பங்குச் சந்தைகளில் ஆயிரக்கணக்கான நிறுவன பங்குகள் மீது வர்த்தகம் நடைபெற்று வருகிறது. இதனால் நல்ல ஆதாயம் அளித்த மற்றும் அளிக்கும் சில நிறுவன பங்குகள் பற்றி பலரும் அறிந்திருக்க வாய்ப்பில்லை.
தற்போது ஒரு ஸ்மால் கேப் நிறுவன பங்கின் விலை கடந்த ஒரு மாதத்தில் 45 சதவீதம் அதிகரித்துள்ளது. மேலும் அடுத்த 2 ஆண்டுகளில் அந்த பங்கின் விலை மேலும் ஏற்றம் காணும் என்று நிபுணர்கள் மதிப்பிட்டுள்ளனர். அந்த ஸ்மால் கேப் நிறுவன பங்கு ஸ்வான் எனர்ஜி.

இந்திய நிறுவனமான ஸ்வான் எனர்ஜி, ஜவுளி, ரியல் எஸ்டேட், எனர்ஜி மற்றும் பெட்ரோகெமிக்கல் உள்பட பல்வேறு வர்த்தகங்களில் ஈடுபட்டு வருகிறது. இந்நிறுவன பங்கினை வாங்கலாம் என பங்கு தரகு நிறுவனமான வென்ச்சுரா செக்யூரிட்டீஸ் மதிப்பிட்டுள்ளது.
மேலும் இப்பங்கின் இலக்கு விலையை ரூ.800ஆக நிர்ணயம் செய்துள்ளது. இன்று மும்பை பங்குச் சந்தையில் வர்த்தகம் முடிவடைந்த போது இப்பங்கின் விலை முந்தைய வர்த்தக தினத்தை காட்டிலும் 0.94 சதவீதம் உயர்ந்து ரூ.433.80ஆக இருந்தது.
ஸ்வான் எனர்ஜி நிறுவனம் மூலதன செலவினங்கள் மேற்கொண்டு வளர்ச்சியின் பாதையில் இறங்குகிறது. இந்நிறுவனம் அண்மையில் ரூ.2,133 கோடி என்.சி.எல்.டி. ஏலம் வாயிலாக ரிலையன்ஸ் நேவல் அண்ட் என்ஜினீயரிங் லிமிடெட் நிறுவனத்தை கையகப்படுத்தியது. இது கப்பல் பழுது பார்ப்பு, கட்டிடம் மற்றும் உடைக்கும் வணிகத்தில் இந்நிறுவனத்தின் யுக்தி நகர்வை எடுத்துக் காட்டுகிறது என்று வென்ச்சுரா செக்யூரிட்டீஸ் தெரிவித்துள்ளது.
ஸ்வான் எனர்ஜி நிறுவனத்தின் துணை நிறுவனமான ஸ்வான் எல்.என்.ஜி., பெரிய எண்ணெய் மற்றும் எரிவாயு நிறுவனங்கள் மற்றும் சுத்திகரிப்பு நிலையங்களிடம் இருந்து 20 வருட டேக் அல்லது பே ஒப்பந்தத்தின் கீழ், ஆண்டுக்கு 45 லட்சம் மெட்ரிக் டன் திறன் புக்கிங் பெற்றுள்ளது.
இது நிறுவனத்தின் வலுவலான நீண்ட கால வருவாயை உறுதி செய்கிறது. இது போன்ற காரணங்களை குறிப்பிட்டு இந்நிறுவனம் எதிர்காலத்தில் சிறப்பான வளர்ச்சி காணும் என்று நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.


Click it and Unblock the Notifications