பங்குச் சந்தையில் சமீப காலமாக அதிகளவு சரிவை சந்தித்து வருகின்றன. அந்த வகையில், இந்த வாரத்தின் முதல் இரண்டு நாட்களில் முதலீட்டாளர்களிடையே வாங்கும் ஆர்வத்தைக் கண்ட பிறகு, மூன்றாவது நாளில் விற்பனையை கண்டு வருகின்றன.
அதன்படி, இன்றைய மதிய நேர நிலவரப்படி மும்பை பங்குச் சந்தை குறியீட்டெண் 371 புள்ளிகள் சரிந்து 79,992 புள்ளிகள் ஆகவும், தேசிய பங்குச் சந்தை குறியீட்டெண் நிஃப்டி 108 புள்ளிகள் சரிவில் 24,358 ஆக வர்த்தகமாகிறது. இன்றைய ஆரம்ப நேரத்திலேயே நிஃப்டி 24,337 இன் இன்ட்ராடே குறைந்தபட்சத்தைத் தொட்டது. சென்செக்ஸ் 80,237 என்ற தொடங்கிய நிலையில், 79,981 இன் இன்ட்ராடே குறைந்தபட்சத்தைத் தொட்டது .

பங்குச் சந்தை நிபுணர்களின் கூற்றுப்படி, இந்தியப் பங்குச் சந்தை ஆனது உலகளாவிய ஸ்திரமின்மை, பரபரப்பான அமெரிக்கத் தேர்தல், அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவில் வட்டி விகித முடிவுகள், ஒட்டுமொத்த மத்திய கிழக்கு மோதல்களின் அச்சுறுத்தல், உள்நாட்டுப் பொருளாதார அழுத்தங்கள் மற்றும் பலவீனமான காலாண்டு போன்ற சவால்களை எதிர்கொள்வதாக கூறியுள்ளனர். இதுபோன்ற காரணிகள் பங்குச் சந்தையில் தொடர்ந்து பாதிப்பை ஏற்படுத்தும் என்றும் அவர்கள் தெரிவித்தனர்.
இன்று ஏன் இந்திய பங்குச் சந்தை வீழ்ச்சியடைந்துள்ளது?:இன்று இந்திய பங்குச் சந்தையை இழுத்துச் செல்வதற்கான காரணங்கள் குறித்து, SMC குளோபல் செக்யூரிட்டிஸின் இயக்குநரும் தலைமை நிர்வாக அதிகாரியுமான அஜய் கர்க் கூறுகையில், பங்குச் சந்தையின் கணிக்க முடியாத தன்மை சம்வத் 2080 இன் போது நிரூபிக்கப்பட்டது. எனவே சம்வத் 2081 தொடங்கும்போது எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் எனவும், சாத்தியமான உலகளாவிய ஸ்திரமின்மை, பரபரப்பாகப் போட்டியிடும் அமெரிக்கத் தேர்தல், அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவில் வட்டி விகித முடிவுகள், ஒட்டுமொத்த மத்திய கிழக்கு மோதலின் அச்சுறுத்தல், உள்நாட்டுப் பொருளாதார அழுத்தங்கள் மற்றும் உள்நாட்டில் பலவீனமான காலாண்டு வருவாய் போன்ற பல சவால்கள் இந்தியப் பங்குச் சந்தையை பாதிக்கலாம் என்று கூறியுள்ளார்.
'செல் இந்தியா பை சைனா': சந்தையில் உள்ள 'செல் இந்தியா பை சைனா' கதையை சுட்டிக்காட்டி, எஸ்எம்சி குளோபல் செக்யூரிட்டிஸின் அஜய் கார்க் கூறுகையில், வெளிநாட்டு நிறுவன முதலீட்டாளர்கள் உலகளாவிய காரணிகளின் இந்திய பங்குச் சந்தையில் இருந்து விலகி வருவதாகவும், தற்போதைய சந்தை சரிவு கடந்த அக்டோபர் 2020 சந்தை வீழ்ச்சியை விட அதிகரிப்பதாகவும் கூறியுள்ளார். பெய்ஜிங்கின் சமீபத்திய கொள்கை முயற்சிகள் மற்றும் பணமதிப்பு நீக்கம், சீனப் பங்குச் சந்தையில் கணிசமான முதலீட்டாளர்களின் ஆர்வத்தை ஈர்த்து, கணிசமான ஏற்றத்தை பதிவு செய்வதாக கூறியுள்ளார்.
அமெரிக்க அதிபர் தேர்தல் தாக்கம்: 2024 அமெரிக்க அதிபர் தேர்தல்கள் நெருங்கி வருவதைச் சுட்டிக்காட்டி, லக்ஷ்மி ஸ்ரீ இன்வெஸ்ட்மென்ட் அண்ட் செக்யூரிட்டிஸின் ஆராய்ச்சித் தலைவர் அன்ஷுல் ஜெயின் கூறுகையில், நெருக்கமாகப் போராடிய அமெரிக்க அதிபர் தேர்தல் காரணமாக, உலகளாவிய வர்த்தகப் பொருட்களில் பெரும் நிச்சயமற்ற தன்மை நிலவுகிறது என்று கூறியுள்ளார். அதேபோல், நிஃப்டி 24,000 க்கு கீழே சரிவது இந்திய பங்குச் சந்தையில் புதிய விற்பனை அழுத்தத்தை காட்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.
இந்திய பங்குச்சந்தை அதிக மதிப்புள்ளதா?: சமீபத்திய இந்திய பங்குச் சந்தை ஏற்பட்டுள்ள மாற்றம் குறிப்பாக நிஃப்டி 50 மற்றும் சென்செக்ஸ், மற்ற வளர்ந்து வரும் சந்தைகளுடன் ஒப்பிடும்போது பாரம்பரியமாக பிரீமியம் மதிப்பீட்டில் வர்த்தகம் செய்யப்படுகிறது என்று SMC குளோபல் செக்யூரிட்டீஸ் நிபுணர் கூறினார்.
மேலும், பங்குச் சந்தை, சமீபத்திய அனைத்து நேர உயர்வு, சிறப்பான ஆர்டர் புத்தகங்கள் மற்றும் தற்போதைய திறன் விரிவாக்கம் காரணமாக சந்தையின் ஈர்ப்பு வலுவாக உள்ளதாகவும், உலகளாவிய பொருளாதார நிச்சயமற்ற தன்மைகள், அதிகரித்து வரும் பணவீக்கம், அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவில் வட்டி விகித முடிவுகள், ஒட்டுமொத்த மத்திய கிழக்கு மோதல்களின் அச்சுறுத்தல் மற்றும் வெளிநாட்டு நிறுவன முதலீட்டாளர்களின் வெளியேற்றங்களின் ஆபத்து ஆகியவை வருவாய் வளர்ச்சி குறைவாக இருந்தால் இது சந்தையில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று கூறியுள்ளார்.
More From GoodReturns

