அமெரிக்கா, தென் கொரியா, தைவான் பங்குசந்தைகள் மோசமான சரிவை பதிவு செய்திருக்கும் வேளையில் இந்திய பங்குச்சந்தைக்கு மிகப்பெரிய ஜாக்பாட் அடித்துள்ளது என்று தான் சொல்ல வேண்டும்.
இந்தியாவில் ஏஐ சார்ந்த முதலீடுகள் இல்லாத காரணத்தால் ஏஐ பபுள் வெடித்தாலும் இந்திய பங்குச்சந்தைக்கு எவ்விதமான பாதிப்படாது என பல முதலீட்டு வல்லுனர்கள் கூறியதற்கு இணைங்க இன்று உலகம் முழுவதும் ஏஐ, டேட்டா சென்டர், கிளவுட் சேவை நிறுவன பங்குகள் சரிந்தது மூலம் பல நாடுகளின் பங்குச்சந்தைகள் சரிந்தது.

ஆனால் இந்திய பங்குச்சந்தையில் 2வது நாளாக அதிரடியாக உயர்ந்து சென்செக்ஸ் 1718 புள்ளிகள் அதிகரித்து 81,028 புள்ளிகளை தொட்டு உள்ளது. இதேபோல் நிப்டி 50 குறியீடு 492.75 புள்ளிகள் உயர்ந்து 25000 புள்ளிகளை பல வாரங்களுக்கு பின்பு தொட்டு உள்ளது.
இந்த 2 நாள் வர்த்தகம் இந்திய பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு பெரும் லாபத்தை கொடுத்திருக்கும் வேளையில், வாரத்தின் கடைசி நாளான இன்று மற்றொரு சர்ப்ரைஸ் வந்துள்ளது.
நிஃப்டி குறியீடு இந்த வாரம் மட்டும் 8 சதவீதம் உயர்ந்து, ஜனவரி 2021க்கு பின்பு அதிகப்படியான வளர்ச்சியை பதிவு செய்துள்ளது. 2021 ஜனவரி மாதத்த்ல் நிஃப்டி 50 குறியீடு ஒரு வாரத்தில் 9.5 சதவீதம் உயர்ந்துள்ளது. நிஃப்டி 50 குறியீடு இந்த வருடம் அதிகப்படியாக ஏப்ரல் மாதத்தில் ஒரு வாரத்தில் சுமார் 5.89 சதவீதம் வரையில் உயர்ந்தது, இதன் பின் இந்த வாரம் தான் 8 சதவீதம் உயர்ந்து அதிரடி கிளப்பியது.
இந்த அதிரடி உயர்வின் மூலம் மும்பை பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்ட பங்குகளின் சந்தை மதிப்பு இந்த வாரத்தில் மட்டும் 20 லட்சம் கோடி ரூபாய் அதிகரித்து மொத்த சந்தை மதிப்பு 502 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.
2 நாட்களாக இந்திய பங்குச்சந்தைக்கும், சர்வதேச பங்குச்சந்தைக்கும் மத்தியில் நிலவும் வித்தியாசம் முதலீட்டு சந்தையில் மிகவும் கவனிக்க கூடியதாக மட்டும் அல்லாமல் இந்திய சந்தையை விட்டு வெளியேறிய FPI முதலீட்டாளர்களை மீண்டும் ஈர்க்கும் சூழ்நிலையை உருவாக்கியுள்ளது.
இந்த திடீர் மாற்றத்திற்கு முக்கியமான காரணம் அமெரிக்க நாடாளுமன்றத்தில் நடந்த அதிகார மாற்றம் தான், ஜனநாயக கட்சி ஏஐ தொழில்நுட்பத்தின் வளர்ச்சி மீது கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்க திட்டமிட்டு வருவதாகவும், சூப்பர் இன்டலிஜென்ஸ் உருவாக்கத்திற்கு தடை விதிக்கவும் திட்டமிட்டு வருவதாக தகவல் வெளியானதை தொடர்ந்து மொத்த முதலீட்டு சந்தையும் தலைகீழாக மாறியது.
இந்த மாற்றத்தில் இந்திய பங்குச்சந்தையும், இந்திய முதலீட்டாளர்களும் ஜாக்பாட் அடைந்துள்ளனர். ஏஐ துறைக்குள் இந்தியா நுழையாதது பெரும் பின்னடைவாக பார்க்கப்படும் வேளையில், இந்த பின்னடைவு தற்போது இந்திய பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு லாபம் அளிக்கும் விஷயமாக மாறியுள்ளது.


Click it and Unblock the Notifications
