இந்திய பங்குச்சந்தைகளை பொறுத்தவரை ஐபிஓ-க்கள் வெளியீடு அண்மை காலமாக அதிகரித்துள்ளது. முதலீட்டாளர்களும் பெருமளவில் ஐபிஓக்களில் முதலீடு செய்து நல்ல வருமானத்தை பெறுகின்றனர்.
அந்த வகையில் இந்த வாரம் நான்கு ஐபிஓ-க்கள் வரிசை கட்டி நிற்கின்றன. அவை என்னென்ன? அவற்றில் முதலீடு செய்யலாமா என்பதை விரிவாக பார்க்கலாம்.

அபீஜே சுரேந்திரா பார்க் ஐபிஓ: அபீஜே சுரேந்திரா பார்க் நிறுவனம் சொகுசு தங்குமிடங்களுக்கு பெயர் போனது. தி பார்க் என்ற பெயரில் சொகுசு ஹோட்டல்களை நடத்தி வருகிறது. ஃப்ளரில் என்ற பெயரில் உணவு மற்றும் பானங்களை விற்கும் கடைகளையும் நடத்தி வருகிறது. வரும் 5ஆம் தேதி முதல் 7ஆம் தேதி வரை இந்த ஐபிஓ-விற்கு விண்ணப்பம் செய்யலாம்.
பிப்ரவரி 12ஆம் தேதி பங்குச்சந்தையில் லிஸ்டாகும் என சொல்லப்பட்டுள்ளது. ஒரு பங்கின் மதிப்பு ரூ.147 முதல் ரூ.155 வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஒரு லாட்டில் 96 பங்குகள் இருக்கும். சில்லறை முதலீட்டாளர்கள் ஒரு லாட்டிற்கு ரூ.14,880 செலுத்த வேண்டும்.
ராஷி பெரிபெரல்ஸ் ஐபிஓ: ராஷி பெரிபெரல்ஸ் நிறுவனம் 1989ஆம் ஆண்டு முதல் தொழில்நுட்ப சேவைகளை வழங்கி வருகிறது. ஐசிடி எனப்படும் தகவல் மற்றும் தகவல் தொடர்பு தொழில்நுட்ப சேவைகளுக்கு பெயர் போனது.
வரும் 7ஆம் தேதி தொடங்கி 9ஆம் தேதி வரை இதற்கு விண்ணப்பிக்கலாம். 14ஆம் தேதியன்று சந்தையில் பட்டியலிடப்பட உள்ளது. ஒரு பங்கின் மதிப்பு ரூ.295 – ரூ. 311 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஒரு லாட்டில் 48 பங்குகள் உள்ளன. சில்லறை முதலீட்டாளர்கள் ரூ.14,928 செலுத்தி ஒரு லாட்டை வாங்கலாம்.
ஜனா ஸ்மாஸ் ஃபைனான்ஸ் பேங்க் ஐபிஓ: ஜனா ஸ்மால் ஃபைனான்ஸ் பேங்க் சேமிப்பு கணக்கு, டெபாசிட், வீட்டுக் கடன்கள், வாகனக் கடன்கள், நகைக் கடன்கள், சிறு குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கான கடன்கள், வைப்பு நிதிக் கடன்கள், போன்ற பல்வேறு வங்கி சேவைகளை வழங்கி வருகிறது.
பிப்ரவரி 7-ம் தேதி இதன் ஐ.பி.ஓ பங்கு விற்பனை தொடங்கி பிப்ரவரி 9-ம் தேதி முடிவடைகிறது. ஒரு பங்கின் விலை ரூ.393 முதல் ரூ.414 வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஒரு லாட்டில் 36 பங்குகள் இருக்கும், ஒரு லாட்டின் விலை ரூ.14,904 ஆகும். ஐ.பி.ஓ-விற்கு முன்பாகவே பங்குகளை விற்பனை செய்து சுமார் 113.14 கோடி ரூபாய் முதலீடுகளை பெற்றுள்ளது ஜனா ஸ்மால் ஃபைனான்ஸ் பேங்க். பிப்ரவரி 14ஆம் தேதி இது சந்தையில் பட்டியலிடப்படுகிறது.
கேபிடல் ஸ்மால் ஃபைனான்ஸ் பேங்க் ஐபிஓ: கேபிடல் ஸ்மால் ஃபைனான்ஸ் பேங்க் கடந்த 2015ம் ஆண்டில் ஸ்மால் ஃபைனான்ஸ் பேங்க் உரிமத்தைப் பெற்ற முதல் என்பிஎஃப் சி ஆகும். இது நகர்ப்புற மற்றும் கிராமப்புறங்களில் வலுவான இருப்பைக் கொண்டுள்ளது. பல்வேறு வங்கிச்சேவைகளையும் வழங்குகிறது.
இந்த ஐபிஓவில் முதலீடு செய்ய வரும் 7ஆம் தேதி முதல் 9ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். 14ஆம் தேதி பங்குச்சந்தையில் இது பட்டியலிடப்படுகிறது. ஒரு பங்கின் விலை ரூ. 445 முதல் ரூ.468 வரை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. ஒரு லாட்டில் 32 பங்குகள் இருக்கும். இதன் விலை ரூ.14,976ஆகும். அடுத்தடுத்த ஐபிஓக்கள் வரிசை கட்டுவதால் முதலீட்டாளர்களுக்கு இது பிஸியான வாரமாக இருக்க போகிறது.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!

இந்தியாவுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த ஈரான்..!! 6 ஆண்டுகளில் இல்லாத முடிவினை எடுத்த மோடி அரசு..!!

தங்கம் விலை இன்று கோயம்புத்தூரில் அதிரடி ஏற்றம்..! நகைப்பிரியர்களுக்கு ஷாக்..!

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!

ஈரான் விவகாரத்தில் புதிய குண்டை தூக்கி போட்ட டிரம்ப்!! என்னென்ன சொல்றாரு பாருங்க!!



Click it and Unblock the Notifications