சென்னை: பங்குச்சந்தை வர்த்தகத்தில் ஒரு பங்கை வாங்கும் போதும் விற்பனை செய்யும் போதும் அதன் உரிமையை முறையாகவும், வேகமாகவும் மாற்றும் சேவையை அளிக்கும் CDSL எனப்படும் சென்ட்ரல் டெபாசிட்டரி சர்வீசஸ் இந்தியா நிறுவனத்தின் சேவையில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக, பல முதலீட்டாளர்கள் தங்கள் பங்குகளை விற்பனை செய்ய முடியாமல் தவித்தனர்.
எக்சிட் போல் முடிவுகள் மோடி அரசுக்கு மிகவும் சாதகமாக இருக்கும் காரணத்தால் இன்று உள்நாட்டு முதலீட்டாளர்கள் முதல் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் வரையில் இந்தியப் பங்குச்சந்தையில் பணத்தைக் கொட்டி வருகின்றனர்.

இதன் வாயிலாக எப்போதும் இல்லாமல் இன்று காலை முதல் சென்செக்ஸ் குறியீடு சுமார் 2000 புள்ளிகளுக்கு அதிகமாகவே வர்த்தகமாகி வருகிறது. மதியம் 2 மணி அளவில் சென்செக்ஸ் குறியீடு 2332 புள்ளிகள் உயர்வில் வர்த்தகமாகி வருகிறது.
இன்று CDSL தளத்தில் பங்கு வர்த்தகத்தின் பரிவர்த்தனை தனிப்பட்ட அடையாள எண் (Transaction Personal Identification Number - TPIN) மூலம் விற்பனை ஆர்டர்களை சரிபார்க்கும் போது, பல வர்த்தகர்கள் சிக்கலை எதிர்கொண்டனர்.
ஆனால் இந்த பிரச்சனை, விரைவில் CDSL நிறுவனம் தீர்த்துவிட்டது. Zerodha இணையதளத்தில் கிடைத்த அப்டேட்டின் படி, "CDSL TPIN அங்கீகார சேவை தொடர்பான பிரச்சினை தீர்க்கப்பட்டது" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த தொழில்நுட்ப கோளாறு காரணமாக, பல முதலீட்டாளர்கள் தங்கள் பங்குகளை விற்பனை செய்ய முடியாமல் தவித்ததாக சமூக வலைத்தளங்களில் புகார் பறக்கத் துவங்கியது.
CDSL நிறுவனத்தின் TPIN சரிபார்ப்பு செயல்பாட்டில் ஏற்பட்ட கோளாறு காரணமாக இருப்பதாக, பங்குச்சந்தை தரகு நிறுவனமான அப்ஸ்டாக்ஸ் (Upstox) மற்றும் ஜெரோதா (Zerodha) போன்ற நிறுவனங்கள் தங்களது பயனர்களுக்கு தகவல் அளித்துள்ளது.
இதுகுறித்து அப்ஸ்டாக்ஸ் நிறுவனம் தனது டிவிட்டரில் "CDSL TPIN சேவைகள் செயலிழந்துள்ளது. இதன் காரணமாக, விற்பனை ஆர்டர்கள் அங்கீகரிப்பதற்கு நீங்கள் புதிய TPIN ஐ உருவாக்க முடியாது," என்று தெரிவித்துள்ளது.
மேலும், அங்கீகாரம் இல்லாமல் விற்பனை உத்தரவுகளை வைக்க இ-டிஐஎஸ் (e-DIS) ஐ செயல்படுத்தலாம் என்று தங்கள் வர்த்தகர்களுக்கு அறிவுறுத்தியுள்ளது அப்ஸ்டாக்ஸ் நிறுவனம்.
முதலீட்டாளர்களின் பாதுகாப்புக்காக, CDSL நிறுவனம் e-DIS எனப்படும் Electronic Delivery Instruction Slip சரிபார்ப்பு முறையை அறிமுகப்படுத்தியது. பங்குகளை விற்பனை செய்யும் போது, முதலீட்டாளர்கள் TPIN மற்றும் OTP மூலம் பரிவர்த்தனையை அங்கீகரிக்க வேண்டும்.
More From GoodReturns

பங்குச்சந்தை சரிவில் இந்த தப்பு மட்டும் பண்ணாதீங்க - முதலீட்டாளர்களுக்கு விஜய் கேடியா கூறும் டிப்ஸ்

பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு கருப்பு வெள்ளி..!! ஒரே நாளில் ரூ.8 லட்சம் கோடி அவுட்..!!

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

தங்கம், வெள்ளி விலை: வாரத்தின் முதல் நாளிலேயே குட் நியூஸ்..!! தங்கம் வாங்க சிறந்த நாள்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?

முதலீட்டாளர்களுக்கு இன்ப அதிர்ச்சி: 1500 புள்ளிகளுக்கு மேல் உயர்ந்த சென்செக்ஸ்!!

ஆசை காட்டி மோசம் செய்யும் தங்கம்..!! ஆறுதல் தந்த வெள்ளி..!! இப்போ வாங்கலாமா? வெயிட் பண்ணலாமா?

கதறி கதறி அழும் வெள்ளி முதலீட்டாளர்கள்.. போட்ட காசு மொத்தமும் போச்சு..!! அடுத்தது என்ன..?

தங்கம் விலை இன்று கோயம்புத்தூரில் அதிரடி ஏற்றம்..! நகைப்பிரியர்களுக்கு ஷாக்..!

தங்கம் விலை: 2 நாட்களில் நடந்த திருப்பம்!! மார்ச் மாத மேஜிக் முடிவுக்கு வந்ததா?

தங்கம் விலை: 24 மணி நேரத்தில் 4 முறை மாறிய விலை!! ஈரான் போரால் நடக்கும் அக்கப்போர்!!



Click it and Unblock the Notifications