இந்திய பங்குச் சந்தைகள் கடந்த ஏப்ரல் முதல் சரிவிலிருந்து மீண்டு வர தொடங்கியுள்ளன. ஸ்மால் கேப் பங்குகள் மீண்டும் கவர்ச்சிகரமானதாக மாறி வருகின்றன. ஸ்மால்கேப் பங்குகள் வெறும் 10 வர்த்தக தினங்களில் முதலீட்டாளர்களுக்கு ரூ.7.3 லட்சம் கோடி வருமானத்தை கொடுத்துள்ளன. இதே காலத்தில் பிஎஸ்இ ஸ்மால்கேப் இன்டெக்ஸ் 10 சதவீதம் உயர்ந்துள்ளது.
980 பங்குகள்
கடந்த 10 வர்த்தக தினங்களில் மொத்தம் 46 ஸ்மால்கேப் பங்குகள் குறைந்தது 30 சதவீதம் உயர்ந்துள்ளன. அதில் டிடிஎம்எல், ஐஎஃப்சிஎல், பிஎல்எஸ், என்டிடிவி, ஐனாக்ஸ் கிரீன் எனர்ஜி, ஜென் டெக், ஏஞ்சல் ஒன் ஆகியவை நல்ல செயல்திறன் கொண்ட நிறுவனங்களாகும். பிஎஸ்இ ஸ்மால்கேப் இன்டெக்ஸில் உள்ள சுமார் 980 பங்குகளில், 70க்கும் குறைவான பங்குகள் மட்டுமே இந்க காலகட்டத்தில் சரிவை சந்தித்துள்ளன. ஸ்மால்கேப் பங்குகளின் அதிரடியான எழுச்சி முதலீட்டாளர்களுக்கு சந்தோஷத்தை அளித்துள்ளது.

அதேசமயம் தற்போதைய ஏற்றம் (ஸ்மால்கேப் பங்குகளின் விலை உயர்வு) ஒரு நிலையான மீட்சியா அல்லது மற்றொரு அதிக உந்துதலா என்ற கேள்வி எழுந்துள்ளது. இது தொடர்பாக கோடக் மகிந்திரா ஏஎம்சி நிறுவனத்தின் இவிபி மற்றும் நிதி மேலாளரான அதுல் போல் கூறுகையில், ஆபரேஷன் சிந்தூருக்கு பிறகு, பாதுகாப்பு பங்குகளில் ஏற்பட்ட சமீபத்திய கடுமையான ஏற்றம் பேராசை அல்லது தவறவிடுவோமோ என்ற பயம் பகுத்தறிவு முதலீட்டு நடத்தையை கையகப்படுத்துவதற்கான மற்றொரு எடுத்துக்காட்டு.
சரிவு
2024ம் ஆண்டின் நடுப்பகுதி முதல் 2025ம் ஆண்டின் முற்பகுதி வரை பல சிறிய மற்றும் நடுத்தர பங்குகள் 40 முதல் 60 சதவீதம் வரை சரிவை சந்தித்தன. இதற்கு பெரும்பாலும் அடிப்படை ஆதரவு இல்லாமல் உந்துதல் சார்ந்த கொள்முதலே இதற்கு காரணமாகும். மியூச்சுவல் பண்டுகளும் நிறுவன முதலீட்டாளர்களும் இந்த பொறிகளில் பலவற்றை தவிர்த்து விட்டாலும், சில்லரை முதலீட்டாளர்கள் தங்கள் பாடத்தை கற்றுக் கொள்ளாமல் இருக்கலாம்.
சந்தை குறுகிய காலத்தில் ஒரு வாக்குப்பதிவு இயந்திரம் போன்றது. மேலும் புதிய முதலீட்டாளர்களை ஈர்க்கிறது அல்லது அதே முதலீட்டாளர்களை புதிய தவறுகளை மீண்டும் செய்ய வைக்கிறது என்று தெரிவித்தார். எல்கேப செக்யூரிட்டீஸ் நிறுவனத்தின் மூத்த தொழில்நுட்ப ஆய்வாளர் ரூபாக் தே கூறுகையில், தற்போதைய ஏற்றம் ஆழமான பிரச்சினைகளை மறைக்கிறது.
மாயை
பல பரந்த சந்தை பங்குகள் விற்பனை அழுத்தத்திற்கு தொடர்ந்து பாதிக்கப்படக்கூடியதாக தெரிகிறது. ஒரு சில தரமான நிறுவனங்கள் ஸ்மால்கேப் மற்றும் மிட்கேப் இன்டெக்ஸ்களை உயர்த்தி, பரந்த வலிமையின் மாயையை உருவாக்குகின்றன. இது இனி 2023 அல்ல. இந்த முறை சந்தை உங்கள் பங்குகளை தேர்ந்தெடுக்கும் திறன்களை உண்மையிலேயே சோதிக்கும்.
வாழ்க்கையை புரட்டி போட்ட விபத்து.. வாழ்க்கை பாடத்தை கற்றுக்கொடுத்த சோமேட்டோ ஊழியர்..
Disclaimer: This article is strictly for informational purposes only. It is not a solicitation to buy, sell in precious metal products, commodities, securities or other financial instruments. Greynium Information Technologies Pvt Ltd, its subsidiaries, associates and the author of this article do not accept culpability for losses and/or damages arising based on information in this article.
More From GoodReturns

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

தங்கம், வெள்ளி விலை அடுத்த 1 வருடத்தில் எங்கிருக்கும்? இப்போது முதலீடு செய்வது லாபமா? நஷ்டமா?

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!



Click it and Unblock the Notifications