எச்எம்பிவி வைரஸ் அச்சம்.. 1100 புள்ளிகள் சரிந்த சென்செக்ஸ்.. பதறும் முதலீட்டாளர்கள்..!!

சீனாவில் பரவி வரும் ஹியூமன் மெட்டாநியூமோவைரஸ் (HMPV) தொற்று உலகின் பிற நாடுகளிலும் எதிரொலிக்க துவங்கியிருக்கும் வேளையில் முதலீட்டு சந்தையில் பெரும் அச்சம் உருவாகியுள்ளது. இந்தியாவில் டெல்லி, மகாராஷ்டிரா மாநிலங்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க உத்தரவிட்டுள்ள வேளையில், ஐடி நகரமான பெங்களூரில் 2 குழந்தைகளுக்கு எச்எம்பிவி வைரஸ் தொற்று ஏற்பட்டு உள்ளதை மத்திய சுகாதார துறை அமைச்சகம் உறுதி செய்துள்ளது.

எச்எம்பிவி வைரஸ் அச்சம் சாமானிய மக்களை மட்டும் அல்லாமல் முதலீட்டு சந்தையையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. கொரோனா வைரஸ் போல் எச்எம்பிவி வைரஸும் தீவிரமாக பரவினால் லாக்டவுன் அறிவிக்கப்படுமா கேள்வியும் எழுந்துள்ள காரணத்தால் முதலீட்டாளர்கள் மத்தியில் கூடுதல் பரபரப்பு ஏற்பட்டது.

எச்எம்பிவி வைரஸ் அச்சம்.. 1100 புள்ளிகள் சரிந்த சென்செக்ஸ்.. பதறும் முதலீட்டாளர்கள்..!!

இப்படி முதலீட்டாளர்கள் மத்தியில் அதிகரித்து வரும் அச்சத்தில், இந்திய பங்குச் சந்தை வெள்ளிக்கிழமை கடுமையான வீழ்ச்சியை சந்தித்தது. சென்செக்ஸ் 1,100 புள்ளிகளுக்கும் மேல் வீழ்ந்தது, நிஃப்டி கிட்டத்தட்ட 1.4% வீழ்ந்தது. இந்த கடுமையான சந்தை வீழ்ச்சிக்கு முக்கிய காரணம் இந்தியாவில் பதிவான 2 HMPV கேஸ்கள் தான்.

ஆனால் 1 மணியளவில் பங்குச்சந்தை சரிவில் இருந்து பெரிய அளவில் மீண்டுள்ளது, சென்செக்ஸ் 775.97 புள்ளிகள் சரிந்து 78,453.43 புள்ளிகளை எட்டியுள்ளது. இதேபோல் நிஃப்டி குறியீடு சுமார் 0.99 சதவீதம் சரிந்து 23,767.25 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது.

இதேவேளையில் பங்குச் சந்தையின் அச்சத்தை கணக்கிடும் VIX குறியீடு 13% உயர்ந்தது, இது முதலீட்டாளர்களின் அச்சம் அதிகரித்துள்ளதை வெளிச்சம் போட்டு காட்டுகிறது. மிட்-கேப் மற்றும் ஸ்மால்-கேப் பங்குகள் கடுமையான வீழ்ச்சியை சந்தித்த நிலையில், பல்வேறு துறைகளும் பாதிக்கப்பட்டன. யூனியன் வங்கி 7% வீழ்ச்சியடைந்தது, பாங்க் ஆப் பாரோடா, HPCL, BPCL, டாடா ஸ்டீல், அதானி எனர்ஜி சொல்யூஷன்ஸ் மற்றும் PNB ஆகியவை சுமார் 4-5% வீழ்ச்சியை சந்தித்தன.

HDFC வங்கி, ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் (RIL) மற்றும் கோடக் மஹிந்திரா வங்கி உள்ளிட்ட முக்கிய பங்குகளும் சந்தையின் வீழ்ச்சிக்கு கணிசமாக பங்களித்தன. இந்திய பங்குச்சந்தை முதலீட்டாளர்கள் கார்ப்ரேட் நிறுவனங்களின் டிசம்பர் காலாண்டு முடிவுகளை எதிர்பார்த்து காத்திருக்கும் வேளையில், இந்தியாவில் HMPV வழக்குகள் குறித்த செய்தி சந்தையை திடுக்கிட செய்துள்ளது.

இந்த சுவாச வைரஸ் மக்களின் உடல்நலம் மற்றும் பொருளாதாரத்தில் ஏற்படுத்தக்கூடிய தாக்கத்தை கணித்து தான் முதலீட்டாளர்கள் தங்கள் முதலீட்டை பாதுகாப்பான இடத்திற்கு மாற்றியுள்ளதாக தெரிகிறது. இதேவேளையில் மத்திய அரசும் சரி, மாநில அரசும் சரி தற்போது அச்சப்பட தேவையில்லை என்று பொதுமக்களுக்கு உறுதிப்படுத்தியுள்ளது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+