இந்திய பங்குச்சந்தை மிகவும் முக்கியமான கட்டத்திற்குள் நுழைய உள்ளது என்பதை வெள்ளிக்கிழமை மாலை வர்த்தக நேர முடிவில் நடந்த பெரும் தடுமாற்றம் எல்லோருக்கும் உணர்த்தியது என்றால் மிகையில்லை, க்ளோசிங் அக்ஷன் செஷன் துவங்கும் முன்பு சென்செக்ஸ், நிஃப்டி உயர்வுடன் வர்த்தகமாகி வந்தது. ஆனால் 20 நிமிட F&O சந்தைக்கான விலை நிர்ணயம் செய்யும் Closing Auction Session துவங்கியதும் சென்செக்ஸ் குறியீடு 1000 புள்ளிகள் சரிந்து வெறும் 17 புள்ளிகள் சரிவுடன் முடிந்தது. இதேபோல் நிஃப்டியும் சரிவைச் சந்தித்து உயர்வுடன் முடிந்தது.
வெள்ளிக்கிழமை வர்த்தகம் சிறப்பாக இருந்தாலும் சரிவில் முடிந்தது முதலீட்டாளர்கள் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தியது. இந்த நிலையில் திங்கட்கிழமை வர்த்தகம் எப்படியிருக்கும் என்பது தான் தற்போது பலரின் கேள்வியாக உள்ளது.
இப்படி திங்கட்கிழமை வர்த்தக சந்தையைத் தீர்மானிக்கப்போவது 3 காரணிகள் உள்ளது.

முதல் விஷயம் கச்சா எண்ணெய் விலை வளைகுடா நாடுகளில் 2 முக்கிய வழித்தடமும் ஈரான் கட்டுப்பாட்டிற்குள் சென்றுள்ள நிலையில் சவுதி தற்போது ஒமான் நாட்டின் வழியாக கச்சா எண்ணெய் ஏற்றுமதியைத் துவங்கியுள்ளது. இதனால் இந்த வாரத் துவக்கத்தில் 110 டாலர் வரையில் உயர்த்த கச்சா எண்ணெய் 103 டாலர் வரையில் குறைந்துள்ளது, ஆனாலும் 100 டாலருக்குக் குறையவில்லை என்பது சந்தைவல்லுனர்களின் கேள்வியாக உள்ளது.
இதேவேளையில் அமெரிக்கா நாளை ஈரான் மற்றும் ஹவுதி படைகள் மீது பெரும் தாக்குதலை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படும் வேளையில் கச்சா எண்ணெய் விலையின் போக்கு நாளை பங்குச்சந்தையின் போக்கை தீர்மானிக்கும்.
அடுத்த முக்கியமான விஷயம் டிரம்ப் கையெழுத்திட்ட ரஷ்ய தடை மசோதா, வெள்ளிக்கிழமை டிரம்ப் 100 சதவீத வரி விதிக்கும் இந்த மசோதாவில் கையெழுத்திட்ட நிலையில் இந்தியா இதில் பெரும் பாதிப்பை எதிர்கொள்ளும் என கணிக்கப்பட்டு உள்ளது.
இந்த மசோதா மூலம் அமெரிக்கா ரஷ்யாவிடம் இருந்து அதிகமாகக் கச்சா எண்ணெய் மற்றும் எரிவாயு வாங்கும் நாடுகளின் பட்டியலைத் தயாரிக்கும். இந்த பட்டியலில் இருக்கும் டாப் 5 நாடுகள் மீது டிரம்ப் தலைமையிலான அரசு 100 சதவீதம் வரியை விதிக்கும் என்பதால் இந்தியா - அமெரிக்கா மத்தியிலான 85-90 பில்லியன் டாலர் மதிப்பிலான ஏற்றுமதி வர்த்தகம் எத்தகைய பாதிப்பை எதிர்கொள்ளும். இதன் தாக்கம் நாளை அமெரிக்காவுக்கு அதிகம் ஏற்றுமதி வர்த்தக பங்கீட்டைக் கொண்டு நிறுவனங்களில் பெரிய அளவில் எதிரொலிக்கும். இதனால் ஒவ்வொரு முதலீட்டாளரும் தங்களுடைய போர்ட்போலியோவை ஆய்வு செய்ய வேண்டிய நேரம் இது.
அடுத்தாக உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு முதலீட்டாளர்களின் ஆதரவு, மேலே குறிப்பிட்ட 2 விஷயமும் இந்தியாவின் வர்த்தகம், பொருளாதாரம், பணவீக்கத்தைப் பாதிக்கும் என்பதால் FII DII முதலீட்டாளர்களின் தலையீடு மிகவும் முக்கியமானதாக இருக்கப்போகிறது.
காரணம் இந்த வருடம் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் தொடர்ந்து முதலீட்டை வெளியேற்றி வரும் வேளையில் உள்நாட்டு முதலீட்டாளர்கள் இதை ஈடு செய்து வருகின்றனர். இதனால் நாளைய வர்த்தகத்தில் DII முதலீட்டாளர்கள் ஈடு செய்யாமல் இருந்தால் பெரும் பாதிப்பை எதிர்கொள்ள நேரிடும்.


Click it and Unblock the Notifications
