இன்றைய பங்குச் சந்தை குறியீடுகள் ஆரம்ப வர்த்தகத்தில் சரிவுடனே தொடங்கின. தொடர்ந்து சரிவுடன் வர்த்தகமான நிலையில், தற்போது திடீரென சென்செக்ஸ் 1,800 புள்ளிகளுக்கு மேல் சரிந்துள்ளது. அதேபோல், நிஃப்டி 25,250 க்கு கீழே சரிந்தது. அதிகரித்து வரும் மத்திய கிழக்கு மோதல்களுக்கு மத்தியில் முதலீட்டாளர்கள் அச்சம் காரணமாகவும், ஆசிய சந்தைகளில் ஏற்பட்ட இழப்புகளுக்கு சரிவு ஏற்பட்டுள்ளது.
மதியம் 2.30 மணியளவில் மும்பை பங்குச் சந்தை குறியீட்டெண் சென்செக்ஸ் 1,786 புள்ளிகள் 82,455.08 ஆக வர்த்தகமாகியும், நிஃப்டி 554 புள்ளிகள் சரிந்து 25,242 புள்ளிகளாக வர்த்தகமாகி வருகிறது.

பிஎஸ்இயில் அனைத்து பட்டியலிடப்பட்ட நிறுவனங்களின் சந்தை மூலதனம் ரூ.10.56 லட்சம் கோடி குறைந்து ரூ.464.3 லட்சம் கோடியாக உள்ளது.
இஸ்ரேல் மீது ஈரான் ஏவுகணைகளை ஏவிய பின்னர் மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள அச்சங்கள் குறித்த கவலைகளை அதிகரிக்க செய்துள்ளன. இந்த மோதல்கள் தொடர்ந்து தீவிரமடைந்தால் ஈரானில் இருந்து எண்ணெய் விநியோகம் தடைபடும் என்ற அச்சமும் ஏற்பட்டுள்ளது. இதற்கிடையில் தற்போது எண்ணெய் விலை உயர்ந்துள்ளது. அதேபோல், கச்சா எண்ணெய் நாட்டின் இறக்குமதிச் செலவுகள் கடுமையாக ஏற்பட்டுள்ளதால், எண்ணெய் விலை உயர்வு இந்தியா போன்ற பொருட்களின் இறக்குமதியாளர்களுக்கு பாதகமாக உள்ளது.
இதற்கிடையில், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், எச்டிஎஃப்சி வங்கி, ஐசிஐசிஐ வங்கி, எம்&எம், எல்&டி, மற்றும் பார்தி ஏர்டெல் ஆகியவை சென்செக்ஸை கீழே இழுத்துச் சென்ற முக்கிய பங்குகளாகும்.தே நேரத்தில் JSW ஸ்டீல் மற்றும் டாடா ஸ்டீல் மட்டுமே நல்ல ஏற்றத்தில் உள்ளன. அதேபோல், ஆரம்ப வர்த்தகத்தில் நிஃப்டி ஆயில் & கேஸ் குறியீடு 1.2%க்கு மேல் சரிந்தது.
ஹிந்துஸ்தான் பெட்ரோலியம், ஐஓசி மற்றும் ஜிஎஸ்பிஎல் ஆகியவை குறியீட்டில் முதலிடத்தில் உள்ளன. இதற்கிடையில், இந்தியா VIX 8.9% உயர்ந்து 13.06 ஆக இருந்தது.
முன்னதாக, இன்று காலை 9.34 மணியளவில் சென்செக்ஸ் 565 புள்ளிகள் சரிவில் 83,660 ஆக சரிந்துள்ளது. அதேபோல், நிஃப்டி 178 புள்ளிகள் சரிவில் 25618 ஆக சரிவுடன் வர்த்தகமானது.


Click it and Unblock the Notifications