மும்பை பங்குச்சந்தை வாரத்தின் முதல் வர்த்தக நாளான இன்று காலை வர்த்தகம் துவக்கம் முதல் சிறப்பான வர்த்தக வளர்ச்சியை பதிவு செய்துள்ளது, இதன் மூலம் ஒரு நாள் வர்த்தகத்தில் இந்திய பங்குச்சந்தை முதலீட்டாளர்கள் சுமார் 2.32 லட்சம் கோடி ரூபாய் சம்பாதித்துள்ளனர்.
திங்கட்கிழமை வர்த்தக முடிவில் மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் குறியீடு 709.96 புள்ளிகள் உயர்ந்து 61,764.25 புள்ளிகளை எட்டியுள்ளது. சென்செக்ஸ் குறியீட்டின் டாப் 30 நிறுவனங்கள் பட்டியலில் இண்டஸ்இந்த் வங்கி பங்குகள் அதிகப்படியாக 4.92 சதவீதம் வரையில் உயர்ந்துள்ளது. இதோடு டாடா மோட்டார்ஸ், பஜாஜ் பைனான்ஸ், பஜாஜ் பின்சர்வ், ஹெச்சிஎல் டெக் அதிகப்படியான உயர்வை பதிவு செய்துள்ளது.

30 நிறுவனங்கள் பட்டியலில் நெஸ்லே, எல் அண்ட் டி, சன் பார்மா ஆகியவை அதிகப்படியான சரிவை பதிவு செய்துள்ளது. இதேபோல் நிஃப்டி குறியீடு 195.40 புள்ளிகள் உயர்ந்து 18,264.40 புள்ளிகளை எட்டியுள்ளது. நிஃப்டி துறை வாரியான குறியீட்டில் மீடியா மற்றும் பொத்துறை வங்கி துறையின் நிஃப்டி குறியீடு மட்டும் சரிவில் உள்ளது.
இன்றைய வர்த்தக முடிவில் சென்செக்ஸ் 61,764.25 புள்ளிகளை எட்டிய நிலையில், சந்தை மதிப்பீடு 276.10 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. இதேபோல் சென்செக்ஸ் டிசம்பர் 1 ஆம் தேதி தொட்ட வரலாற்று உச்ச அளவான 63,583 புள்ளிகளை தொட 1800 புள்ளிகள் மட்டுமே உள்ளது.

சில வெளிநாட்டு தரகு நிறுவனங்கள் இந்திய பங்குச்சந்தையை neutral அளவில் இருந்து bearish ரேட்டிங் கொடுத்துள்ள நிலையில் இன்று சென்செக்ஸ் குறியீடு கிட்டத்தட்ட 800 புள்ளிகள் வரையில் உயர்ந்துள்ளது. கடந்த வாரம் பேங்க் ஆப் அமெரிக்கா நிஃப்டி 18,000 புள்ளிகளை அடையும் போது லாபத்தை பெற்று பங்குகளை விற்பனை செய்யவும், 16000 புள்ளிகள் அளவை தொடும்போது முதலீடு செய்யவும் BofA செக்யூரிட்டீஸ் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.
டாலர் மதிப்பில் ஏற்பட்ட தடுமாற்றத்தை தொடர்ந்து வெளிநாட்டு முதலீட்டாளர்கள் இந்திய சந்தையில் அதிகளவில் முதலீடு செய்து வருகின்றனர். கடந்த 7 வர்த்தக நாளில் FII அமைப்புகள் சுமார் 11,700 கோடி ரூபாயை முதலீடு செய்துள்ளனர்.


Click it and Unblock the Notifications