பெங்களூரு: பி.என்.சி. மேனன் என்பவருக்கு சொந்தமான சோபா லிமிடெட் நிறுவனம் இந்தியாவின் முன்னணி ரியல் எஸ்டேட் நிறுவனம். 1995ஆம் ஆண்டு முதல் இது செயல்பட்டு வருகிறது. இதன் தலைமை அலுவலகம் பெங்களூருவில் அமைந்துள்ளது.
இந்தியாவில் இந்த நிறுவனம் கடந்த இரண்டு ஆண்டுகளில் முதலீட்டாளர்களுக்கு மிகச்சிறந்த லாபத்தை பெற்று தந்துள்ளது. ஜூன் 14ஆம் தேதி மும்பை பங்குச்சந்தையில் இந்த நிறுவனத்தின் ஒரு பங்கின் மதிப்பு 2,180 ரூபாய் என்ற அளவில் வர்த்தகமானது.

சோபா லிமிடெட் நிறுவனத்தை பொருத்தவரை இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இதன் ஒரு பங்கு மதிப்பு 527 ரூபாயாக இருந்தது. தற்போது அதாவது 2 ஆண்டுகளில் இது சுமார் 320 % உயர்வு கண்டுள்ளது.
அதே வேளையில் பிஎஸ்சி 500 இன்டெக்ஸ் 64.28%, பிஎஸ்சி ரியால்டி இன்டெக்ஸ் 183% உயர்ந்தது.சோபா லிமிடெட் நிறுவன பங்கு மதிப்பு ஓராண்டு காலத்தில் கூட 285 % லாபம் தந்துள்ளது. 2024 ஆம் ஆண்டு தொடங்கியிலிருந்து தற்போது வரை 112 % சதவீத லாபத்தை பெற்று தந்துள்ளது.
கடந்த ஜூன் 13ஆம் தேதி இந்த நிறுவனத்தின் ஒரு பங்கின் மதிப்பானது 2,219 ரூபாய் என தனது 52 வார காலம் உச்சத்தை எட்டியது. இந்த நிறுவன பங்கின் 52 வார கால குறைந்தபட்ச மதிப்பு 521 ஆகும்.
ஷோபா லிமிடெட் நிறுவனத்தின் சந்தை மூலதனம் 20,681 கோடி ரூபாய் ஆகும். இந்த நிறுவனத்தின் ஒரு பங்கின் ஃபேஸ் வேல்யூ 10, புக் வேல்யூ 265.07 ஆகும். நிறுவனத்தின் வருவாய் 2023 ஆம் ஆண்டில் 3,402 கோடிகளாக இருந்துள்ளது. இதில் லாபம் 104 கோடி ரூபாய். நிறுவனத்தின் நிகர மதிப்பு 2,495 கோடி ரூபாய் என்ற அளவில் உள்ளது.
டெக்னிக்கல் அடிப்படையில் பார்க்கும்போது இந்த நிறுவனத்தின் relative strength index எனப்படும் ஆர்எஸ்ஐ 67.6 என்ற அளவில் உள்ளது. அதாவது இதனை யாரும் அதிகமாக வாங்கவும் இல்லை, யாரும் அதிகமாக விற்பனை செய்யவும் இல்லை. Antique Broking என்ற தரகு நிறுவனம் இந்த பங்கின் மதிப்பு 3,000 ரூபாயை எட்டும் என கணிப்பு வெளியிட்டுள்ளது .
இந்த நிறுவனம் தங்கள் கைகளில் தற்போது வைத்திருக்கக்கூடிய ப்ராஜெக்ட்களை கொண்டு கணக்கிடும் போது நிச்சயமாக இது வளர்ச்சி அடையும் என கூறியுள்ளது.
இந்த நிறுவனத்தில் 52 % பங்குகள் புரமோட்டர்களிடமும், ரீடெய்ல் முதலீட்டாளர்கள் வசம் 18 % பங்குகளும், மியூச்சுவல் ஃபண்டு நிறுவனங்களிடம் 16 % பங்குகளும் இருக்கின்றன. வெளிநாட்டு நிறுவன முதலீட்டாளர்கள் 11.88% பங்குகளை கொண்டுள்ளனர்.
Story written by: Devika
More From GoodReturns

அப்புறம் பாத்துக்கலாம்னு அசால்ட்டா இருக்காதீங்க! 5 வருஷம் லேட் பண்ணா ரூ3கோடி காலி.. SIP ரகசியம்?

ரூ.1 லட்சத்துக்கு கீழ் தங்கமே வாங்க முடியாதா? குறைந்த விலையில் தங்கம் வாங்க வழியே இல்லையா?

கிணற்றில் போட்ட கல்லு போல இருக்கும் வெள்ளி: இப்போது முதலீடு செய்தால் லாபம் கிடைக்குமா?

3 ஆண்டுகளில் 740% வளர்ச்சி அடைந்த மல்டிபேக்கர் பங்கு: இப்போது முதலீடு செய்யலாமா?

மீண்டும் இந்திய பங்குச்சந்தையை நோக்கி வரும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள்!! இனியாவது சந்தை ஏறுமா?

LIC பங்குதாரர்களுக்கு ஜாக்பாட்!! ஒன்னு ரெண்டாக போகுது!! முதலீட்டாளர்கள் ஹேப்பி!!

ஒரு மாதத்தில் 70% வளர்ச்சி: Ola electric பங்கினை இப்போது வாங்கலாமா? திடீரென பங்கு மதிப்பு உயர்வது ஏன்?

ஐடி நிறுவன பெண் ஊழியர்களே எச்சரிக்கை!! டிசிஎஸ் நாசிக் அலுவலக சம்பவம் கற்று தரும் பாடம் இது தான்!!

பதவி நீக்கம் செய்யப்படுகிறாரா டிரம்ப்? ஈரான் போரால் டிரம்புக்கு ஏற்பட்டுள்ள புது பிரச்சினை!!

அட்சய திருதியை நாளில் தங்கம் விலை எப்படி இருக்கும்? நகை வாங்குவோர் கவனிக்க வேண்டியது என்ன?

TCS ஊழியர்களுக்கு ஜாக்பாட்! IT லே ஆப் மத்தியில் சம்பளம் எகிறப்போகுது..செம ஹாப்பி தான்!



Click it and Unblock the Notifications