சென்செக்ஸ் குறியீடு 671 புள்ளிகள் சரிவு.. ரூ.3.1 லட்சம் கோடி முதலீட்டு மதிப்பு இழப்பு..!

மும்பை பங்குச்சந்தையின் வாரத்தின் கடைசி வர்த்தக நாளான இன்று காலை வர்த்தகத்தில் 900 புள்ளிகள் சரிந்து பெரும் பாதிப்பை எதிர்கொண்டது. இன்று காலை வர்த்தகம் துவங்கியதில் இருந்து தொடர்ந்து சரிவில் இருந்த சென்செக்ஸ் 30 நிமிடத்தில் 950 புள்ளிகள் வரையில் சரிந்து 58,884.98 புள்ளிகளை அடைந்தது.

இன்றைய வர்த்தக முடிவில் சென்செக்ஸ் குறியீடு 671.15 புள்ளிகள் சரிந்து 59,135.13 புள்ளிகளை எட்டியது. நிஃப்டி குறியீடு 176.70 புள்ளிகள் சரிந்து 17,412.90 புள்ளிகளை எட்டியது.

இதன் எதிரொலியாகச் சென்செக்ஸ் குறியீட்டின் டாப் 30 நிறுவனங்கள் பட்டியலில் அதிகளவிலான நிறுவனங்கள் சரிவில் உள்ளது, முக்கியமான வங்கி மற்றும் நிதியியல் சேவை நிறுவன பங்குகள் பெரும் சரிவை பதிவு செய்துள்ளது.

பஜாஜ் பைனான்ஸ், பஜாஜ் பின்சர்வ், ஐசிஐசிஐ வங்கி, ஆக்சிஸ் வங்கி, எஸ்பிஐ, ஹெச்டிஎப்சி வங்கி, ஹெச்டிஎப்சி ஆகியவை 1.45 முதல் 2.80 சதவீதம் வரையில் சரிந்துள்ளது.

சென்செக்ஸ் குறியீடு

சென்செக்ஸ் குறியீடு

இன்றைய வர்த்தக முடிவில் சென்செக்ஸ் குறியீடு 671.15 புள்ளிகள் சரிந்து 59,135.13 புள்ளிகளை எட்டியது.  சென்செக்ஸ் குறியீட்டின் டாப் 30 நிறுவனங்கள் பட்டியலில் டாடா மோட்டார்ஸ், மாருதி சுசூகி, என்டிபிசி, பவர்கிரிட், சன் பார்மா, டைட்டன், டெக் மஹிந்திரா, ஐடிசி, ஹிந்துஸ்தான் யூனிலீவர், ஹெச்சிஎல் டெக் ஆகிய நிறுவனங்கள் உயர்வுடன் உள்ளது.

நிஃப்டி குறியீடு

நிஃப்டி குறியீடு

சென்செக்ஸ் குறியீட்டைப் போலவே நிஃப்டி குறியீடு இன்று காலை வர்த்தகத்தில் 250 புள்ளிகள் இழந்தது. இன்றைய வர்த்தக முடிவில் நிஃப்டி குறியீடு 176.70 புள்ளிகள் சரிந்து 17,412.90 புள்ளிகளை எட்டியது.இதனால் நிஃப்டி VIX குறியீடு 5.40 சதவீதம் அதிகரித்து 13.41 புள்ளிகளாக உள்ளது.

முக்கியத் துறை

முக்கியத் துறை

மேலும் நிஃப்டி குறியீட்டில் துறை சார்ந்த குறியீடுகளில் நிஃப்டி நிதி சேவை குறியீடு 1.91 சதவீதமும், நிஃப்டி PSU வங்கி குறியீடும் 2.12 சதவீதம் வரையில் சரிந்துள்ளது, நிஃப்டி தனியார் வங்கி குறியீடு 1.77 சதவீதம் சரிந்துள்ளது.

அமெரிக்கா வேலைவாய்ப்புத் தரவுகள்

அமெரிக்கா வேலைவாய்ப்புத் தரவுகள்

அமெரிக்கா மத்திய வங்கியின் வட்டி விகிதத்தை உயர்த்தும் திட்டத்தில் தீவிரமாக இருக்கும் வேளையில் அமெரிக்காவின் வேலைவாய்ப்புத் தரவுகள் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவில் பணிநீக்க எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வரும் வேளையில் 2009 ஆம் ஆண்டுக்குப் பின்பு அதிகப்படியான பணிநீக்கம் இந்த ஜனவரி, பிப்ரவரி மாதத்தில் பதிவாகியுள்ளது.

டெக் பணிநீக்கம்

டெக் பணிநீக்கம்

அமெரிக்காவில் அறிவிக்கப்பட்ட 180000 பணிநீக்கத்தில் டெக் துறையில் மட்டும் நான்கில் 3 பங்கு, இதில் பிப்வரி மாதம் மட்டும் 77,770 பேர் பணிநீக்கம் செய்யப்பட்டு உள்ளனர். இதன் மூலம் அமெரிக்காவில் மார்ச் 4 ஆம் தேதி நிலவரப்படி வேலைவாய்ப்பின்மை சலுகைகளைப் பெறுவோர் எண்ணிக்கை 21000 அதிகரித்து முந்தை வாரத்தை விடவும் 11 சதவீத உயர்வை பதிவு செய்துள்ளது.

ஜெரோம் பவல்

ஜெரோம் பவல்

அமெரிக்க பெடரல் ரிசர்வ் தலைவர் ஜெரோம் பவல் சந்தை தரவுகள் வேகமாகவும் அதிகமாகவும் வட்டி விகித உயர்வை எதிர்நோக்கினால், கட்டாயம் வட்டி விகித்தை உயர்த்தப்படும் என அறிவித்தார். இதேபோல் அமெரிக்க நாடாளுமன்றத்தில் டாலர் மதிப்பு சரிவு, பணவீக்கம் போன்றவற்று குறித்து எழுந்த கருத்துக்களுக்குப் பதில் அளிக்கத் தயாராகி வருகிறார் ஜெரோம் பவல்.

தங்கம், கச்சா எண்ணெய்

தங்கம், கச்சா எண்ணெய்

அமெரிக்க வேலைவாய்ப்பு தரவுகள் காரணமாகச் சர்வதேசச் சந்தையில் ஸ்பாட் கோல்டு சந்தையில் ஒரு அவுன்ஸ் தங்கம் விலை 0.1 சதவீதம் சரிந்து 1,828.90 டாலராக உள்ளது. இதேபோல் கச்சா எண்ணெய்-க்கான டிமாண்ட் குறையும் காரணத்தால் கச்சா எண்ணெய் விலையும் சரிந்துள்ளது.

அமெரிக்க வேலைவாய்ப்பு சந்தை பாதிப்பு போலவே இந்திய வேலைவாய்ப்பு சந்தையும் கடுமையாகப் பாதித்துள்ளது.

ஆசிய சந்தை

ஆசிய சந்தை

அமெரிக்க வேலைவாய்ப்பு தரவுகள் மூலம் அமெரிக்கா பங்குச்சந்தை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த ஆசிய சந்தையும் பாதிக்கப்பட்டு உள்ளது. டோக்கியோ பங்குச்சந்தை இன்று காலையில் சரிவுடன் துவங்கியது. இந்திய சந்தையில் இருந்து முதலீடுகள் வெளியேறியுள்ள காரணத்தால் டாலருக்கு எதிரான ரூபாய் மதிப்பும் சரிய துவங்கியுள்ளது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+