10000 முதலீடு ஓராண்டில் 1.68 லட்சமாக மாறியது.. அள்ளி கொடுத்த ஜெய் பாலாஜி பங்குகள்..!!

கொல்கத்தா: சில நிறுவனங்கள் குறுகிய காலத்திலேயே முதலீட்டாளர்களுக்கு பெரிய லாபத்தை பெற்று தந்து விடுகின்றன. அந்த வகையில் ஓராண்டு காலத்தில் முதலீட்டாளர்களுக்கு லாபத்தை அள்ளித் தந்த ஒரு நிறுவனத்தின் பங்கு குறித்து தான் தற்போது விரிவாக பார்க்க இருக்கிறோம்.

கொல்கத்தாவை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வருகிறது ஜெய் பாலாஜி இண்டஸ்ட்ரீஸ் ( jai Balaji industries)நிறுவனம். கடந்த 1999 ஆம் ஆண்டு முதல் செயல்பட்டு வரும் இந்த நிறுவனம் இரும்பு மற்றும் எஃகு பொருட்களை தயாரித்து விநியோகம் செய்கிறது.

10000 முதலீடு ஓராண்டில் 1.68 லட்சமாக மாறியது.. அள்ளி கொடுத்த ஜெய் பாலாஜி பங்குகள்..!!

டிஎம்டி கம்பிகள், இரும்பு கம்பிகள் உள்ளிட்ட பல்வேறு பொருட்களை இந்த நிறுவனம் உற்பத்தி செய்கிறது. கடந்த ஓராண்டு காலத்தில் ஜெய் பாலாஜி இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் பங்கு 1600% உயர்வு கண்டுள்ளது. ஏப்ரல் 30ஆம் தேதி நிலவரப்படி நிறுவனத்தின் சந்தை மூலதனம் 16,819 கோடியாக உள்ளது.

ஜெய் பாலாஜி இண்டஸ்ட்ரீஸ் முதலீட்டாளர்களுக்கு பெரிய லாபத்தை ஈட்டி தந்துள்ளது அதாவது ஓராண்டுக்கு முன்பு இதில் ரூ.10,000 முதலீடு செய்தவர்களுக்கு தற்போது ரூ. 1. 68 லட்சமாக ரிட்டன்ஸ் கிடைத்துள்ளது . 2023 ஆம் ஆண்டு மே 2ஆம் தேதி இந்த நிறுவனத்தின் ஒரு பங்கின் விலை ரூ. 61 என்ற அளவில் இருந்தது. ஆனால் தற்போது இது ரூ. 1,027 என்ற அளவிற்கு உயர்ந்துள்ளது.

கடந்த ஜூலை மாதம் முதல் தான் இந்த நிறுவனத்தின் பங்குகள் பெருவாரியாகவே உயர தொடங்கியது. இதனை அடுத்து தொடர்ந்து எட்டு மாதங்களாக ஜெய் பாலாஜி இண்டஸ்ட்ரீஸ் நிறுவன பங்கு ஏறு முகத்திலேயே இருக்கிறது. இருப்பினும் அண்மையில் இந்த பங்கு மதிப்பானது திருத்தத்திற்கு உட்பட்டது. அதாவது இதன் 52 வார கால உச்சமாக ரூ.1,307 என இருந்தது. திருத்தத்துக்கு உட்பட்டு அதன் மதிப்பு 21% என்ற அளவுக்கு குறைந்தது.

கடந்த ஐந்து ஆண்டு காலத்தில் இந்த பங்கானது முதலீட்டாளர்களுக்கு 3,215% லாபத்தையும் பத்தாண்டு காலத்தில் 6,015% லாபத்தையும் பெற்று தந்துள்ளது என்பது மும்பை பங்குச்சந்தை இணையதளத்தில் உள்ள தகவல்கள் மூலம் தெரிய வருகிறது.

இந்த நிறுவனத்தின் பங்குகளில் கிட்டத்தட்ட 60% புரமோட்டர்கள் வசமே உள்ளன. வெளிநாட்டு நிறுவனங்கள் 30% பங்குகளையும், உள்நாட்டு நிறுவனங்கள் 0.07% பங்குகளையும் வைத்துள்ளன. சில்லறை முதலீட்டாளர்கள் இதில் 36.07% பங்குகளை வைத்துள்ளனர்.

இந்த நிறுவனத்தின் வருவாய் ஓராண்டு காலத்தில் 7% வளர்ந்துள்ளது. கடந்த 10 ஆண்டுகால தரவுகளை பார்க்கும்போது 2015 ஆம் நிதியாண்டு முதல் 2021ஆம் நிதியாண்டு வரை ஜெய் பாலாஜி இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் நஷ்டத்திலேயே இயங்கி வந்துள்ளது. 2022ஆம் ஆண்டு முதல் தான் இந்த நிறுவனம் லாபத்தை காணத் தொடங்கியது அதிலிருந்து தற்போது வரை நிறுவனத்தின் வருமானமும் லாபமும் படிப்படியாக உயர்ந்து வருகிறது.

Disclaimer: This article is strictly for informational purposes only. It is not a solicitation to buy, sell in precious metal products, commodities, securities or other financial instruments. Greynium Information Technologies Pvt Ltd, its subsidiaries, associates and the author of this article do not accept culpability for losses and/or damages arising based on information in this article.

Story written by: Devika

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+