மும்பை பங்கு சந்தைக் குறியீடான சென்செக்ஸ் 387 புள்ளிகள் உயர்ந்து வரலாறு காணாத 33,600 புள்ளிகளைத் தொட்டது. தேசிய பங்குச் சந்தை குறியீடான நிப்டியும் இன்று 10,450 புள்ளிகள் என்ற புதிய உச்சத்தினைத் தொட்டது.
உலகளவில் வணிகம் செய்வதற்கான சூழலில் இந்தியா 30 இடம் முன்னேறியுள்ளது என்ற உலக வங்கியின் அறிக்கை முடிவே இதற்கு முக்கியக் காரணமாகும்.
சாதகமான அம்சங்கள்
உள்நாட்டுச் சந்தையில் பங்குகளை வாங்குவது இன்று அதிகரித்துக் காணப்பட்டது, அதுமட்டுமில்லாமல் 8 முக்கியத் துறை பங்குகள் செப்டம்பர் மாதம் அசைந்த 5.2 சதவீத வளர்ச்சி மற்றும் எதிர்பார்த்த அளவினை விட இரண்டாம் காலாண்டில் அதிகம் லாபம் அளித்துள்ளது போன்ற காரணங்களால் புதிய உச்சத்தினைப் பங்கு சந்தை குறியீடுகள் பெற்றுள்ளன.
இன்றைய நிலை
இன்றைய பங்கு சந்தை முடியும் போது சென்செக்ஸ் 387.14 புள்ளிகள் அதாவது 1.17 சதவீத உயர்வு என 33,600.27 புள்ளிகள் உயர்வைச் சந்தித்துள்ளது. அதே நேரம் தேசிய பங்கு சந்தை குறியீடான நிப்டி 105.20 புள்ளிகள் என 10.2 சதவீதம் உயர்ந்து 10,440.50 புள்ளிகளாக வர்த்தகம் செய்யப்பட்டது.
துறை வாரியான அறிக்கை
ரியாலிட்டி துறை 3.66 சதவீதம், வங்கி துறை 2.08 சதவீதம், மெட்டல் துறை 1.9 சதவீதம், எப்எம்சிஜி துறை 1.39 சதவீதம் இன்று உயர்ந்த அதே நேரத்தில் நுகர்வோர் சாதனங்கள், ஐடிம் ஆட்டோமொபைல், ஹெல்த்கேர் உள்ளிட்ட துறைகள் நட்டத்தை அளித்துள்ளன.
லாபம் அடைந்தவர்கள்
பார்தி ஏர்டெல் (+ 7.51%), ஐசிஐசிஐ வங்கி (+ 4.88%), ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா (+ 4.09%), எச்டிஎப்சி (+ 3.01%) மற்றும் ஆக்ஸிஸ் வங்கியின் (+ 2.53%)
நட்டமடைந்தவர்கள்
டாக்டர் ரெட்டிஸ் (-2.26%), பவர் கிரிட் (-1.41%), டிசிஎஸ் (-1.08%), சன் பார்மா (-0.96%) மற்றும் ஏஷியன் பெயின்ட்ஸ் (-0.35%)


Click it and Unblock the Notifications