளர்ச்சி மற்றும் மதிப்பீடுகளின் அடிப்படையில் மிட்கேப் பங்குகள் முதலிடத்தில் உள்ளன. மிட்கேப் பங்குகளின் வருவாய் வளர்ச்சி லார்ஜ் கேப்களை விட அதிகமாக இருக்கும். மேலும் மதிப்பீடுகள் கிட்டத்தட்ட லார்ஜ்கேப்களைப் போலவே காணப்படுகின்றன.

ஸ்மால்கேப்களின் வருவாய் வளர்ச்சி லார்ஜ்கேப்களை விட அதிகமாக இருக்கும். ஆனால் அவற்றின் மதிப்பீடுகள் மிக அதிகமாக இருக்கின்றன. லார்ஜ் கேப் பங்குகள் அவற்றின் வரலாற்று சராசரியை சுற்றியே வர்த்தகமாகி வருகின்றன. மேலும் அவற்றின் வருவாய் வளர்ச்சியின் விலை நியாயமாகவே நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. ஆக அவற்றில் அதிகப்படியான முதலீடு செய்வதற்குப் போதுமான மலிவான நிலையில் இல்லை.

ஸ்மால்கேப் பங்குகளில் இருக்கும் ப்ரோத் (Froth) இப்போது முடிவுக்கு வந்து விட்டதா?
ஒரு சொத்தின் உண்மையான மதிப்பிலிருந்து விலகி, முதலீட்டாளர்களின் அதிகப்படியான நம்பிக்கை (Speculation) காரணமாக, அதன் விலை தேவையற்ற அளவுக்கு உயர்ந்து, ஒரு குமிழி (Bubble) உருவாகும் நிலையைக் குறிக்கிறது. இங்கு முதலீட்டாளர்கள் அடிப்படை உண்மைகளைப் பொருட்படுத்தாமல் அதிக விலைக்கு வாங்க முற்படுவார்கள். இந்த நிலையானது தற்போதும் குறிப்பிட்ட சில பங்குகளில் இருக்கிறது. இதுபோன்ற சில காரணிகளால் பங்குகளில் மதிப்பீடுகள் அதிகமாக உள்ளன. மேலும் அந்த அதிக மதிப்பீட்டு எதிர்பார்ப்புகளை வருவாய் வளர்ச்சியால் பூர்த்தி செய்ய முடியாது. ஆக ஸ்மால்கேப் -களில் சற்று ரிஸ்க் உள்ளது. மேலும் சில ஸ்மால்கேப் பங்குகளில் ஒரு சில முதலீட்டாளர்கள் அதிகளவிலான முதலீடுகளை செய்துள்ளனர். அவர்கள் அப்பங்குகளை திரும்ப விற்பனை செய்யும் போது, உண்மையான பங்கின் நிலவரம் புரியும்.

2025ல் வலுவான ஐபிஓ-க்கள் இருந்தது? ஐபிஓ சந்தையில் அதிகப்படியான உற்சாகத்தின் அறிகுறிகளைக் காண்கிறீர்களா?
இதற்கு நடுநிலையான ஒரு பதிலை கூறும் நிபுணர், பல ஐபிஓ-க்கள் உண்மையாக இருக்கலாம். ஆனால் மதிப்பீடுகள் மிக அதிகமாக உள்ளன. அத்தகைய ஐபிஓ-க்களை நாங்கள் தவிர்த்து விட்டோம். ஆக ஆராய்ச்சியாளர்கள் அவரவர் சொந்த முடிவின் அடிப்படையில் முடிவெடுக்க வேண்டும். மோசமான ஐபிஓ-க்கள் இருந்தால் அதைத் தவிர்த்து விடுவது நல்லது.

Disclaimer: இந்த செய்தியில் இருக்கும் கருத்துகள் மற்றும் பரிந்துரைகள் தனிப்பட்ட ஆய்வாளர்கள் அல்லது நிறுவனங்களின் சொந்த கருத்துகளாகும், இவை Goodreturns.in அல்லது Greynium Information Technologies Private Limited (இவை இரண்டும் "நாங்கள்" என குறிப்பிடப்படுகிறது) ஆகியவற்றின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை. உள்ளடக்கத்தின் துல்லியம், முழுமை அல்லது நம்பகத்தன்மைக்கு நாங்கள் எந்தவொரு உத்தரவாதம் அளிக்கவோ, அங்கீகரிக்கவோ அல்லது பொறுப்பேற்கவோ மாட்டோம். மேலும், முதலீட்டு ஆலோசனை அல்லது பங்குகளை வாங்கவோ விற்கவோ எந்த வித தூண்டுதலையும், ஊக்கத்தையும் நாங்கள் வழங்கவில்லை. அனைத்து தகவல்களும் புரிதல் நோக்கங்களுக்காக மட்டுமே வழங்கப்படுகின்றன. எந்தவொரு முதலீட்டு முடிவுகளை எடுப்பதற்கு முன்பும், அங்கீகரிக்கப்பட்ட நிதி ஆலோசகர்களிடமிருந்து தனிப்பட்ட முறையில் சரிபார்க்கப்பட வேண்டும்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+