பங்குச்சந்தை முதலீட்டாளர்களே உஷார்.. கோவிட் வைரஸ் பரவுது, உங்க முதலீட்டின் நிலைமை என்ன..?

மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் குறியீடு இன்று வர்த்தக முடிவில் 358 புள்ளிகள் உயர்ந்து 70865.10 புள்ளிகளை எட்டியது. இதேபோல் நிஃப்டி குறியீடு 104.90 புள்ளிகள் உயர்வுடன் 21,255.05 புள்ளிகளை அடைந்தது. சென்செக்ஸ் குறியீட்டின் டாப் 30 நிறுவனங்கள் பட்டியலில் வெறும் 9 நிறுவனங்கள் மட்டுமே சரிவைச் சந்தித்தது.

இந்தியாவில் கொரோனா பாதிப்பு திடீரென அதிகரிக்கத் தொடங்கி இருக்கும் வேளையில் பங்குச்சந்தை முதலீட்டுக்குப் பாதிக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்தியப் பங்குச்சந்தை கொரோனா பாதிப்பால் மோசமான விளைவுகளை எதிர்கொண்டது மறக்க முடியாது.

பங்குச்சந்தை முதலீட்டாளர்களே உஷார்.. கோவிட் வைரஸ் பரவுது, உங்க முதலீட்டின் நிலைமை என்ன..?

இதனால் முதலீட்டாளர்கள் இந்தக் கொரோனா மூலம் எவ்விதமான பாதிப்புகள் வரும் என்பதை முன்கூட்டியே அறிந்துகொண்டு தக்க நடவடிக்கையை எடுக்க வேண்டும், இல்லையெனில் கொரோனா தொற்று மோசமாக வெடிக்கும் போது பெரும் இழப்பை எதிர்கொள்ள நேரிடும்.

இந்தியாவில் தற்போது கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. இதனால் பல்வேறு மாநிலங்களும் பொது இடங்களில் மாஸ்க் அணிவதைக் கட்டாயமாக்குவது தொடர்பாகவும் தீவிர ஆலோசனையில் இறங்கியுள்ளது.

ஜேஎன் 1 என்ற புது வகைக் கொரோனா காரணமாக இப்போது வைரஸ் பாதிப்பு அதிகரிக்கிறது. எங்கு இந்தப் புது வேரியண்ட் அடுத்த ஒரு புதிய அலையை ஏற்படுத்துமோ என்பதே அனைவரது அச்சமாக இருக்கிறது. இந்தியா முழுவதும் தற்போது 2,669 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுச் சிகிச்சை பெற்றும் வருகிறார்கள்.

கடந்த 24 மணி நேரத்தில் நாடு முழுவதும் மொத்தம் 358 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு, சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு உள்ளனர். கேரளாவில் இருந்து மட்டும் 300 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதியாகியுள்ளனர், இதேபோல் கேரளாவில் ஆறு பேர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளனர்.

இந்த நிலையில் புதன்கிழமை வர்த்தகத்தில் கொரோனா தொற்று அதிகரித்த காரணமாகவும், அமெரிக்காவில் மீண்டும் ரெசிஷன் அச்சம் தலைதூக்கும் காரணமாகவும் மும்பை பங்குச்சந்தை ஒரு சதவீதம் வரையில் சரிந்தது. ஆனால் இன்று சரிவில் இருந்து மீண்டு உயர்வுடன் சந்தை முடிந்துள்ளது.

கொரோனா தொற்றுக் காரணமாக முதலீட்டாளர்கள் அதிகம் பாதிக்கும் வர்த்தகப் பிரிவில் செய்த முதலீட்டை லாபத்துடன் முன்கூட்டியே விற்பனை செய்யும் சம்பவங்கள் அரங்கேறியது. இதன் வாயிலாகத் தான் புதன்கிழமை பங்குச்சந்தை வர்த்தகம் பாதித்தது எனச் சந்தை வல்லுனர்கள் கூறுகின்றனர்.

ஜேஎன் 1 என்ற புது வகைக் கொரோனா வைரஸ்-க்கு Pirola எனப் பெயரிடப்பட்டு உள்ளது, உலகச் சுகாதார மையம் ஜேஎன் 1 வைரஸ் மிகவும் குறைந்த ரிஸ்க் கொண்ட வைரஸ் என அறிவித்துள்ளது. ஆனாலும் மருத்துவ வல்லுனர்கள் மிகுந்த ஜாக்கிரதை உடன் இருக்க அறிவுறுத்தியுள்ளனர்.

2020ல் கொரோனா பாதிப்பால் பங்குச்சந்தை எந்த அளவுக்குப் பாதித்தது என யாராலும் மறக்க முடியாது, வெறும் 3 வருடத்தில் மீண்டும் தலைதூக்கியுள்ளது மக்களைப் பயமுறுத்துவதாக இருந்தாலும், உலகச் சுகாதார மையம் கொடுத்த ரிப்போர்ட், போதுமான மருத்துவப் பாதுகாப்பு ஆகியவை இருக்கும் காரணத்தால் இந்தத் தொற்று மூலம் பெரிய பாதிப்புகள் எதுவும் இருக்காது என நம்பப்படுகிறது.

ஆனால் இந்தக் கொரோனா தொற்று மூலம் நிறுவனத்தின் மதிப்பீட்டில் கரெக்ஷன் ஏற்பட அதிகமான வாய்ப்புகள் உள்ளது. இதனால் கொரோனா தொற்றுப் பாதிப்பு மோசமாகும் பட்சத்தில் ஸ்மால் கேப், மிட் கேப் பங்குகள் அதிகப்படியான விற்பனை எதிர்கொள்ள வாய்ப்பு உள்ளது என ஜியோஜிட் பைனான்சியல் சர்வீசஸ் நிறுவனத்தின் மூத்த அதிகாரி விகே.விஜய்குமார் தெரிவித்துள்ளார்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+