பங்கின் விலை ரூ.1க்கும் குறைவான ஸ்டாண்டர்ட் கேபிட்டல் மார்க்கெட்ஸ் இன்று பங்குச் சந்தையில் அப்பர் சர்க்கியூட் அடித்து அனைவரையும் திரும்பி பார்க்க வைத்துள்ளது. 1987ல் தொடங்கப்பட்ட ஸ்டாண்டர்ட் கேபிட்டல் மார்க்கெட்ஸ் லிமிடெட், ரிசர்வ் வங்கியில் பதிவு செய்யப்பட்ட வங்கி அல்லாத நிதி சேவை நிறுவனமாகும். இந்நிறுவனம் பாரம்பரிய வங்கி சேவைகளுக்கு அப்பாற்பட்ட விரிவான நிதி சேவைகளை வழங்கி வருகிறது. இதில், ஆலோசனை சேவைகள், சட்ட உதவி மற்றும் உரிமை ஆதரவு உள்ளிட்ட சேவைகளும் அடங்கும். மல்டிபேக்கர் பென்ன பங்கான ஸ்டாண்டர்ட் கேபிட்டல் மார்க்கெட்ஸ் லிமிடெட் நிறுவனத்தின் நிதி நிலை முடிவுகள் திருப்தி அளிக்கும் விதத்தில் இல்லை. அதேசமயம், நீண்ட கால அடிப்படையில் இந்நிறுவன பங்கு முதலீட்டாளர்களுக்கு மல்டிபேக்கர் ஆதாயத்தை கொடுத்துள்ளது.
ஸ்டாண்டர்ட் கேபிட்டல் மார்க்கெட்ஸ் லிமிடெட் நிறுவனம் கடந்த டிசம்பர் காலாண்டில் நிகர வருவாயாக ரூ.20.28 கோடி ஈட்டியுள்ளது. இது முந்தைய ஆண்டின் இதே காலாண்டைக் காட்டிலும் 106 சதவீதம் அதிகமாகும்.2023 டிசம்பர் காலாண்டில் இந்நிறுவனம் நிகர வருவாயாக ரூ.9.84 கோடி ஈட்டியிருந்தது. 2024 டிசம்பர் காலாண்டில் இந்நிறுவனத்துக்கு ரூ.45.10 கோடி நிகர இழப்பை சந்தித்துள்ளது. 2023 டிசம்பர் காலாண்டில் இந்நிறுவனத்துக்கு ரூ.70 லட்சம் நிகர நஷ்டம் ஏற்பட்டு இருந்தது.

ரூ.1க்கும் குறைவான இந்த பென்னி பங்கு மல்டிபேக்கர் ஆதாயத்தை கொடுத்துள்ளது என்றால் உங்களால் நம்ப முடிகிறதா? ஆனால் அதுதான் நிஜம். கடந்த 5 ஆண்டுகளில் ஸ்டாண்டர்ட் கேபிட்டல் மார்க்கெட்ஸ் லிமிடெட் பங்கு முதலீட்டாளர்களுக்கு 1,200 சதவீதம் மல்டிபேக்கர் ஆதாயத்தை கொடுத்துள்ளது. கடந்த 3 ஆண்டுகளில் இந்நிறுவன பங்கின் விலை 740 சதவீதம் அதிகரித்துள்ளது. மும்பை பங்குச் சந்தையில் இன்று வர்த்தகத்தின் இடையே இந்நிறுவன பங்கின் விலை 5 சதவீதம் அப்பர் சர்க்கியூட் அடித்து ரூ.0.68ஐ எட்டியது.
ஸ்டாண்டர்ட் கேபிட்டல் மார்க்கெட்ஸ் லிமிடெட் நிறுவனம் விரிவாக்க நடவடிக்கைகளுக்கு தேவையான நிதியை திரட்டுவதற்காக
முன்னுரிமை அடிப்படையில் ஈக்விட்டி பங்குகள்/மாற்றத்தக்க பத்திரங்கள் அல்லது வாரண்டுகள் உள்ளிட்ட ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட பத்திரங்களை வெளியிட்ட திட்டமிட்டுள்ளது. இந்த செய்தியின் எதிரொலியாக, இன்று மும்பை பங்குச் சந்தையில் இந்நிறுவன பங்கு விலை அப்பர் சர்க்கியூட் அடித்தது. கடந்த செவ்வாய்க்கிழமையன்று மும்பை பங்குச் சந்தையில் வர்த்தகத்தின் இடையே இப்பங்கின் விலை புதிய 52 வார குறைந்தபட்சமான ரூ.0.63க்கு சென்றது குறிப்பிடத்தக்கது.
Story written by: Subramanian
Disclaimer: This article is strictly for informational purposes only. It is not a solicitation to buy, sell in precious metal products, commodities, securities or other financial instruments. Greynium Information Technologies Pvt Ltd, its subsidiaries, associates and the author of this article do not accept culpability for losses and/or damages arising based on information in this article.
More From GoodReturns

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

வறுமையை வென்று சாதனை படைத்த பொன்னரசி! லட்சங்களில் டர்ன் ஓவர்! முருங்கை டூ மல்டிநேஷனல் பிசினஸ்!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !



Click it and Unblock the Notifications