ஸ்மால் கேப் எனப்படும் சிறிய மூலதன பங்குகள் , முதலீட்டாளர்களுக்கு பெருமளவு லாபத்தை அள்ளித்தருகின்றன. நாம் தேர்வு செய்யும் நிறுவனம், அந்த நிறுவனத்தின் தொழில் அமைப்பு, அது சார்ந்த துறை இவை எல்லாம் இதில் முக்கிய பங்கு வகிக்கிறது. அந்த வகையில் முதலீட்டாளர்களுக்கு லாபத்தை அள்ளித்தந்து மகிழ்ச்சியில் திளைக்க வைத்த ஒரு ஸ்மால் கேப் நிறுவனம் குறித்து பார்க்கலாம்.
டைகர் லாஜிஸ்டிக்ஸ் (Tiger Logistics) நிறுவனம் நடப்பு நிதியாண்டில் மட்டும் முதலீட்டாளர்களுக்கு 120% லாபம் தந்துள்ளது. சர்வதேச அளவில் சரக்குகளை கொண்டு சென்று சேர்க்கும் பணியில் ஈடுபடுகிறது டைகர் லாஜிஸ்டிக்ஸ் நிறுவனம்.

நாடு முழுவதும் வலுவான இருப்பை கொண்டுள்ளது. வாகனம், பொறியியல், நூல்கள், ஜவுளி, மருந்து போன்றவற்றை டெலிவரி செய்யும் பணியில் 22 ஆண்டுகளுக்கும் மேலாக அனுபவம் பெற்றுள்ள நிறுவனம். கடந்த 2000ஆம் ஆண்டு நிறுவப்பட்டதில் இருந்து வட இந்தியாவில் சிறந்த கஸ்டம் ஹவுஸ் ஏஜெண்ட் என்ற விருதுகளை பல முறை வாங்கியுள்ளது.
வெளிநாட்டு முதலீட்டாளர்களின் வலுவான ஆதரவு: டைகர் லாஜிஸ்டிக்ஸ் நிறுவனம் 2013ஆம் ஆண்டு மும்பை பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்டது. இந்த நிறுவனத்தை பொறுத்தவரை வெளிநாட்டு நிறுவன முதலீட்டாளர்களின் வலுவான ஆதரவை பெற்றுள்ளது.
கடந்த அக்டோபர் முதல் டிசம்பர் வரையிலான காலாண்டில் இந்த நிறுவனத்தின் பங்கு வடிவத்தை ஆய்வு செய்தால் வெளிநாட்டு நிறுவன முதலீட்டாளர்கள் 6.80 % பங்குகளை கொண்டுள்ளனர்.
முதலீட்டாளர்களுக்கு லாபம் அள்ளித்தரும் பங்கு: மும்பை பங்குச்சந்தையில் பட்டியலிடப்படும் இந்த பங்கு 2024 நிதியாண்டில் 120 % லாபத்தை தந்திருப்பதால் வெளிநாட்டு நிறுவன முதலீட்டாளர்கள் இதன் மீது அசைக்க முடியாத நம்பிக்கையை கொண்டுள்ளனர்.
கடந்த 6 மாதங்களில் டைகர் லாஜிஸ்டிக்ஸின் ஒரு பங்கின் விலை 370 ரூபாயில் இருந்து 780 ரூபாயாக உயர்ந்துள்ளது. அதாவது 110% உயர்வு.
கோவிட்டுக்கு பின் பெரிய லாபம்: கோவிட் பெருந்தொற்று காலத்திற்கு பின் இந்த பங்கின் விலை தாறுமாறாக உயர்ந்துள்ளது என்றே கூறலாம். அதாவது மார்ச் 2020இல் வெறும் 28 ரூபாயாக இருந்த ஒரு பங்கின் விலையானது தற்போது 780 ரூபாய் என உயர்ந்துள்ளது. இது கிட்டத்தட்ட 2,700 மடங்கு உயர்வு என்பதால் முதலீட்டாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
இந்த நிறுவனத்தை பொறுத்த வரை டேனோ இன்வெஸ்ட்மெண்ட் ஆப்பர்சூனிட்டிஸ் ஃபண்ட், ஃபோர்ப்ஸ் ஈஎம்எஃப், எலாரா இந்தியா ஆப்பர்சூனிட்டிஸ் ஃபண்ட் ஆகியவை அதிக முதலீடுகளை கொண்டுள்ளன.
மொத்த பங்குகளில் 3.16% அதாவது 3.33 லட்சம் பங்குகளை டேனோ இன்வெஸ்ட்மெண்ட் ஆப்பர்சூனிட்டிஸ் ஃபண்ட் வைத்துள்ளது. அதே போல ஃபோர்ப்ஸ் ஈஎம்எஃப் 1.43 லட்சம் பங்குகளையும், எலாரா இந்தியா ஆப்பர்சூனிட்டிஸ் ஃபண்ட் 1.21 லட்சம் பங்குகளையும் கொண்டுள்ளன.
More From GoodReturns

தங்கம், வெள்ளி விலை: வாரத்தின் முதல் நாளிலேயே குட் நியூஸ்..!! தங்கம் வாங்க சிறந்த நாள்..!!

ஆசை காட்டி மோசம் செய்யும் தங்கம்..!! ஆறுதல் தந்த வெள்ளி..!! இப்போ வாங்கலாமா? வெயிட் பண்ணலாமா?

தங்கம் விலை: 2 நாட்களில் நடந்த திருப்பம்!! மார்ச் மாத மேஜிக் முடிவுக்கு வந்ததா?

தங்கம் விலை இன்று கோயம்புத்தூரில் அதிரடி ஏற்றம்..! நகைப்பிரியர்களுக்கு ஷாக்..!

பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சி!! சென்செக்ஸ் 1000 புள்ளிகளுக்கு மேல் வீழ்ச்சி!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?

இந்த வாரம் 4 நாட்கள், அடுத்த வாரம் 3 நாட்கள்: பங்குச்சந்தை முதலீட்டாளர்களே முதல்ல இத படிங்க

சரிவிலேயே இருக்கும் இந்திய பங்குச்சந்தை இந்த வாரமாவது மீண்டு வருமா?

பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு கருப்பு வெள்ளி..!! ஒரே நாளில் ரூ.8 லட்சம் கோடி அவுட்..!!

பங்குச்சந்தை சரிவில் இந்த தப்பு மட்டும் பண்ணாதீங்க - முதலீட்டாளர்களுக்கு விஜய் கேடியா கூறும் டிப்ஸ்

இந்தியர்களே தங்கம் விலையை பத்தின கவலையே இனி வேண்டாம்!! ரெடியானது நாட்டின் பெரிய தங்க சுரங்கம்!!



Click it and Unblock the Notifications