முதலீட்டாளர்கள் அனைவரும் பங்குச் சந்தையில் லாபம் சம்பாதிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் தான் முதலீடு செய்கிறார்கள். முதலில் சரியான பங்குகளை தேர்ந்தெடுத்தாலே அவர்கள் பாதி வெற்றியடைந்தது மாதிரி.
தற்போது சில முன்னணி பங்கு தரகு நிறுவனங்கள், வரும் நாட்களில் சில நிறுவன பங்குகளை வாங்கலாம் என்றும் அந்த பங்குகள் 35 சதவீதம் வரை ஆதாயம் அளிக்க வாய்ப்புள்ளதாகவும் கணித்துள்ளனர். அந்த பங்குகள் என்னென்ன என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.

எஸ்.ஜே.வி.என்.: மின் உற்பத்தி ஈடுபட்டு வரும் எஸ்.ஜே.வி.என் (SJVN) நிறுவனம் பங்கு விலை தற்போது ரூ.92.52ஆக உள்ளது. இப்பங்கின் விலை வரும் நாட்களில் 35 சதவீதம் உயர வாய்ப்புள்ளது என்று பங்கு தரகு நிறுவனமான மோனார்க் நெட்வொர்த் கேப்பிடல் தெரிவித்துள்ளது. மேலும் இப்பங்கின் இலக்கு விலையை ரூ.125ஆக நிர்ணயம் செய்துள்ளது.
கோல்டியம் இன்டர்நேஷனல்: வைர உற்பத்தி மற்றும் ஏற்றுமதியில் ஈடுபட்டு வரும் கோல்டியம் இன்டர்நேஷனல் பங்கின் விலை 32 சதவீதம் உயரும். இப்பங்கின் இலக்கு விலை ரூ.225 என்று மோனார்க் நெட்வொர்த் கேப்பிடல் நிர்ணயம் செய்துள்ளது. மும்பை பங்குச் சந்தையில் நேற்று வர்த்தகத்தின் முடிவில் இப்பங்கின் விலை ரூ.170.15ஆக இருந்தது.
ஐ.ஆர்.எம். எனர்ஜி: எல்.பி.ஜி. உள்ளிட்ட எரிபொருள் சப்ளையரான ஐ.ஆர்.எம். எனர்ஜி நிறுவனத்தின் (IRM Energy)பங்கு விலை நேற்றைய வர்த்தகத்தின் முடிவில் ரூ.461.75ஆக இருந்தது. இப்பங்கின் விலை 25 சதவீதம் உயரும் என்று பங்கு தரகு நிறுவனமான எச்.டி.எஃப்.சி. செக்யூரிட்டீஸ் கணித்துள்ளது. மேலும் இப்பங்கின் இலக்கு விலையை ரூ.580ஆக நிர்ணயம் செய்துள்ளது.
சோழமண்டலம் இன்வெஸ்ட்மென்ட் அண்டு பைனான்ஸ்: வங்கி அல்லாத நிதி சேவைகள் நிறுவனமான சோழமண்டலம் இன்வெஸ்ட்மென்ட் அண்டு பைனான்ஸ் கம்பெனி லிமிடெட் பங்கு விலை ரூ.1,180.55ஆக உள்ளது. இப்பங்கு 20 சதவீதம் உயரும் என்று பங்கு தரகு நிறுவனமான மோதிலால் ஓஸ்வால் எதிர்பார்க்கிறது. மேலும் இப்பங்கின் இலக்கு விலை ரூ.1,420ஆக நிர்ணயம் செய்துள்ளது.
எச்.டி.எஃப்.சி. வங்கி: நாட்டின் மிகப்பெரிய தனியார் வங்கியான எச்.டி.எஃப்.சி. வங்கி பங்கு விலை ரூ.1,631.60ஆக உள்ளது. இந்நிறுவன பங்கின் விலை தற்போதைய நிலையில் இருந்து 20 சதவீதம் அதிகரிக்கும் என்று மோதிலால் ஓஸ்வால் தெரிவித்துள்ளது. மேலும் இப்பங்கின் இலக்கு விலை ரூ.1,950ஆக நிர்ணயம் செய்துள்ளது.
More From GoodReturns

தங்கம், வெள்ளி விலை: வாரத்தின் முதல் நாளிலேயே குட் நியூஸ்..!! தங்கம் வாங்க சிறந்த நாள்..!!

இந்த வாரம் 4 நாட்கள், அடுத்த வாரம் 3 நாட்கள்: பங்குச்சந்தை முதலீட்டாளர்களே முதல்ல இத படிங்க

முதலீட்டாளர்களுக்கு இன்ப அதிர்ச்சி: 1500 புள்ளிகளுக்கு மேல் உயர்ந்த சென்செக்ஸ்!!

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

ஆசை காட்டி மோசம் செய்யும் தங்கம்..!! ஆறுதல் தந்த வெள்ளி..!! இப்போ வாங்கலாமா? வெயிட் பண்ணலாமா?

தங்கம் விலை: 2 நாட்களில் நடந்த திருப்பம்!! மார்ச் மாத மேஜிக் முடிவுக்கு வந்ததா?

கதறி கதறி அழும் வெள்ளி முதலீட்டாளர்கள்.. போட்ட காசு மொத்தமும் போச்சு..!! அடுத்தது என்ன..?

கண்ணாமூச்சி ஆடும் தங்கம்.. ரிவர்ஸ் எடுக்கும் வெள்ளி..! இந்த 2 பேர் எடுக்கிற முடிவுல தான் எல்லாமே இருக்கு!

தங்கம் விலை: 24 மணி நேரத்தில் 4 முறை மாறிய விலை!! ஈரான் போரால் நடக்கும் அக்கப்போர்!!

SIP முதலீடு செஞ்சா கோடிகளில் பணம் கிடைக்குமா? நம்ம எல்லாரும் செய்யுற தப்பு இது தான்..!!

தங்கம் விலை இன்று கோயம்புத்தூரில் அதிரடி ஏற்றம்..! நகைப்பிரியர்களுக்கு ஷாக்..!



Click it and Unblock the Notifications