நடப்பு நிதியாண்டின் இரண்டாவது காலாண்டு வருவாயினை சொனாட்டா சாப்ட்வேர் லிமிடெட் (Sonata Software Ltd ) நிறுவனம் அறிவித்துள்ளது.
இதற்கிடையில் நடப்பு நிதியாண்டிற்கான இடைக்கால டிவிடெண்டாக ஒரு பங்கிற்கு 7 ரூபாய் அல்லது 700%-ஐ அறிவித்துள்ளது.
கடந்த அக்டோபர் 18,2022 அன்று நடைபெற்ற நிறுவனத்தின் இயக்குனர் குழு கூட்டத்தில், இடைக்கால டிவிடெண்டினை அறிவித்துள்ளது. இதற்கான ரெக்கார்டு தேதி நவம்பர் 1 என்று, இந்த நிறுவனம் பங்கு சந்தைக்கு தாக்கல் செய்த அறிக்கையில் தெரிவித்துள்ளது.
டிடிஎஸ் வரி பிடித்தம்
பதிவு செய்யப்பட்ட பங்குதாரர்களுக்கு நவம்பர் 14 அல்லது அதற்கு பின்னர் மின்னணு முறையில் இந்த டிவிடெண்ட் தொகையானது அனுப்பப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஈவுத்தொகை-க்கு வருமான வரிச்சட்டம் 1961ன் விதிகளின் படி, டிடிஎஸ் வரியை கழித்த பிறகு செலுத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
22% மேலாக சரிவு
சொனாட்டா சாப்டேவேர் லிமிடெட் நிறுவனம் நடப்பு நிதியாண்டில் 22% மேலாக சரிவினைக் கண்டுள்ளது.
இதற்கிடையில் செப்டம்பர் 2022 காலாண்டில் அதன் ஒருங்கிணைந்த நிகரலாபம் 112.7 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இது கடந்த ஆண்டினை காட்டிலும் 24% அதிகரித்துள்ளது. இதே வருவாய் விகிதம் கடந்த ஆண்டினை காட்டிலும் 55% அதிகரித்து, 1496 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.
வளர்ச்சியில் சரிவு
காலாண்டு முடிவுகள் குறித்து சொனாட்டாவின் தலைமை நிர்வாக அதிகாரி சமீர் திர், இது வலுவான காலாண்டு முடிவுகளை வெளியிட்டுள்ளது. இது நிறுவனத்தின் வலுவான வளர்ச்சியினை பிரதிபலிக்கிறது.
சர்வதேச அளவில் மந்த நிலை இருந்து வரும் நிலையில் ஐடி நிறுவனங்கள் சரிவினைக் காணலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இது ஏற்கனவே ஐடி நிறுவனங்களின் பங்கு விலையில் தாக்கத்தினை ஏற்படுத்தியுள்ளது.
பங்கு விலை நிலவரம்
இன்று சொனாட்டா (sonata software ltd ) நிறுவனத்தின் பங்கு விலையானது என்எஸ்இ-யில் 0.80% அதிகரித்து, 506.45 ரூபாயாக முடிவடைந்துள்ளது.
இதே பி எஸ் இ-யில் இப்பங்கின் விலையானது 0.77% அதிகரித்து, 505.55 ரூபாயாக முடிவடைந்துள்ளது. இதன் 52 வார உச்ச விலை 772.50 ரூபாயாகும். இதன் 52 வார குறைந்தபட்ச விலை 457.50 ரூபாயாகும். இதன் இன்றைய உச்ச விலை 520.05 ரூபாயாகும், இதன் இன்றைய குறைந்தபட்ச விலை 503.05 ரூபாயாகும்.


Click it and Unblock the Notifications