அமெரிக்கப் பத்திர முதலீடுகளும், ஈரான் போர் அச்சமும் இந்திய பங்குச்சந்தையைப் புரட்டிப்போட்டு வருகிறது. இன்று காலை சிறு தடுமாற்றத்துடன் துவங்கிய மும்பை பங்குச்சந்தை 12 மணிக்கு மேல் பெரும் சரிவைச் சந்தித்து சுமார் 10 லட்சம் கோடி ரூபாய் அளவிலான முதலீட்டு மதிப்பை இழந்துள்ளனர்.
சென்செக்ஸ் குறியீடு நேற்றைய வர்த்தகத்தில் 72,480.29 புள்ளிகளில் முடிந்த நிலையில் இன்று மதிய வர்த்தகத்தில் 71,292.88 புள்ளிகளுக்கு வீழ்ந்தது. இதன் மூலம் சென்செக்ஸ் குறியீடு சுமார் 1187 புள்ளிகளை இழந்து, மும்பை பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்டு உள்ள நிறுவனங்களின் சந்தை மதிப்பு வெறும் 1 மணிநேர வர்த்தகத்தில் சுமார் 9.5 லட்சம் கோடி ரூபாய் குறைந்துள்ளது. இதேபோல் நிஃப்டி 50 குறியீடு 300 புள்ளிகள் சரிந்தது.

இன்றைய சரிவில் கவனிக்க வேண்டிய விஷயமாக சென்செக்ஸ் தனது சப்போர்ட் அளவான 71800 புள்ளிகளுக்குக் கீழும், நிஃப்டி 22500 புள்ளிகளுக்குக் கீழும் வந்துள்ளது. இதனால் அதிகப்படியான முதலீட்டாளர்கள் தங்களுடைய முதலீட்டை வெளியேற்றுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
நாளை அக்டோபர் 2ஆம் தேதி காந்தி ஜெயந்தி என்பதால் அரசு விடுமுறை, இதனால் திங்கட்கிழமை தான் மீண்டும் வர்த்தகம் துவங்கும் என்பதால் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் தொடர்ந்து அதிகப்படியான முதலீட்டை வெளியேற்றி வருகின்றனர்.
இந்தியப் பங்குச்சந்தை இன்று 10 லட்சம் கோடி ரூபாய் அளவிலான சந்தை மதிப்பீட்டை இழக்க என்ன காரணம்..? முதலும் முக்கியமான காரணம் டிரம்ப், நேற்று அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் செய்தியாளர்களிடம் அமைதி பேச்சுவார்த்தை-க்கு பின்பு பேசினார், ஈரானை விரைவில் Blow up செய்யப்போகிறோம் எனத் தெரிவித்தார்.
இதன் பின்பு நேற்று 100 டாலருக்குக் கீழே சென்ற கச்சா எண்ணெய் மீண்டும் உயரத் துவங்கியுள்ளது, இதனால் டாலர் ஆதிக்கம் அதிகரித்து வருகிறது. மறுபுறம் அமெரிக்காவில் பணவீக்கமும், உலக நாடுகளில் டீசல் பற்றாக்குறை பிரச்சனையும் பெரியதாக வெடித்து வருகிறது.
இவை அனைத்திற்கும் மத்தியில் அமெரிக்கப் பத்திர சந்தை முதலீட்டுக்கான லாபம் எப்போதும் இல்லாமல் 5.4 சதவீதம் வரையில் உயர்ந்துள்ளது. இதனால் இந்திய சந்தையில் இருந்து முதலீடுகள் வேகமாக வெளியேறி வருகிறது.
தமிழ் குட்ரிட்டன்ஸ் தளத்தில் இந்தியப் பங்குச்சந்தை ஏன் தொடர்ந்து சரிந்து வருகிறது..? இந்த சரிவுக்கும் அமெரிக்கப் பத்திர சந்தைக்குமான தொடர்பு குறித்தும் விரிவாக விளக்கப்பட்டு உள்ளது (இணைப்பு).
இன்றைய வர்த்தக முடிவில் சென்செக்ஸ் குறியீடு 570.59 புள்ளிகள் சரிந்து 71,909.70 புள்ளிகளை தொட்டு வர்த்தகம் முடிந்துள்ளது. இதேபோல் நிஃப்டி குறியீடு 198.50 புள்ளிகள் சரிந்து 22,421.95 புள்ளிகளை அடைந்துள்ளது.


Click it and Unblock the Notifications