ஐடி நிறுவன பெண் ஊழியர்களே எச்சரிக்கை!! டிசிஎஸ் நாசிக் அலுவலக சம்பவம் கற்று தரும் பாடம் இது தான்!!

பதவி நீக்கம் செய்யப்படுகிறாரா டிரம்ப்? ஈரான் போரால் டிரம்புக்கு ஏற்பட்டுள்ள புது பிரச்சினை!!

அட்சய திருதியை நாளில் தங்கம் விலை எப்படி இருக்கும்? நகை வாங்குவோர் கவனிக்க வேண்டியது என்ன?

TCS ஊழியர்களுக்கு ஜாக்பாட்! IT லே ஆப் மத்தியில் சம்பளம் எகிறப்போகுது..செம ஹாப்பி தான்!

அமெரிக்காவின் தாக்குதலால் முகம் சிதைந்து போன கமேனியின் மகன்!! வெளியானது அதிர்ச்சி தகவல்!!

தங்கம் விலை மே 1ஆம் தேதிக்கு பிறகு கிடுகிடுனு உயர போகுது!! சிக்னல் கொடுத்துட்டாங்க!!

தங்கம் வாங்க இது நல்ல நேரமா? திங்கட்கிழமை அதிரப்போகும் விலை! நிபுணர்கள் சொல்லும் முக்கிய விஷயம்?

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

காருண்யா KR-749 முடிவுகள் வெளியானது : ரூ.1 கோடி வென்றது யார்?

அம்பானி ஏன் இவ்வளவு சம்பாதிக்கிறார் தெரியுமா? ரகசியத்தைஉடைத்த மம்மூட்டி! மெகா ஸ்டாரின் கமெண்ட்!

ரூ.10 கோடியை ரூ.100 கோடியாக மாற்றிய நடிகை மீனா..!! செம ஐடியாவா இருக்கே..!!



Click it and Unblock the Notifications